சேவை: அரிசி வாங்கப் பணம் தரும் பேரூராட்சி உறுப்பினர்!
கணவனை இழந்த பெண்களுக்கு உதவியாக, அவர்கள் மாதந்தோறும் ரேஷன் அரிசி வாங்குவதற்கு உதவும் வகையில், அரிசி வாங்கத் தேவையான பணத்தை நேரடியாக வழங்கக்கூடிய அற்புதமான சேவையை ஒருவர் செய்து வருகிறார். அதிலும் அவர்
கணவனை இழந்த பெண்களுக்கு உதவியாக, அவர்கள் மாதந்தோறும் ரேஷன் அரிசி வாங்குவதற்கு உதவும் வகையில், அரிசி வாங்கத் தேவையான பணத்தை நேரடியாக வழங்கக்கூடிய அற்புதமான சேவையை ஒருவர் செய்து வருகிறார். அதிலும் அவர் பேரூராட்சியின் உறுப்பினரும் கூட. ஆச்சரியமாக இருக்கிறதா? அவர் திருநெல்வேலி மாவட்டம், ஆலங்குளம் பேரூராட்சியில், முதல் வார்டு உறுப்பினராக இருக்கும் ம.பழனிசங்கர்.
இந்த திட்டம் பற்றி அவரிடம் கேட்டோம்.
""கணவனை இழந்த தாய்மார்கள், குழந்தைகளை வைத்துக்கொண்டு அவர்கள் படும் சிரமங்களை நான் நன்கு அறிவேன். அவர்களின் வீடுகளில் அன்றாடத் தேவைகளை நிறைவேற்ற அவர்கள் படும் சிரமங்கள் எண்ணில் அடங்காது. அவர்களுக்கு ஏதாவது செய்தாக வேண்டும் என்று கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பாகவே என் மனதில் தோன்றியதுதான் இந்தத் திட்டம். தற்போது அண்மையில் தான் இத்திட்டத்தை நிறைவேற்றியுள்ளேன்.
யாருக்கெல்லாம் உதவி செய்வீர்கள்?
தற் போது எனது வார்டு-1 பகு தி யில் உள்ள, கணவனை இழந்த ஏழை பெண்கள் 140 பேரை தேர்வு செய்து, அவர்களுக்கு முதல் கட்டமாகப் பணத்தை கொடுத்துள்ளேன். இவர்களுக்கு மாதந்தோறும் அவர்கள் பெறும் ரேஷன் அரிசிக்கான பணத்தைக் கொடுக்கிறேன்.
இதை எப்படி முறைப்படுத்துகிறீர்கள்?
பய னா ளிகளுக்கென்றே அனைத்து விபரங்களும் குறித்த அட்டவணை கொண்ட, அட்டை வழங்கப்பட்டுள்ளது. இதில் வருடம், மாதம், பெறும் தொகை, நகர செயலர், வார்டு செயலர், பயன்பெறுபவர் என அனைவருடைய கையொப்பமும் இடம்பெறும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. ஆதலால் இத்திட்டம் முறையாக , சிறப்பாக நடைபெற வசதியாக உள்ளது.
எதன் அடிப்படையில் இந்த உதவும் யோசனை உருவானது?
இல் லா த வர்களுக்கு இயன்றதைச் செய்வோம் என்ற அடிப்படையில்தான் இந்தத் திட்டம் உருவானது.
பொதுமக்கள் மத்தியில் இதற்கு வரவேற்பு உள்ளதா?
நிச்சயமாக உள்ளது. காரணம் ஒவ்வொரு மாதமும் 5 ம் தேதி அன்று காலை 10 மணி முதல் 2 மணி வரை பயன்பெறுபவர்கள் நேரடியாக வந்து பணத்தைப் பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இதனால் அவர்களுக்குத் தேவையில்லாத அலைச்சல் தவிர்க்கப்படுகிறது. சரியான நாளில், சரியான நேரத்தில் பணம் கொடுக்கப்பட்டு விடுவதால், அவர்களுக்கு ரேஷன் அரிசி வாங்குவதற்குப் பெரும் உதவியாக அமைந்து விடுகிறது. இதனால் இத்திட்டத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
இதற்காக எவ்வளவு செலவு செய்கிறீர்கள்?
இதற் காக தற் போது மாதந் தோறும் ரூ.4500 செல வி டுகிறேன். இதனை என் வாழ்நாள் முழுவதும் செய்யத் தயாராக உள்ளேன்.
வரக் கூடிய உள்ளாட்சி தேர்தலில் நீங்கள் வெற்றிபெற உதவியாக இருக்கும் எனக் கருதி இதைச் செயல்படுத்துவதாக எடுத்துக்கொள்ளலாமா?
கண் டிப் பாக இல்லை. தேர்தலில் வெற்றி, தோல்வி கருத்தில் கொண்டு இது செய்யப்படவில்லை. ஓர் ஆத்ம திருப்திக்காக செய்கிறேன். சில மாதங்கள் கழித்து, 5 வது மற்றும் 9 வது வார்டு பகுதிகளில் இத்திட்டத்தை நிறைவேற்ற ஏற்பாடுகள் செய்து வருகிறேன்.
5 மற்றும் 9 வது வார்டுகளை தேர்ந்தெடுக்க காரணம்?
அந்தப் பகு தி களில் தான் , தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்கள் இத்திட்டம் மூலம் அதிகளவில் பயன்பெறும் வாய்ப்பு உள்ளது. ஆதலால் 5 மற்றும் 9 வது வார்டு பகுதியைத் தேர்வு செய்து உள்ளேன். வரும் காலங்களில் தொடர்ந்து பல வார்டுகளுக்கு இத்திட்டத்தை விரிவடைய செய்வேன்.
இதன் மூலம் நீங்கள் அடைய வேண்டிய லட்சியமாக எதைக் கருதுகிறீர்கள்?
ஆலங்குளம் பகுதியில் மட்டும் வறுமைகோட்டுக்கு கீழ் உள்ளவர்கள் பட்டியலில் 1240 பேர் உள்ளனர். இவர்களில் சுமார் 800 பேருக்காவது, இத்திட்டம் மூலம் மாதந்தோறும் ரேஷன் அரிசி வாங்க பணம் வழங்க வேண்டும் என்ற லட்சியத்துடன் உள்ளேன். இந்த லட்சியம் நிறைவேறுவது கடவுளின் கையில் தான் உள்ளது.