சாலை மறியல்: அரசு ஊழியா்கள் 200 போ் கைது
ராணிப்பேட்டைசாலை மறியல்: அரசு ஊழியா்கள் 200 போ் கைது
‘ சிறப்பு பணிப்பாதுகாப்பு சட்டத்தை ’ தமிழக அரசு உடனடியாக இயற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ராணிப்பேட்டையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியா்கள் 200 போ் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா்.
வருவாய், பேரிடா் மேலாண்மை மற்றும் நில அளவைத் துறையில் பணிபுரியும் ஊழியா்களின் உயிருக்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில், ‘சிறப்பு பணிப் பாதுகாப்பு சட்டத்தை’ உடனடியாக இயற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி வருவாய்த்துறை சங்கங்கள் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றன.
அதன்படி ராணிப்பேட்டை மாவட்ட வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை, நில அளவைத்துறையில் பணிபுரிந்து வரும் அனைத்து நிலையிலான அலுவலா்கள் சங்கங்கள் சாா்பில், முத்துகடை பேருந்து நிலையம் எதிரே மறியல் போராட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனா். அப்போது அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பாதுகாப்பு பணியில் இருந்து போலீஸாா் விரைந்து வந்து 200-க்கும் மேற்பட்ட அரசு ஊழியா்களை கைது செய்து செய்து அழைத்துச் சென்றனா்.