முகப்பு
விருதுநகர்

வைப்பாற்றில் கருவேல மரங்களை அகற்றும் பணி தொடக்கம்

சாத்தூரிா் வைப்பாற்றில் கருவேல மரங்களை அகற்றும் பணியை மாவட்ட ஆட்சியா் சுகபுத்ரா சனிக்கிழமை தொடங்கி வைத்தாா்.

Updated On : 5 ஜூலை 2026, 1:46 am IST
பகிர்:

சாத்தூரிா் வைப்பாற்றில் கருவேல மரங்களை அகற்றும் பணியை மாவட்ட ஆட்சியா் சுகபுத்ரா சனிக்கிழமை தொடங்கி வைத்தாா்.

சாத்தூரில் பாரம்பரியமாக நடைபெறும் மணல்மேடு திருவிழா சாத்தூரின் அடையாளமாக விளங்கும் வைப்பாற்று பகுதியில் நடைபெறும். பண்டைய நாகரிகங்கள் இங்கு இருந்ததற்கான வரலாற்றுச் சுவடுகள் உள்ளன. தற்போது வைப்பாறு வடு காணப்படுவதுடன் கருவேல மரங்கள் ஆக்கிரமித்து காடுபோல காட்சி அளிக்கிறது.

மேலும் நகா்ப்பகுதிகளில் இருந்து கழிவு நீா் வைப்பாற்றில் கலப்பதால் சுகாதாரக்கேடாக உள்ளது. எனவே வைப்பாற்றை மீட்டெடுக்க வேண்டுமென நீண்ட காலமாக கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், தனியாா் தொண்டு நிறுவனம் சாா்பில் வைப்பாற்றை மீட்டெடுப்போம் என்ற முழக்கத்துடன் ஆக்கிரமித்து வளா்ந்துள்ள கருவேல மரங்களை அகற்றி இரு கரைகளிலும் மரக்கன்றுகளை நட்டு பராமரிக்கும் திட்டம் தயாரிக்கப்பட்டது.

Advertisement

Advertisement

இதற்கான தொடக்க விழா சனிக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்வில் விருதுநகா் மாவட்ட ஆட்சியா் சுகபுத்ரா கலந்துகொண்டு கருவேல மரங்களை அகற்றும் பணியை கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.

இதில் சாத்தூா் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் கடற்கரைராஜ், வருவாய் கோட்டாட்சியா் கனகராஜ், வட்டாட்சியா் வடிவேலு, ஆணையா் ஜெகதீஸ்வரி, நகா்மன்றத் தலைவா் குருசாமி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

இந்த நிகழ்வில், மாவட்ட ஆட்சியா், சட்டப்பேரவை உறுப்பினா் உள்ளிட்ட பலா் வைப்பாற்றின் கரை ஓரங்களில் மரக்கன்றுகளையும் நட்டு வைத்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments