தினமணி கதிர்

திரைக்கதிர்: உன்னால் முடியும் உலக நாயகா!

வெறுப்பேற்றும் "பஞ்ச்' டயலாக்குகள், அழகு காட்டும் கதாநாயகியர், திணிக்கப்பட்ட பாடல் காட்சிகள், இரட்டை அர்த்த வசனங்கள், தேச பக்தியை வியாபாரமாக்கும் வித்தை போன்ற எவையும் இல்லாமல் -படம் தொடங்கிய நிமிடத்தி

மனோஜ் கிருஷ்ணா

வெறுப்பேற்றும் "பஞ்ச்' டயலாக்குகள், அழகு காட்டும் கதாநாயகியர், திணிக்கப்பட்ட பாடல் காட்சிகள், இரட்டை அர்த்த வசனங்கள், தேச பக்தியை வியாபாரமாக்கும் வித்தை போன்ற எவையும் இல்லாமல் -படம் தொடங்கிய நிமிடத்திலிருந்து க்ளைமாக்ஸ் வரை விறுவிறுப்புடனும் "அட... அதற்குள் படம் முடிந்துவிட்டதே' என எண்ணத் தூண்டும் வகையிலும் செல்லுலாய்டில் சிறப்புற செதுக்கப்பட்ட "உன்னைப்போல் ஒருவன்' படத்துக்கு கமல்ஹாசன் 5 நாள்கள் மட்டுமே கால்ஷீட் கொடுத்து நடித்துள்ளார். "உன்னால் மட்டுமே முடியும் உலக நாயகா!'

கமர்ஷியல் பூங்கா!

பரவலான பாராட்டுகளைப் பெற்ற "வண்ணத்துப்பூச்சி' படத்தையடுத்து தான் இயக்கும் புதிய படத்துக்கு "ஜீவா பூங்கா' எனப் பெயரிட்டுள்ளார் அழகப்பன்.சி. "மாயாண்டி குடும்பத்தார்' படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய இயக்குநர் தருண்கோபி இதில் கதாநாயகனாக நடிக்கிறார். ""பல தரப்பிலும் பாராட்டுகள், சர்வதேச பட விழாக்களில் பங்கேற்பு என "வண்ணத்துப்பூச்சி' படத்துக்குச் சிறப்புகள் கிடைத்தாலும் வசூல்ரீதியாகப் படம் திருப்தியளிக்கவில்லை. அதனால் "ஜீவா பூங்கா' படத்தை முழுக்க முழுக்க கமர்ஷியலாக எடுக்கிறேன். கிராமத்திலும் நகரத்திலும் நடக்கும் வித்தியாசமான ஆக்ஷன் கதையாக இந்தப் படம் இருக்கும். கதாநாயகி தேர்வு நடைபெற்று வருகிறது'' என்கிறார் இயக்குநர் அழகப்பன்.சி.

இரக்கமில்லாத மணிரத்னம்!

"கந்தசாமி' படத்தை அடுத்து மணிரத்னம் இயக்கும் "ராவணன்' படத்தை ஆவலோடு விக்ரம் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார். மணிரத்னம் படத்தில் முதல்முறையாக நடிக்கும் அனுபவம் குறித்து கேட்டபோது...

""மணி சார் எப்போதுமே வித்தியாசமாக முயற்சி செய்பவர். அது அவருடைய ஸ்டைல். ஒவ்வொரு காட்சியும் அசாதாரணமானதாக, வழக்கமில்லாத ஒன்றாக இருக்க வேண்டும் என விரும்புபவர். அந்தப் படம் வெற்றி பெறலாம்; பெறாமல் போகலாம். அது இரண்டாம் பட்சம். ஆனால் அந்தப் படம் எல்லோருக்கும் நல்ல அனுபவமாக இருக்கும். அது மட்டும் உறுதி. பார்க்க அமைதியாகக் காட்சியளிக்கும் மணிரத்னம், காட்சிகளைப் படமாக்கும்போது ஒரு போருக்குத் தயாராகிற போர் வீரனைப் போல முனைப்பாக, துடிப்பாக, மூர்க்கமாக இருப்பார். தண்ணீர் நடுவில் நின்றாலும் சரி, நீர்வீழ்ச்சியின் கீழ் நின்றாலும் சரி... "நான் சொல்றபடி செய்' என்றுதான் சொல்வார். பயந்து முழி பிதுங்கி நின்றால் "இல்ல... நான் நினைச்சது இந்த மாதிரி முழியே இல்ல... இந்த சீன்ல இப்படி முழிக்கக் கூடாது; வேற மாதிரி இருக்கணும்' என்பார். அந்த அளவுக்கு தான் எடுக்க நினைக்கிறதை எடுக்கும் வரை துளிக்கூட இரக்கம் காட்ட மாட்டார். நான் சொல்வது உங்களுக்கு அதிகமாகக் கூட தோன்றலாம். படம் வந்ததும் பாருங்கள் உங்களுக்கே புரியும்'' என்றார் விக்ரம்.

நடிக்காவிட்டாலும் பரவாயில்லை!

"ராமன் தேடிய சீதை' படத்தில் தன்னுடைய நடிப்பால் நெகிழ வைத்த விமலா ராமனை அதன் பிறகு அதிகப் படங்களில் பார்க்க முடியவில்லை. ""நன்றாக நடித்தும் வாய்ப்புகள் வரவில்லையா?'' என்று கேட்டால்...

""பட வாய்ப்புகள் வந்தன. ஆனால் அவற்றில் நடிப்பை வெளிப்படுத்தக் கூடிய வாய்ப்பில்லை. படத்தில் நடிக்காவிட்டாலும் பரவாயில்லை; க்ளாமராக நடிக்கக் கூடாது என்பதால் அந்த வாய்ப்புகளை மறுத்துவிட்டேன். இப்போது தெலுங்கிலும் கன்னடத்திலும் பிஸியாக இருக்கிறேன்'' என்றவரிடம்... "தெலுங்கில் க்ளாமராக நடிப்பதாகத் தகவல்கள் வருகின்றனவே...' எனக் கேட்டால்... ""தெலுங்கில் தருண் நடிக்கும் ஒரு படத்தில் நீச்சல் உடையணிந்து நடிக்கிறேன். ஆனால் அதில் ஆபாசம் இருக்காது. தவிர, அது படத்தின் கதையோட்டத்துக்கு அவசியமான காட்சி என்பதால் அவ்வாறு நடிக்கச் சம்மதித்தேன்'' என்கிறார் விமலாராமன்.

அலர்ஜியில்லாத எனர்ஜி!

விக்ரமனின் உதவியாளர் கிருஷ்ணராம் இயக்கத்தில் ஷக்தி, ரம்யா நம்பீசன் நடித்து வரும் புதிய படம் "ஆட்ட நாயகன்'. படப்பிடிப்பை முடித்துவிட்டு படத்தொகுப்பு வேலைகளில் பிஸியாக இருந்த இயக்குநரிடம் "ஆட்ட நாயகன்' பற்றி கேட்டபோது...

""காதல் உணர்வு வாய்விட்டுச் சொல்லப்படுவதில்தான் வெற்றியடைகிறது. பாச உணர்வு சொல்லப்படாமல் இருப்பதில்தான் சுகப்படுகிறது. அம்மா-மகன் பாசம் வெளியில் தெரியலாம். ஆனால் அப்பா-மகன் பாசம் வெளியே தெரிவதில்லை. தன் பாசம் தெரிந்துகொண்டால் மகன் கெட்டுப்போய் விடுவான் என்று அப்பாக்கள் தம் பாசத்தைப் பூட்டி வைத்து அடை காப்பர்.

இந்தப் படத்தில் அப்பா மகனுக்குள் அடிக்கடி முரண்பாடு வரும். மகன் செய்வதெல்லாம் அப்பாவுக்குப் பிடிக்காது. ""நீ எனக்குப் பிள்ளையே இல்லை'' என அடிக்கடி சொல்லும் அப்பா, "அடுத்த ஜென்மம் என ஒன்று இருந்தால் உனக்கு நான் பிள்ளையா பிறக்கணும்டா'' என்கிறார்.

இந்த மாற்றம் எப்படி வந்தது என்பதை சுவைபடக் கூறுவதுதான் கதை. ரசிகர்களுக்குப் பிடிக்காத "அலர்ஜி' விஷயங்களை நீக்கிவிட்டு அவர்களுக்கு "எனர்ஜி' தரும் பல ஆரோக்கியமான விஷயங்களைப் படத்தில் தருகிறோம். இந்தப் படம், பல புதுமுக இயக்குநர்களுக்கு ஒரு நுழைவாயிலாக இருக்கும்'' என்றார் இயக்குநர் கிருஷ்ணராம்.

பரத்தை உலுக்கிய பயங்கரம்!

அடிக்கடி அயல்நாடு செல்லும் பரத், அண்மையில் அமெரிக்கா சென்று வந்துள்ளார். "அமெரிக்காவில் இப்படி.... அமெரிக்காவில் அப்படி... நாடு என்றால் அது அமெரிக்காதான்' என்ற ரீதியில் அயல்நாட்டுக்குக் கொடி பிடித்தவரிடம்... ""எல்லாம் சரி... அமெரிக்காவில் ஏதேனும் பயங்கர அனுபவம் ஏற்பட்டதா?'' என்று கேட்டபோது...

""என்னால் நம்பவும் முடியவில்லை; நம்பாமல் இருக்கவும் முடியவில்லை. எனக்கா இப்படி நடந்தது என இப்போது நினைத்தாலும் அதிர்ச்சிதான்... அது ஆனந்த அதிர்ச்சி! அங்கு ஹட்சன் என்ற ஆறு இருக்கிறது.

அங்கிருந்து ஒரு ஹெலிகாப்டர் சுற்றுலாப் பயணிகள் ஆறு பேருடன் உயரே பறந்து சென்று ஹட்சன் ஆற்றைச் சுற்றி வரும். இந்தச் சுற்றில் பல ஊர்கள், பல நகரங்களை மேலிருந்து பார்க்கலாம். இருபது நிமிடப் பயணத்தில் அமெரிக்காவையே "மினி ரவுண்டு' அடித்த மாதிரி இருக்கும். அந்த ஹெலிகாப்டரின் பெயர் லிபர்டி ஹெலிகாப்டர்.

அதில் ஏறி நான் சுற்றிப் பார்த்துவிட்டு காலை 10.45 மணிக்கு இறங்கிவிட்டேன். நான் இறங்கிய ஒரு மணி நேரத்தில் அதாவது 11.55 மணிக்கு அதே ஹெலிகாப்டரும் ஒரு ஃப்ளைட்டும் ஆகாயத்தில் நேருக்கு நேர் மோதியது. அந்த விபத்தில் 10 பேர் பலியாகினர். அதே ஹெலிகாப்டரில் அரை மணி நேரம் தாமதமாக நான் ஏறியிருந்தால்... நினைக்கவே நடுங்குகிறது; என்னை உலுக்கிய பயங்கர அனுபவம் அதுதான்'' என படபடத்தார் பரத்.

நயன்தாரா சினிமாவுக்கு முழுக்கு?

தமிழில் "ஆதவன்', மலையாளத்தில் "பாடிகாட்', தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆருடன் ஒரு படம் என மூன்று படங்களை மட்டுமே கைவசம் வைத்திருக்கிறார் நயன்தாரா. அதிலும் ஜூனியர் என்.டி.ஆருடனான படத்தில் க்ளாமராக நடிக்க மாட்டேன் என்று அந்தப் படத்தின் இயக்குநர் விநாயக்கிடம் கண்டிப்புடன் கூறியிருக்கிறார். புதிய படத்தில் நடிப்பதற்காக அவரைத் தொடர்பு கொண்டவர்களுக்கும் சரியான பதில் சொல்லவில்லை.

இதையடுத்து "நயன்தாரா சினிமாவுக்கு முழுக்கு; பிரபுதேவாவைத் திருமணம் செய்யப் போகிறார்' என்றெல்லாம் தகவல்கள் வெளிவந்தன. இதுகுறித்து விசாரித்தால்... ""நயன்தாரா அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் வரை பிஸி. நல்ல கதைகள் அமையாததால்தான் இப்போதைக்கு எந்தப் படத்தையும் ஒப்புக்கொள்ளவில்லை. மற்றபடி வேறு எந்தக் காரணமும் இல்லை'' என்றது நயன்தாரா தரப்பு.

பரத்தை உலுக்கிய பயங்கரம்!

அடிக்கடி அயல்நாடு செல்லும் பரத், அண்மையில் அமெரிக்கா சென்று வந்துள்ளார். அமெரிக்காவில் ஏதேனும் பயங்கர அனுபவம் ஏற்பட்டதா? என்று கேட்டபோது...

""என்னால் நம்பவும் முடியவில்லை; நம்பாமல் இருக்கவும் முடியவில்லை. எனக்கா இப்படி நடந்தது என இப்போது நினைத்தாலும் அதிர்ச்சிதான்... அது ஆனந்த அதிர்ச்சி! அங்கு ஹட்சன் என்ற ஆறு இருக்கிறது. அங்கிருந்து ஒரு ஹெலிகாப்டர் சுற்றுலாப் பயணிகள் ஆறு பேருடன் உயரே பறந்து சென்று ஹட்சன் ஆற்றைச் சுற்றி வரும். இந்தச் சுற்றில் பல ஊர்கள், பல நகரங்களை மேலிருந்து பார்க்கலாம். இருபது நிமிடப் பயணத்தில் அமெரிக்காவையே "மினி ரவுண்டு' அடித்த மாதிரி இருக்கும். அந்த ஹெலிகாப்டரின் பெயர் லிபர்டி ஹெலிகாப்டர். அதில் ஏறி நான் சுற்றிப் பார்த்துவிட்டு காலை 10.45 மணிக்கு இறங்கிவிட்டேன். நான் இறங்கிய ஒரு மணி நேரத்தில் அதாவது 11.55 மணிக்கு அதே ஹெலிகாப்டரும் ஒரு ஃப்ளைட்டும் ஆகாயத்தில் நேருக்கு நேர் மோதியது. அந்த விபத்தில் 10 பேர் பலியாகினர். அதே ஹெலிகாப்டரில் அரை மணி நேரம் தாமதமாக நான் ஏறியிருந்தால்... நினைக்கவே நடுங்குகிறது; என்னை உலுக்கிய பயங்கர அனுபவம் அதுதான்'' என படபடத்தார் பரத்.

அலர்ஜியில்லாத எனர்ஜி!

விக்ரமனின் உதவியாளர் கிருஷ்ணராம் இயக்கத்தில் ஷக்தி, ரம்யா நம்பீசன் நடித்து வரும் புதிய படம் "ஆட்ட நாயகன்'. படப்பிடிப்பை முடித்துவிட்டு படத்தொகுப்பு வேலைகளில் பிஸியாக இருந்த இயக்குநரிடம் "ஆட்ட நாயகன்' பற்றி கேட்டபோது...

""காதல் உணர்வு வாய்விட்டுச் சொல்லப்படுவதில்தான் வெற்றியடைகிறது. பாச உணர்வு சொல்லப்படாமல் இருப்பதில்தான் சுகப்படுகிறது. அம்மா-மகன் பாசம் வெளியில் தெரியலாம். ஆனால் அப்பா-மகன் பாசம் வெளியே தெரிவதில்லை. தன் பாசம் தெரிந்துகொண்டால் மகன் கெட்டுப்போய் விடுவான் என்று அப்பாக்கள் தம் பாசத்தைப் பூட்டி வைத்து அடை காப்பர். இந்தப் படத்தில் அப்பா மகனுக்குள் அடிக்கடி முரண்பாடு வரும். மகன் செய்வதெல்லாம் அப்பாவுக்குப் பிடிக்காது. ""நீ எனக்குப் பிள்ளையே இல்லை'' என அடிக்கடி சொல்லும் அப்பா, "அடுத்த ஜென்மம் என ஒன்று இருந்தால் உனக்கு நான் பிள்ளையா பிறக்கணும்டா'' என்கிறார். இந்த மாற்றம் எப்படி வந்தது என்பதை சுவைபடக் கூறுவதுதான் கதை. ரசிகர்களுக்குப் பிடிக்காத "அலர்ஜி' விஷயங்களை நீக்கிவிட்டு அவர்களுக்கு "எனர்ஜி' தரும் பல ஆரோக்கியமான விஷயங்களைப் படத்தில் தருகிறோம். இந்தப் படம், பல புதுமுக இயக்குநர்களுக்கு ஒரு நுழைவாயிலாக இருக்கும்'' என்றார் இயக்குநர் கிருஷ்ணராம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜம்மு - காஷ்மீர்: பாதுகாப்புப் படையின் ‘ஆபரேசன் த்ராஷியில்’ ஜெய்ஷ்-ஏ-முகமது தளபதி பலி!

”Vijay அரசியலுக்கு வருவது அவரின் ஜனநாயக உரிமை, ஆனால்..!” இயக்குநர் Raju Murugan!

Sunil Gavaskar அறிவுரையைக் கேட்பாரா Abhishek Sharma? | T20 World Cup Review

மின்சாரத் தேவையைத் தொடர்ந்து நிலக்கரித் தேவை அதிகரிக்கும்!

விரைவில் Dragon 2? PR கொடுத்த Update! | Cinema Updates | Dinamani Talkies

SCROLL FOR NEXT