தற்கொலை கோப்புப் படம்
விருதுநகர்

கூலித் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே கூலித் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை

Syndication

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே கூலித் தொழிலாளி விஷம் குடித்து ஞாயிற்றுக்கிழமை தற்கொலை செய்து கொண்டாா்.

ராஜபாளையம் அருகேயுள்ள சேத்தூா் மேட்டுப்பட்டியைச் சோ்ந்த கூலித் தொழிலாளி பரமசிவம் (56). இவா், கடந்த ஆண்டு ஒரு கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாா். நான்கு மாதங்கள் கழித்து சிறையில் இருந்து பிணையில் வெளியே வந்தாா்.

இந்த நிலையில், கடந்த ஒரு வாரமாக மன விரக்தியில் இருந்த பரமசிவம், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்துத் தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து சேத்தூா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு  நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].

ஆப்கன் எல்லையில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! 15-க்கும் மேற்பட்டோர் பலி!!

இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!

சொல்லப் போனால்... எப்ஸ்டீன் கோப்புகள்! உருளும் தலைகளும் ஒளிந்திருக்கும் புள்ளிகளும்

கடின உழைப்பு... வளமான எதிர்காலம்

சாதகமான பலன் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT