முகப்பு
வார இதழ்கள்

360 டிகிரி

இந்திய காப்பிரைட் சட்டம் 1957-இல் நிறைவேற்றப்பட்டது. அதன்படி பதிவு செய்யப்பட்ட முதல் புத்தகம், முதல் குடியரசுத்

Updated On : 30 ஜனவரி, 2024 at 1:09 PM
பகிர்:

* இந்திய காப்பிரைட் சட்டம் 1957-இல் நிறைவேற்றப்பட்டது. அதன்படி பதிவு செய்யப்பட்ட முதல் புத்தகம், முதல் குடியரசுத் தலைவரான ராஜேந்திர பிரசாத்தின் சுயசரிதை.

* ஆப்பிரிக்காவில் உள்ள தஜீரா என்ற நதி கடலில் இருந்து தோன்றி ஏரியில் கலக்கிறது. 

-ஆர். மகாதேவன்

* நமக்கு ஞாயிறு விடுமுறை. கிரீஸ் நாட்டில் திங்கள், பாரசீகத்தில் செவ்வாய், சிரியாவில் புதன், எகிப்தில் வியாழன், ஐக்கிய அரபு நாடுகளில் வெள்ளி, இஸ்ரேலில் சனி வார விடுமுறை நாளாகும்.
-ஆர். ஜெயலட்சுமி

முதல் தங்கம்
* தமிழகத்தில் முதன் முதலில், 1890-ஆம் ஆண்டு நீலகிரி மாவட்டத்தில் "வைநாடு' என்னும் ஊரில்தான் தங்கம் வெட்டியெடுக்கப்பட்டது.
- கூ. முத்துலெட்சுமி

* செல்லிடப்பேசி விஷயத்தில் அதன் உபயோகத்தை கட்டுப்படுத்த முடியாத நிலை வந்துவிட்டது. மேலை நாடுகளில் அகாஸ்டிக் நியூரோமாஸ் என்ற மூளைக்கட்டியால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. காதின் பின்புறம் மூளைக்குள் உருவாகும் கட்டி இது. அதனால் செல்லிடப்பேசியைக் காதில் வைத்து பேசாமல் ஹெட்போன் வைத்து பயன்படுத்தும் பழக்கம் அங்கே அதிகரித்துள்ளது.

*  சர்க்கரை இல்லாத திராட்சை சாறு நீரிழிவு நோயை குணமாக்கும். 
* திராட்சை சாறுடன் கேரட் சாறு கலந்து சாப்பிட்டால் சிறுநீர் தாரையில் உண்டாகும் கல் கரைந்துவிடும். 

* தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் கேரட் ஜூஸ் குடித்தால் பால் அதிகம் சுரக்கும். குழந்தை பிறந்த பின்புதான் என்றில்லாமல் கர்ப்பமாக இருக்கும்போதே கேரட் ஜூஸ் குடிக்கத் தொடங்கலாம். இரும்புச்சத்து குறைவாக இருப்பவர்கள் தினமும் அருந்தலாம்.
-சரஸ்வதி பஞ்சு

* கேனரி தீவுகளில் விசில் அடிப்பதை கட்டாயப் பாடமாக்கி இருக்கின்றனர். இதன்படி 6-12 வயது குழந்தைகள் வாரத்தில் ஒருநாள் 30 நிமிடங்கள் வரை "சீட்டி'அடிக்க பயிற்சி எடுக்கின்றனர். பிறப்பு, இறப்பு, திருமணம், திருட்டு, கொலை, வழிப்பறி, ஆபத்து என்று எல்லாவற்றுக்கும் அங்கே விதவிதமாக சீட்டி அடிக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.