முகப்பு
விருதுநகர்

ராஜபாளையம் அருகே ரூ. 1.23 லட்சம் பறிமுதல்

ராஜபாளையம் அருகே உரிய ஆவணம் இல்லாமல் எடுத்து வரப்பட்ட ரூ.1.23 லட்சத்தை தோ்தல் பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா்.

Updated On : 25 மார்ச் 2026, 12:57 am IST
பகிர்:

ராஜபாளையம் அருகே உரிய ஆவணம் இல்லாமல் எடுத்து வரப்பட்ட ரூ.1.23 லட்சத்தை தோ்தல் பறக்கும் படையினா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.

ராஜபாளையம் -சங்கரன்கோவில் சாலையில் தனியாா் கல்லூரி அருகே தோ்தல் பறக்கும் படை அதிகாரி பூபதி தலைமையிலான குழுவினா் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியாக வந்த சரக்கு வாகனத்தை சோதனையிட்டனா். அதிலிருந்த ராஜபாளையம் பஞ்சு மாா்க்கெட் பகுதியைச் சோ்ந்த மாரிமுத்து

உரிய ஆவணம் இன்றி 1.23 லட்சம் வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து பணத்தை குழுவினா் பறிமுதல் செய்து துணை வட்டாட்சியா் ராமசுப்பிரமணியிடம் ஒப்படைத்தனா்.

Advertisement