புதியவர் ஏ.பாலசூர்யா இயக்கத்தில் வேணுசந்தர், ரிச்சாபலோட், மதுமிதா நடித்துள்ள படம் "நல்வரவு'. கூத்துக் கலைஞர்களைப் பற்றிய இந்தப் படத்தின் இறுதிக் கட்டப் பணிகளில் இருந்த இயக்குநரிடம் கேட்டபோது...
""ஹீரோவின் தந்தை ஒரு கிராமத்தில் கூத்துக் கட்டி பாடி வருபவர். கிராமங்களில் தொடர்ந்து கூத்துகள் நடைபெறாது. அந்த சமயங்களில் கூத்துக் கட்டுபவர்கள் வேறு வேலை செய்து பிழைப்பர். ஆனால் வேறு வேலை செய்ய விரும்பாத ஹீரோவின் தந்தை பிணங்களுக்கு முன்பு பாடத் தொடங்குகிறார். அவர் மறைவுக்குப் பிறகு அவருடைய மகனை பிணத்துக்கு முன்பு ஆடிப் பாட அழைக்கின்றனர் கிராமத்தார். ஆனால் "என் மகன் பிணங்களுக்கு முன் பாடுபவன் அல்ல; ஜனங்களுக்கு முன் பாடுபவன்' எனக் கூறுகிறார் தாய். ஊரார் மறுக்கவே, மகனை பட்டணத்துக்கு அனுப்பிவிட்டு தன்னுடைய கணவனுடைய தொழிலை மேற்கொள்கிறார் ஹீரோவின் தாய். பெரிய பாடகனாக வேண்டும் என்ற லட்சியத்துடன் முயற்சித்துக்கொண்டிருக்கும் ஹீரோ, ஒரு விபத்தில் வாய் பேச முடியாதவனாகிறான். இதையடுத்து நடக்கும் சம்பவங்களை சென்டிமெண்ட், காமெடி, ஆக்ஷன் கலந்து அழிந்து வரும் கூத்துக் கலையைப் பெருமைப்படுத்தியிருக்கிறோம். ஆத்திஷாவின் இசையில் அனைத்துப் பாடல்களும் சூப்பர் ஹிட் ஆகிக்கொண்டிருக்கின்றன. படமும் டைட்டிலுக்கு ஏற்ப நல் வரவைப் பெறும்'' என்றார் இயக்குநர் ஏ.பாலசூர்யா.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.