ஸ்பைவேர் என்பது ஒரு கணினிக்குள் நுழைந்து, கணினியில் இருந்து அல்லது அதனைப் பயன்படுத்துபவரிடமிருந்து தரவைச் சேகரித்து, அனுமதியின்றி மூன்றாம் தரப்பினருக்கு அனுப்புவதேயாகும்.
ஒரு கணினிக்குள் அத்துமீறி நுழைந்து பயனருக்குத் தெரியாமல், கணினியில் சேமிக்கப்பட்டிருக்கும் தகவல்களைத் திருடும் மால்வேரின் ஒரு வகைதான் ஸ்பைவேர்.
இது பல்வேறு வகையான தரவுகளைத் திருடுகிறது. அவற்றை, விளம்பர நிறுவனங்கள், தகவல்களை திரட்டும் நிறுவனங்கள், பணம் சம்பாதிக்க சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோருக்கு விற்கிறது.
இணையதளத்தில் பதிவாகியிருக்கும் விவரங்கள், கிரெடிட் கார்டு, வங்கிக் கணக்கு விவரங்கள், கணினியில் பதிவாகியிருக்கும் தகவல்கள் என எதை வேண்டுமானாலும் ஸ்பைவேர் மூலம் திருடலாம்.
சைபர் குற்றங்களிலேயே மிக அதிகமாக நடக்கும் குற்றமாக சைபர்வேர் தாக்குதல் இருக்கிறது. இதனைக் கண்டுபிடிப்பது கடினம். ஒரு கணினியில் நுழைந்துவிட்டால், அதன் நெட்வொர்க்கில் இருக்கும் கணினிகளுக்கும் ஆபத்து ஏற்படுத்தும்.
ஸ்பைவேர் விளம்பரதாரர்கள், தரவு சேகரிப்பு நிறுவனங்கள் அல்லது தீங்கிழைக்கும் நபர்களுக்கு லாபத்திற்காக அனுப்பும் தனிப்பட்ட மற்றும் முக்கியமான தகவல்களைச் சேகரிக்கிறது. இணைய பயன்பாடு, கிரெடிட் கார்டு மற்றும் வங்கிக் கணக்கு விவரங்கள் போன்ற பயனர் தரவைக் கண்காணிக்க, திருட மற்றும் விற்க அல்லது அவர்களின் அடையாளங்களை ஏமாற்ற பயனர் சான்றுகளைத் திருட தாக்குபவர்கள் இதைப் பயன்படுத்துகின்றனர்.
"ஸ்பைவேர்" என்ற சொல் முதன்முதலில் 1990களில் ஆன்லைன் குற்றங்களின்போது பதிவாகத் தொடங்கியது. ஆனால் 2000ஆவது ஆண்டுகளின் முற்பகுதியில் மட்டுமே சைபர் பாதுகாப்பு நிறுவனங்கள் தங்கள் பயனர் மற்றும் கணினி செயல்பாட்டை உளவு பார்த்த தேவையற்ற மென்பொருளை விவரிக்க ஸ்பைவேர் என்ற வார்த்தையைப் பெரிதும் பயன்படுத்தின. முதல் ஆன்டி-ஸ்பைவேர் மென்பொருள் 2000-ஆவது ஆண்டில் வெளியிடப்பட்டது, அப்படிப் பார்த்தால், சைபர் குற்றங்களில் ஸ்பைவேர் கிட்டத்தட்ட 35 ஆண்டுகள் பழமையானது.
ஸ்பைவேர் வகைகள்
ஸ்பைவேரைக் கொண்டு கணினி விவரங்களை சேகரிக்க முயலும் சைபர் குற்றவாளிகள், தங்களது தேவைக்கு ஏற்ப பல்வேறு வகையான ஸ்பைவேர்களைப் பயன்படுத்துகின்றனர்.
ஒவ்வொரு ஸ்பைவேர் வகையும் சைபர் மோசடியாளர்களுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டிருக்கும். இதில் சில ஆபத்தான ஸ்பைவேர் வகைகளும் உண்டு. அவை ஊடுருவிய கணினியில் மாற்றங்களையே செய்கின்றன.
பொதுவாகப் பயன்படுத்தப்படும் ஸ்பைவேர் வகைகளில் சில
விளம்பர ஸ்பைவேர்: இதற்குப் பெயரும் உண்டு. ஆட்வேர் என்ற ஸ்பேவர் மூலம், கணினியில் நுழைந்து, அது தேவையற்ற விளம்பரங்கள் மற்றும் பாப்-அப்களைக் கணினித் திரையில் காட்டும் வகையில் செயல்படும். இந்த ஆட்வேர் மூலம் கணினியில் விளம்பரங்கள் காட்டப்பட்டு, அதன் மூலம் மென்பொருளைத் தயாரித்தவருக்கு லாபம் கிடைக்கும்.
இன்ஃபோஸ்டீலர்: இந்த ஸ்பைவேர், கணினியில் இருக்கும் தகவல்களை மட்டுமல்லாமல், அதிலிருந்து செல்லும் தகவல்கள், உரையாடல்களையும் சேகரிக்கிறது.
கீ-லாகர்: இந்த கீலாகர் ஸ்பைவேரும் இன்ஃபோஸ்டீலரின் ஒரு வகைதான். கணினியில் தட்டச் செய்யப்படும் பாஸ்வேர்டு உள்ளிட்டவற்றை திருட, பயன்படுத்தப்படுவது கீ லாகர்ஸ்.
ரூட்கிட்: கணினி ஒன்றுக்குள், சைபர் மோசடியாளர்கள் நுழைய பாதுகாப்பு அம்சங்களில் பாதிப்பை ஏற்படுத்து, ஊடுருவ ஏதுவாக வழி செய்வதே ரூட்கிட். இது இயங்குதளத்தையே மாற்றியமைக்கிறது. ரூட்கிட்கள் பெரும்பாலும் கடினமானவை மற்றும் கண்டறிவது கூட சாத்தியமற்றது.
ரெட் ஷெல்: கணினியைப் பயன்படுத்துபவர் ஏதேனும் கேம்களை நிறுவும் போது இந்த ஸ்பைவேர் அதனுடன் ஒட்டிக்கொண்டு வந்துவிடும். ஒருபக்கம் ஆன்லைன் செயல்பாடுகளை கண்காணிக்கும், டெவலப்பர்களால் கேம்களை மேம்படுத்த, சந்தைப்படுத்தத் தேவையான தகவல்களை திருடி அனுப்பும்.
சிஸ்டம் மானிட்டர்: இது மிகவும் அச்சுறுத்தக்கூடியதாக உள்ளது. கணினியில் செய்யும் செயல்பாடுகளை கண்காணித்து, மின்னஞ்சல்கள், சமூக ஊடகங்கள் மற்றும் இணையதளங்கள், கீ பேர்டில் பதிவிட்டவை என அனைத்தையும் திருடுகிறது.
டிராக்கிங் குக்கீ: டிராக்கிங் குக்கீகள் ஒரு இணையதளம் மூலம் கணினியில் பரவவிட்டு, பின்னர் பயனரின் ஆன்லைன் செயல்பாட்டைப் பின்தொடர பயன்படுத்தப்படுகிறது.
ட்ரோஜன் ஹார்ஸ் - ஆன்லைன் கேம் போன்ற வெளியிலிருந்து பதிவிறக்கும் செயலிகளின் தோற்றத்தில் கணினிகளில் பதிவிறக்கம் ஆகும். இவை இயங்கும் புரோகிராம் மட்டுமல்லாமல் கோப்புகளுடன் இணைந்தும் கணினிகளுக்குள் ஊடுருவும்.
ஸ்பைவேர் என்ன செய்கிறது?
அனைத்து வகையான ஸ்பைவேர்களும் ஒரு பயனரின் கணினி அல்லது செல்போனில் இருந்து, அவர்களின் செயல்பாடு, பார்வையிடும் தளங்கள், சேகரிக்கும் அல்லது பகிரும் தரவுகளை உளவு பார்க்கின்றன.
ஸ்பைவேர் பொதுவாக ஒரு கருவியில், நிறுவப்படுவதிலிருந்து அது திருடிய தகவலை அனுப்புவது அல்லது விற்பனை செய்வது வரை மூன்று-படி செயல்முறையைப் பின்பற்றுகிறது.
முதல் படிநிலை 1—ஊடுருவல்
ஸ்பைவேர் பயனரை ஏமாற்றி கணினிக்குள் ஊடுருவுகிறது.
இரண்டாம் படிநிலை கண்காணித்து தரவுகளை திருடுவது
கணினியில், பயனர் பயன்படுத்தும் தரவுகள், வங்கிக் கணக்கு விவரங்கள், பாஸ்வேர்டு என பல தகவல்களை திருடுகிறது.
மூன்றாம் படிநிலை - அனுப்புவது /விற்பனை
திருடிய தரவுகளை சைபர் மோசடியாளர்களே பயன்படுத்துவார்கள், அல்லது இதுபோன்று திருடிய தகவல்களை மூன்றாம் நபருக்கு விற்பனை செய்வது.
இவ்வாறு, ஒரு கணினியிலிருந்து தனி நபரின் பல்வேறு முக்கிய தகவல்கள், பான் எண், பொருளாதார விவரங்கள், பின் எண் உள்ளிட்டவற்றை திருடி மோசடியாளர்கள் பயன்படுத்துகிறார்கள்.
ஸ்பைவேரிலிருந்து தற்காத்துக் கொள்ளும் வழிகளைத் தொடர்ந்து பார்க்கலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.