தினமணி கதிர்

மழைக்காலம் முதல் பனிக்காலம் வரை...

கதிர், துரை ஆகியோரிடம் உதவியாளராகப் பணியாற்றிய ரா.சிரில் இயக்கி வரும் புதிய படம் "பேசு'. இதில் புதுமுகம் ஜெ.விக்னேஷுடன் "லீலை' படத்தில் நடித்த விபா ஜோடி சேருகிறார். ""பேசு' பற்றி பேசுங்கள்'' என கேட்டப

மனோஜ் கிருஷ்ணா

கதிர், துரை ஆகியோரிடம் உதவியாளராகப் பணியாற்றிய ரா.சிரில் இயக்கி வரும் புதிய படம் "பேசு'. இதில் புதுமுகம் ஜெ.விக்னேஷுடன் "லீலை' படத்தில் நடித்த விபா ஜோடி சேருகிறார். ""பேசு' பற்றி பேசுங்கள்'' என கேட்டபோது...

  ""ஒரு மழைக்காலத்தில் தொடங்கி பனிக்காலத்தில் முடிவடைகிற எளிமையான காதல் கதை இது. பேசு என்பது தலைப்பாக இருந்தாலும் படத்தில் உள்ள கதாபாத்திரங்கள் அதிகமாகப் பேச மாட்டார்கள். வசனங்களும் வெகு குறைவாகவே இருக்கும். வசன உபயம் -எஸ்.ராமகிருஷ்ணன். இந்தப் படத்துக்காக "என் பேர், என் தேவதை ஒரு முறை...' என்ற பாடல் காட்சியை வித்தியாசமான ஒளியமைப்பில், அதாவது கண்ணைப் பறிக்கும் விளக்குகளைப் பயன்படுத்தாமல் வெறும் மெழுகுவர்த்தி வெளிச்சத்திலேயே படமாக்கியிருக்கிறோம். கவிஞர் அறிவுமதியின் மகன் ராசாமதி இந்தப் பாடல் காட்சியை ஹாலிவுட் தரத்துக்கு இணையாக ஒளிப்பதிவு செய்திருக்கிறார். யுவன்ஷங்கர்ராஜாவின் இசையில் அனைத்துப் பாடல்களும் இளைஞர்களின் செல்ஃபோன்களில் "ரிங் டோன்'களாக ஒலிக்கும்'' என்றார் இயக்குநர் ரா.சிரில்.

பாலாவுடன் யுவன்

  "நான் கடவுள்' படத்தையடுத்து சகோதரர்களைப் பற்றிய ஒரு கதையைப் படமாக்குகிறார் பாலா. இதில் ஜீவா, ரமேஷ் ஆகியோர் கதாநாயகர்களாக நடிப்பார்கள் எனக் கூறப்பட்டது. தொடர்ச்சியான படங்களால் ஜீவாவும் திடீர் வாய்ப்பால் ரமேஷும் பிஸியாகி விட, தற்போது அவர்கள் வேடத்தில் ஆர்யாவும் விஷாலும் நடிக்கிறார்கள். இந்தப் படத்தை விஷாலின் அண்ணன் விக்ரம் கிருஷ்ணா தயாரிக்கிறார். ""படம் தொடங்க மட்டுமே தாமதம் ஆகும். தொடங்கிய பிறகு, பாலாவின் மற்ற படங்களை விட விரைவாகப் படப்பிடிப்பு நடத்தி முடிக்கப்படும். "நந்தா' படத்துக்குப் பிறகு இதில் பாலாவுடன் மீண்டும் இணைகிறார் இசையமைப்பாளர் யுவன்ஷங்கர்ராஜா'' என்கிறது தயாரிப்பு வட்டாரம்.

முற்றிலும் பொழுதுபோக்கு!

  ரஜினிகாந்தின் மகள் செüந்தர்யா தயாரிக்க வெங்கட்பிரபு இயக்கி வரும் "கோவா' படத்துக்கு பலத்த எதிர்பார்ப்பு நிலவுகிறது. படப்பிடிப்பில் பிஸியாக இருந்த வெங்கட்பிரபுவிடம் பேசியபோது...

  ""இந்தியாவிலேயே சிறந்த சுற்றுலாத் தலம் கோவாதான். அங்குள்ள சுதந்திரம், வசதிகள், கடற்கரையில் உலா வரும் க்ளாமர் பெண்கள், வெளிநாட்டினர் என எல்லாமே அழகுதான். அதனால்தான் வெளிநாட்டிலிருந்து கூட அங்கு டூரிஸ்ட்டுகள் படையெடுக்கிறார்கள். அப்படிப்பட்ட கோவாவைப் பின்புலமாக வைத்து கதையை உருவாக்கியதால்தான் படத்துக்கு அந்த டைட்டில் வைத்திருக்கிறோம். படித்துவிட்டு, நல்ல வேலை கிடைத்து வாழ்க்கையில் நுழையக் காத்திருக்கும் நண்பர்கள், வாழ்க்கையில் இறங்கும் முன்பு ஒரு "ஜாலி ட்ரிப்' அடிக்க கோவா செல்கிறார்கள். அங்கு அவர்களுக்குள் நடக்கும் நட்பு, மோதல், காதல், பிரச்னைகள், தீர்வுகள் போன்றவற்றைச் சுவாரஸ்யமான திருப்பங்களுடன் சொல்லியிருக்கிறேன். கோவாவில் நடக்கும் நிகழ்ச்சிகள் மூலம் அவர்களே அவர்களை அடையாளம் காணுவதுதான் கதை. படம் முழுக்க காமெடி கொடிகட்டிப் பறக்கும். இது ஒரு முழு நீள ஜனரஞ்சகப் படம். 200 சதவீதம் எண்டர்டெய்னர்'' என்றார்.

எதிர்பாராதது!

  "இதுதான்டா போலீஸ்' படத்தின் மூலம் தமிழில் பரபரப்பு ஏற்படுத்திய டாக்டர் ராஜசேகர், "இதுதான்டா சட்டம்' படத்தின் மூலம் மீண்டும் பரபரப்பு ஏற்படுத்த வருகிறார். "நாயகுடு' என்ற பெயரில் தெலுங்கில் வெற்றியடைந்த படத்தைத் தமிழுக்கு ஏற்ப சில மாற்றங்களுடன் வெளியிடுகிறார்கள். தெலுங்கின் பிரபல கமர்ஷியல் இயக்குநர் கோடி ராமகிருஷ்ணா படத்தை இயக்கியிருக்கிறார். விதவைத் தாய், திருமண வயதில் தங்கை, போலீஸ் வேலைக்காக முயற்சி செய்யும் தம்பி, குடும்பக் கடமை, கடன் சுமை போன்றவற்றையெல்லாம் சமாளிக்க துபை செல்லத் திட்டமிடுகிறான் நாயகன். அவ்வாறு புறப்படும் நாயகன், சூழ்நிலை காரணமாக வழியில் ஒரு லாரியில் லிஃப்ட் கேட்டு ஏறிச் செல்கிறான். அதில் கடத்தல் பொருள் இருக்கவே கடத்தல்காரன் என்ற முத்திரையுடன் போலீசாரால் சிறைபிடிக்கப்படுகிறான். நேர்வழியில் செல்ல நினைத்தவன் போலீசாரின் துன்புறத்தல்களால் குறுக்கு வழியைத் தேர்ந்தெடுக்கிறான். இதையடுத்து நிகழும் சம்பவங்களை நமீதாவைக் கதாநாயகி ஆக்கி மேலும் சுவாரஸ்யப்படுத்தியிருக்கிறார் இயக்குநர். படத்தின் காட்சிகளில் நடிக்கும்போது குடும்பப் பாங்கான குத்துவிளக்காகவும் பாடல் காட்சிகளில் கண்ணைக் கவரும் அழகிய வண்ண விளக்காகவும் ஜொலித்திருக்கிறாராம் நமீதா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Sunil Gavaskar அறிவுரையைக் கேட்பாரா Abhishek Sharma? | T20 World Cup Review

மின்சாரத் தேவையைத் தொடர்ந்து நிலக்கரித் தேவை அதிகரிக்கும்!

விரைவில் Dragon 2? PR கொடுத்த Update! | Cinema Updates | Dinamani Talkies

இந்திய அணிக்கு இதுதான் சரியான பிளேயிங் லெவன் | T20 World Cup Review

தோ்தல் வந்துவிட்டால் பாஜக 'சோதனை' என்று சிபிஐயை பயன்படுத்தும்: கனிமொழி எம்.பி.

SCROLL FOR NEXT