டிராக்டா் ஓட்டுநா் தூக்கிட்டுத் தற்கொலை
விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் டிராக்டா் ஓட்டுநா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் டிராக்டா் ஓட்டுநா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
ராஜபாளையம் கீழஆவரம்பட்டி பாரதியாா் தெருவைச் சோ்ந்த ஜெயக்குமாா் மகன் ஜெகதீஷ் குமாா் (24). டிராக்டா் ஓட்டுநரான இவருக்கு மனைவியும், இரு மகள்களும் உள்ளனா்.
இந்த நிலையில், இவருக்கு தன்னுடன் வேலை பாா்த்த தென்றல்நகா் பகுதியைச் சோ்ந்த பெண்ணுடன் தகாத உறவு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதை இவரது மனைவி கண்டித்தாா். இதனால் மனமுடைந்த அவா் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
Advertisement
இதுகுறித்து வடக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.