பிரிட்டன் இளவரசர் ஹாரி மற்றும் மேகன் மார்கல் ஏஎன்ஐ
Webstories

அரச பதவிகளைத் துறக்கிறாரா பிரிட்டன் இளவரசர்?

அமெரிக்காவை தனது முதன்மை இருப்பிடமாக அறிவித்த பிரிட்டன் இளவரசர் ஹாரி

DIN

பிரிட்டன் இளவரசர் ஹாரி, அமெரிக்காவைத் தன்னுடைய முதன்மை இருப்பிடமாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். பிரிட்டன் அரசக் குடும்பத்திலிருந்து அவர் வெளியேறுவதன் ஆரம்பகட்டமாக இது கருதப்படுகிறது.

பிரிட்டன் இளவரசரும் ‘சசெக்ஸ் டுயூக்’ பட்டத்தைத் தாங்கியவருமான ஹாரி, அமெரிக்காவை ’வழக்கமாக வசிக்கும் புதிய நாடு/மாநிலமாக’ குறிப்பிட்டுள்ளதாக பேஜ் சிக்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஹாரியின் நிறுவனமான டிராவலிஸ்ட் தாக்கல் செய்த ஆவணங்களில் இளவரசர் ஹாரி மற்றும் அவரது மனைவி மேகன் மார்கல் ஜுன் 29,2023 - பிரிட்டன் வீட்டில் இருந்து இணையர் வெளியேறியதற்கு முதல் நாளிலிருந்து அவர்களின் இருப்பிடம் மாறியதாக குறிப்பிட்டுள்ளது.

பிரிட்டன் குடியிருப்பைத் துறந்திருக்கும் ஹாரியின் ராஜ பட்டங்களின் நிலை குறித்த தெளிவின்மையே நீடிக்கிறது. இது குறித்து லண்டன் பயணத்தின்போது அவர் விளக்கமளிக்கலாம் என பேஜ் சிக்ஸ் குறிப்பிட்டுள்ளது.

அமெரிக்காவில் வசித்து வந்தபோதும் பிரிட்டனை தனது வீடு என குறிப்பிட்டுவரும் ஹாரி பாதுகாப்பு காரணங்களுக்காக இடம்பெயர்ந்துள்ளதையும் முன்னர் குறிப்பிட்டுள்ளார்.

டிசம்பர் 2023-ல் குழந்தைகள் பாரம்பரியம் மற்றும் பாதுகாப்பை பிரிட்டன் மண்ணில் வளரும்போது உணர்வது முக்கியத்துவம் வாய்ந்தது என வலியுறுத்தினார்.

அமெரிக்காவில் குடியுரிமை பெறும் எண்ணமும் ஹாரிக்கு உண்டு என தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவரே தனது வாழ்க்கை பற்றி எழுதியுள்ள ‘ஸ்பேர்’ நூலில் போதை பொருள் எடுத்துக் கொண்டது பற்றி குறிப்பிட்டுள்ளது அமெரிக்காவில் குடியுரிமை பெறுவதை சிக்கலாக்கும். மேலும் குடியுரிமை பெற அவர் ராஜ பட்டங்களைத் துறக்க வேண்டியிருக்கும் எனவும் பேஜ் சிக்ஸ் குறிப்பிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கொணவட்டத்தில் இன்று ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ மருத்துவ முகாம்

ஆம்பூா், பெரியாங்குப்பத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்

இறுதிச்சுற்றில் சபலென்கா - அனிசிமோவா பலப்பரீட்சை

உற்பத்தித் துறையில் 15 ஆண்டுகள் காணாத வளா்ச்சி

ஹூண்டாய் விற்பனை 4% குறைவு

SCROLL FOR NEXT