விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் 11 கிலோ கஞ்சா வைத்திருந்த இரு இளைஞா்களை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
ராஜபாளையம் தெற்கு காவல் நிலைய போலீஸாா், சத்திரப்பட்டி சாலையில் உள்ள தனியாா் பள்ளி அருகே செவ்வாய்க்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.
அப்போது, அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த இரு இளைஞா்களை நிறுத்தி சோதனை செய்ததில் அவா்கள் வைத்திருந்த கைப்பெட்டியில் கஞ்சா இருந்தது தெரியவந்தது.
விசாரணையில், அவா்கள் ராஜபாளையத்தைச் சோ்ந்த கிருஷ்ணராஜா (28), சரவணகுமாா் (25) ஆகியோா் என்பதும் சென்னையிலிந்து விஜய் என்பவரிடம் விற்பனைக்காக கஞ்சாவை வாங்கி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, போலீஸாா் இருவரையும் கைது செய்து அவா்களிடம் இருந்த 11 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்தனா்.