தினமணி கதிர்

திரைக்கதிர்: ஆர்யா, இது யார்யா?

ஆர்யா, ஸ்ரேயா நடிக்கும் "சிக்கு புக்கு' படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா, சென்னை எக்ஸ்பிரஸ் அவென்யூவில் ரசிகர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இதில் பேசிய ஆர்யா, ""இதுவரை நான் நடித்து வெளிவந்த சினிமாக்களைவி

ஜி. அசோக்

ர்யா , ஸ்ரேயா நடிக்கும் "சிக்கு புக்கு' படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா, சென்னை எக்ஸ்பிரஸ் அவென்யூவில் ரசிகர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

இதில் பேசிய ஆர்யா, ""இதுவரை நான் நடித்து வெளிவந்த சினிமாக்களைவிட இதில் வித்தியாசமான ஆர்யாவைப் பார்க்கலாம். அட ஆர்யாவா இது என்று ஆச்சர்யமாக இருக்கும். என்னையே எனக்கு புத்துணர்ச்சி மிக்கவனாக காண்பித்து இருக்கிறார் ஒளிப்பதிவாளர் குருதேவ். என் சினிமா ஆசான் ஜீவாவின் உதவியாளர் மணிகண்டன் இயக்கத்தில் நடிப்பதைப் பெருமையாக நினைக்கிறேன். "நான் கடவுள்', "மதராசப்பட்டினம்' என ஒரு கலரில் நடித்து விட்டு, இதில் வேறு ஒரு கலரில் நடித்திருக்கிறேன். எல்லோருக்கும் இந்தக் கதை பிடிக்கும். லண்டனில் தொடங்கி காரைக்குடியில் முடியும் ஒரு காதல் பயணம்தான் இந்தப் படத்தின் கதை. லண்டன் தொடங்கி பல நாடுகள் மற்றும் கர்நாடகாவில் சிக்மகளூர், மந்தாளப்பட்டி,மடிக்கேரி உள்ளிட்ட பல இடங்களில் படப்பிடிப்பு நடந்துள்ளது. படப்பிடிப்புக்காக அதிக இடங்களுக்குச் சென்றிருக்கிறோம். நிறைய அனுபவங்கள் கிடைத்தன. இங்கு 4 மாடிகளில் நிறைந்திருக்கிற ரசிகர்கள் முன்னிலையில் ஆடியோ வெளியிடப்படுவதில் சந்தோஷம். நிறைய ரசிகர்கள் ஸ்ரேயாவை சைட் அடிப்பதற்காக இங்கு வந்துள்ளனர். நானும் அதற்குதான் வந்துள்ளேன்'' என்றார் ஆர்யா.

அம்மனுக்குக் கால்ஷீட் அப்புறம்தான்!

"அருந்ததீ' படத்தில் ஆவியை அழிக்கும் அம்மனாக நடித்தார் அனுஷ்கா. அதைத் தொடர்ந்து நாகார்ஜுனா தயாரிப்பில் தெலுங்கில் வெளிவந்த "பஞ்சாக்ஷரி' படத்திலும் அம்மனாக நடித்தார். இந்தப் படம் வரும் மாதம்  "பஞ்சமுகி' என்ற பெயரில் தமிழில் வெளிவருகிறது. தொடர்ந்து அம்மன் வேடங்களில் நடிப்பதன் காரணம் குறித்து அனுஷ்காவிடம் கேட்ட போது, ""பஞ்சமுகி'யில் பஞ்சாக்ஷரி, ஹனி என்ற இரட்டை வேடங்களில் நடிக்கிறேன். "அருந்ததீ'யின் வசூல் சமீபத்திய சினிமாக்களில் நல்ல வசூலைத் தந்து சாதனை புரிந்தது. "பஞ்சாக்ஷரி'யும் நல்ல வசூலைத் தந்து கொண்டிருக்கிறது. தொடர்ந்து அம்மன் வேடங்களில் நடிப்பதால் குறிப்பிட்ட ஒரு முத்திரை விழுந்துவிடும் என நினைக்கிறேன். அதனால் இனி அம்மன் வேடங்களில் நடிக்க வேண்டாம் என்ற முடிவு எடுத்திருக்கிறேன். இரண்டு முதல் மூன்று ஆண்டுகள் வரை இந்த முடிவு இருக்கும். அதன் பின் அம்மன் வேடங்களில் நடிப்பது குறித்து முடிவெடுப்பேன்'' என்றார்.

நீது.. படங்கள் லேது?

தமிழில் "யாவரும் நலம்', "தீராத விளையாட்டு பிள்ளை' படங்களில் ஹீரோயினாக நடித்த நீது சந்திரா. இப்போது அஜித்துடன் "மங்காத்தா' படத்தில் நடிக்கிறார். இதற்கிடையே போஜ்புரி படம் ஒன்றைத் தயாரித்து வருகிறார். நடிப்பதற்கு அதிக வாய்ப்பில்லாத காரணத்தால்தான் நீது சந்திரா படத் தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறார் என மும்பையில் செய்திகள் வெளியாகி வருகின்றன. இது பற்றி கேள்வி எழுப்பும் மீடியாக்களிடமும் நீது கோபமாக பேசி வருகிறார். ""என் சகோதரர் நிதின் சந்திரா இயக்கும் படம் என்பதால் அந்தப் படத்தைத் தயாரிக்கிறேன். இது தவிர, ஹிந்தி, தெலுங்கு, தமிழ் படங்களில் நடித்து வருகிறேன். வாய்ப்பில்லாததால் படம் தயாரிக்கிறேன் என்ற செய்தி வேடிக்கையாக இருக்கிறது. யார் இப்படித் தவறான செய்திகளைப் பரப்புகிறார்கள் எனத் தெரியவில்லை. மீடியா நண்பர்களிடம் நன்றாகப் பழகி வரும்போதுகூட இப்படி செய்தி வருவது வருத்தமாக இருக்கிறது'' என்றார்.

இத்தனை வருட சினிமா வாழ்க்கையில்..!

"இரண்டு முகம்', "கந்தா', "தம்பி வெட்டோத்தி சுந்தரம்', "சூரன்' ஆகிய படங்களில் நடித்து வருகிறார் கரண். ""இரண்டு முகம்' படப்பிடிப்பு முடிவடைந்து விட்டது. அரசியல்வாதியாக நடித்திருக்கிறேன். இத்தனை வருட சினிமா வாழ்க்கையில் நான் எதிர்பார்த்திருந்த ஒரு கேரக்டர் இப்போது கிடைத்திருக்கிறது.  படம் நன்றாக வந்திருக்கிறது. மற்றப் படங்களிலும் வித்தியாசமான கேரக்டர்கள் கிடைத்திருக்கின்றன. ஒரு பெரிய இயக்குநரின் படத்தில் நடிக்க  வாய்ப்பு வந்திருக்கிறது. ஆனால் அது பற்றி முறையான அறிவிப்பு வரும் வரை நான் பேசக் கூடாது. ஒரே மாதிரியான கதையாக வராமல் பார்த்துக் கொள்வதில் கவனமாக இருக்கிறேன். சில நேரம் சூழல்கள் நம் திட்டங்களை மாற்றி விடுவதும் உண்டு. முழு கதாநாயகனாக நடிக்கும் வாய்ப்புகள் தெலுங்கில் இப்போது வந்திருக்கின்றன. தமிழில் நிறையப் படங்களை முடிக்க வேண்டியிருப்பதால் தமிழில் மட்டுமே கவனம் செலுத்துகிறேன்'' என்றார் கரண்.

சந்தியா சென்டிமென்ட்!

வாஸ்து, சென்டிமெண்ட், நியூமராலஜி எனத் திரையுலகை சேர்ந்தவர்கள் அதிகமாக மூழ்கி விடுவார்கள். தமிழில் எதிர்பார்த்த வாய்ப்புகள் அமையாததால்  கன்னடம், தெலுங்கு, மலையாளம் என மற்ற மொழிகளில் நடித்து வருகிறார் சந்தியா. இவர் முதலில் வடபழனியில் உள்ள சொந்த வீட்டில் வசித்து வந்தார். பிறகு வளசரவாக்கத்திலுள்ள வாடகை வீட்டில்  

குடியேறினார். அந்த வீடு ராசியில்லை என்று தியாகராயர் நகருக்கு மாறினார். இப்போது அங்கும் ராசி ஒர்க் அவுட் ஆகாததால் மீண்டும் சொந்த வீட்டுக்கே சென்று விட்டார். மேற்கு மாம்பலத்தில் அவர் வாங்கியுள்ள புது வீட்டின் கட்டுமானப் பணிகள் நடக்கின்றன. வடபழனி சொந்த வீட்டில் இருந்து விரைவில் மேற்கு மாம்பலத்து வீட்டுக்குக் குடியேற உள்ளார். ""தமிழில் நல்ல வாய்ப்புகளுக்காகக் காத்திருக்கிறேன். மலையாளத்தில் சிறப்பான கேரக்டர்கள் கிடைப்பதால், அங்கு கவனம் செலுத்தி வருகிறேன். அறிமுகமான தமிழில் எனக்கு சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை என்பது குறித்து வருத்தம் இருக்கிறது'' என்றார்.

கிம் சர்மாவின் ஆப்ரிக்க காதலர்!

கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்குடன் இணைத்து கிசு கிசுக்கப்பட்டவர் ஹிந்தி நடிகை கிம் சர்மா. இருவரும் நெருங்கி பழகி வந்தனர். யுவராஜின் அம்மாவுக்கு இந்த காதல் பிடிக்கவில்லை. இதையடுத்து இவர்கள் பிரிந்தனர். இப்போது மீண்டும் காதல் வலையில் விழுந்திருக்கிறார் கிம் சர்மா. இந்த வலையை விரித்திருப்பது ஆப்ரிக்காவைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர். இருவரும் கடந்த சில மாதங்களாக காதலித்து வருகிறார்கள். விரைவில் இவர்களின் திருமணம் நடைபெறும் எனக் கூறப்படுகிறது. தமிழில் "சினம்' என்ற படத்தில் நடித்து வரும் கிம் சர்மா, ஹிந்தியிலும் ஒரு படத்தில் நடிக்கிறார். இப்படங்கள் முடிந்த பின்னர் திருமணம் நடக்கும் என கூறப்படுகிறது.

கவர்ச்சி ஒன்றுதான்.. கருத்து வேறு!

"ஜெமினி', "அன்பே சிவம்' உள்ளிட்ட படங்களில் நடித்தவர் கிரண். தமிழில் படங்கள் இல்லாததால் சொந்த ஊரான மும்பைக்கே சென்று விட்டார். இடையில் ஒரு சில படங்களில் ஒரு பாடலுக்கு ஆடி வந்தார். இந்நிலையில் "இது காதல் வரும் பருவம்'  படத்தின் மூலம் மீண்டும் தமிழுக்கு வந்திருக்கிறார். பள்ளி மாணவன், தன்னைவிட வயது அதிகமான கிரணை காதலிப்பது கதை. இந்தக் கதையில் முடிந்த அளவுக்கு கிளாமராக நடித்திருக்கிறாராம் கிரண். இந்நிலையில் இதே போன்ற கிளுகிளுப்பான காட்சி ஒன்றில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளாராம் கிரண். இந்தப் படத்தின் பெயர் "வாலிபமே வா'. பள்ளி மாணவனை கிரண் காதலிக்கிறார் என்பதுதான் கதையாம். ""ஒரே மாதிரியான கதை என்றாலும் சொல்லப்படும் கருத்து வெவ்வேறாக இருக்கும். கவர்ச்சியில் என்றைக்கும் கிரண் எல்லை மீற மாட்டார் என்கிறது'' கிரண் தரப்பு.

நந்திதாவின் அடுத்த பரபரப்பு!

 "அழகி', "கன்னத்தில் முத்தமிட்டால்' படங்களில் நடித்தவர் நந்திதா தாஸ். தீபா மேத்தாவின் "ஃபயர்' படத்தில் லெஸ்பியனாக நடித்து பரபரப்பை ஏற்படுத்தியவர். தீபாவின் அடுத்த படத்தில் படுக்கையறை காட்சியில் நடித்தார். நீண்ட இடைவெளிக்குப் பின் தீபா இயக்கும் "மிட் நைட் சில்ட்ரன்ஸ்' படத்தில் மீண்டும் நடிக்க உள்ளார். இது எழுத்தாளர் சல்மான் ருஷ்டி எழுதிய புத்தகத்தைத் தழுவி எடுக்கப்படுகிறது. அதனால் இதிலும் சர்ச்சைகளுக்குக் குறைவு இருக்காது எனப் பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையைப் பற்றிய படமாக இது உருவாகிறது. நந்திதா தாஸ் தவிர ஷபானா ஆஸ்மி, கங்கனா ரணவத், இர்பான் கான் ஆகியோரும் நடிக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Sunil Gavaskar அறிவுரையைக் கேட்பாரா Abhishek Sharma? | T20 World Cup Review

மின்சாரத் தேவையைத் தொடர்ந்து நிலக்கரித் தேவை அதிகரிக்கும்!

விரைவில் Dragon 2? PR கொடுத்த Update! | Cinema Updates | Dinamani Talkies

இந்திய அணிக்கு இதுதான் சரியான பிளேயிங் லெவன் | T20 World Cup Review

தோ்தல் வந்துவிட்டால் பாஜக 'சோதனை' என்று சிபிஐயை பயன்படுத்தும்: கனிமொழி எம்.பி.

SCROLL FOR NEXT