முரண்சுவை-2: ஹிட்லரால் வளர்ந்த் கம்யூனிஸம்!
ரஷ்யாவின் சர்வாதிகாரி என்று பெயர் எடுத்த ஸ்டாலின் ரஷ்யர் அல்ல; ஒரு ஜார்ஜியன். பிரான்ஸ் தேசத்தின் சிம்மாசனத்தை அலங்கரித்த நெப்போலியன் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவர் அல்ல; கார்ஸிகாவைச் சேர்ந்தவர். அதேபோல்
தினமணி கதிர்முரண்சுவை-2: ஹிட்லரால் வளர்ந்த் கம்யூனிஸம்!
ரஷ்யாவின் சர்வாதிகாரி என்று பெயர் எடுத்த ஸ்டாலின் ரஷ்யர் அல்ல; ஒரு ஜார்ஜியன். பிரான்ஸ் தேசத்தின் சிம்மாசனத்தை அலங்கரித்த நெப்போலியன் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவர் அல்ல; கார்ஸிகாவைச் சேர்ந்தவர். அதேபோல்
ரஷ்யாவின் சர்வாதிகாரி என்று பெயர் எடுத்த ஸ்டாலின் ரஷ்யர் அல்ல; ஒரு ஜார்ஜியன். பிரான்ஸ் தேசத்தின் சிம்மாசனத்தை அலங்கரித்த நெப்போலியன் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவர் அல்ல; கார்ஸிகாவைச் சேர்ந்தவர். அதேபோல், ஜெர்மானிய சர்வாதிகாரி ஹிட்லர் ஜெர்மானியர் அல்ல. அவர் ஓர் ஆஸ்திரியர். எத்தனை முரண்கள் பாருங்கள்.
ஆஸ்திரியாவில் பிறந்ததால் ஜெர்மன் ராணுவத்தில் சேர முடியாமல் தவித்தவர்தான் ஹிட்லர். ஆனால் ஜெர்மனியை தன்னால்தான் காப்பாற்ற முடியும் என்று நினைத்ததோடு, ஜெர்மனியைக் காப்பாற்ற வந்த தேவ தூதனாக தன்னை உருவகப்படுத்திக் கொண்டார்.
ஜெர்மன் பொருளாதாரத்தின் ஆதாரமாக இருந்தவர்கள் யூத இனத்தைச் சேர்ந்த கோடீஸ்வரர்கள். ஒரே நாளில் அவர்களை எல்லாம் ஹிட்லரால் பிச்சைக்காரர்களாக மாற்ற முடிந்தது.
சினிமா வில்லன்கள் என்றால் எப்போதும் கையிலே கோப்பையும் வாயிலே புகையுமாக இருப்பார்கள். உலக வில்லனாகக் கருதப்பட்ட ஹிட்லர் சைவ உணவு உண்பவர். புகை பிடிக்க மாட்டார். மது அருந்த மாட்டார். பொது விருந்துகளில் தன்னுடைய பிறந்த நாளன்று மட்டும் தம் அதிகாரிகளுக்காக அவர்களுடன் சேர்ந்து ஷாம்பெய்ன் சாப்பிடுவார்.
ஹிட்லருக்குத் தன் தந்தை யார் என்று தெரியாது. ஹிட்லருக்கு அவருடைய அம்மா தான் தெரியும். தன் முன்னோர்களிடம் வேலை பார்த்த யூத குடும்பத்தைச் சேர்ந்த யாரோ ஒருவர்தான் தன் தந்தை என்பது ஹிட்லரின் சந்தேகம்.
எந்த யூத குலத்தை வேரோடு அழிக்க நினைத்தாரோ அதே யூத குலத்தைச் சேர்ந்தவர் தான் அவருக்குத் தந்தை என்பதே எதிர்மறையான சந்தேகம்தான்.
ரஷ்யாவைத் திசைத்திருப்ப வேண்டுமென்று திட்டமிட்ட ஹிட்லர் இங்கிலாந்தின் தலைநகரமான லண்டன் மீது 65 இரவுகள் குண்டு மழை பொழிந்தார். அதன் காரணமாகவே சர்ச்சில், ரூஸ்வெல்ட், ஸ்டாலின் கூட்டு உருவாகியது. அதன் காரணமாக ஜெர்மனி தோற்றது. ஒரு பிரச்னை எப்படி எதிர்பாராத வேறு ஒரு பிரச்னையாக வெடிக்கிறது கவனியுங்கள்.
ஜெர்மனியில் கம்யூனிஸ்ட்களை ஒழிக்க வேண்டும் என்று திட்டமிட்டு ஒழித்துக் கட்டினார் ஹிட்லர். ஆனால் ஹிட்லரால் துவக்கப்பட்ட இரண்டாவது உலகச் சண்டை முடிந்த பிறகு ஏகப்பட்ட நாடுகளில் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சிக்கு வந்தது.
ஹிட்லரால் உருவான இரண்டாம் உலகப் போர்தான் இந்தியச் சுதந்திரத்தையும் வேகப்படுத்தியது. கெடுதியிலும் ஒரூ நன்மை இருக்கத்தான் செய்கிறது.
ஹிட்லர் தன்னுடைய 12 வருட ஆட்சி காலத்தில் கொன்று குவித்த யூதர்களின் எண்ணிக்கை 65 லட்சம். உலகச் சண்டையை முடுக்கிவிட்டதே அவர்தான். தனிப்பட்ட ஒரு மனிதரின் குணத்தாலும் அதிகார வெறியாலும் கோடிக்கணக்கான மனிதர்களைக் கொல்ல முடியும் என்பதற்கு ஹிட்லர் ஓர் உதாரணம். இரண்டாவது உலகச் சண்டையில் இறந்தவர்களின் எண்ணிக்கை சுமார் 5 கோடி.
50 லட்சம் யூதர்களை அகதிகளாக்கி அலையவிட்டார். பிரிட்டன் ஒரு சமயம் சுமார் 40,000 ஜெர்மானிய யூதர்களை அகதிகளாக ஏற்றுக் கொண்டது. சுமார் 20,000 ஆஸ்திரிய அகதிகளும் இங்கிலாந்திற்குச் சென்றார்கள். அப்படிப் போன ஒரு குடும்பத்தில் பிறந்த பெண் தான் பின்னாளில் இங்கிலாந்தையே ஆண்ட மார்க்கரெட் தாட்சர். இது வரலாறு தரும் சுவாரஸ்யம்.
ஹிட்லருக்குத் தன்னுடைய 56வது பிறந்த நாளிலேயே அவருக்குத் தெரிந்து விட்டது, அடுத்த பிறந்த நாள் கொண்டாட்டம் இருக்காது என்பது.
பெர்லினுக்கு 100 கிலோமீட்டர் தூரத்தில் ரஷ்யப் படைகள் வந்து கொண்டிருக்கின்றன என்பதைக் கேள்விப்பட்டார். ஹிட்லருக்கு நூற்றுக்கணக்கான ஆடம்பர அறைகள் இருந்தன. அத்தனையையும் விட்டுவிட்டு பதுங்கு குழிக்குள் பதுங்கியிருக்க வேண்டியதானது.
தான் இறந்த பிறகு தன்னுடைய உடலின் சிறு பகுதிகூட ஸ்டாலினுக்குக் கிடைக்கக் கூடாது என்று முடிவு செய்த ஹிட்லர், "என்னை எரித்து விடுங்கள்' என்றார். ஹிட்லரின் உடலை எரிக்க 200 லிட்டர் பெட்ரோல் தேவைப்படும் என்று முடிவு செய்யப்பட்டது. சாம்ராஜ்ஜிய சக்ரவர்த்திக்கு 200 லிட்டர் பெட்ரோல் கிடைப்பதுதான் பெரிய விஷயமா என்று நினைக்கலாம். ஆனால்... சண்டை உச்சக்கட்டத்தில் இருந்ததால் பெட்ரோல் கிடைப்பது அரிதாக இருந்தது. பல பெட்ரோல் பங்குகளில் அலைந்து திரிந்து ராணுவத்தினர் சேகரித்தனர். கடைசியில் 195 லிட்டர் பெட்ரோல்தான் கிடைத்தது. பெட்ரோல் கிணறுகளுக்காகவே பல நாடுகளின் மீது படை எடுத்து வென்றவர் ஹிட்லர். அவருடைய உடலை எரிக்க போதுமான பெட்ரோல் கிடைக்கவில்லை. தேவையோ 200 லிட்டர். கிடைத்ததோ 195 லிட்டர்.
ஏப்ரல் 20ம் தேதி தான் ஹிட்லரின் பிறந்த நாள். தற்கொலை செய்து கொண்டது ஏப்ரல் 30ம் தேதி 1945ம் ஆண்டு. அந்த 10 நாட்கள் ஹிட்லரின் வாழ்க்கையில் மறக்க முடியாத வேதனையான, சோதனையான நாட்கள்.
எந்தத் துப்பாகியால் யூதர்களை ஹிட்லர் சுட்டாரோ, அதே துப்பாக்கியால் தன்னுடைய நெற்றிப் பொட்டில் வைத்து ஹிட்லர் சுட்டுக் கொண்டார். பிஸ்டலின் பெயர் பரீட்டா.
(தொடரும்)