கன்னடத்தில் பி.வாசு இயக்கத்தில் உருவான 'ஆப்தமித்ரா' தமிழில் ரஜினி நடிப்பில் 'சந்திரமுகி' என்ற பெயரில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆனது. தற்போது 'ஆப்தமித்ரா' படத்தின் இரண்டாம் பாகத்தை 'ஆப்தரக்ஷகா' என்ற பெயரில் கன்னடத்தில் இயக்கியுள்ளார் பி.வாசு. இது மறைந்த கன்னட நடிகர் விஷ்ணுவர்தனின் 200-வது படம். (கடைசிப் படம்) கன்னடப் பட உலகில் வசூலில் சாதனை படைத்து வருகிறது. இந்தப் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதையடுத்து இதே படத்தை மீண்டும் ரஜினியை வைத்து எடுக்க இயக்குநர் தரப்பு முயற்சி செய்து வருகிறது. இதற்காக 'ஆப்தரக்ஷகா' படம் ரஜினிக்கு பிரத்யேகமாகத் திரையிட்டுக்காட்டப்பட்டுள்ளது. ரஜினி நடித்தால் மட்டுமே இந்தப் படத்தைத் தமிழில் ரீமேக் செய்யும் முடிவில் இருக்கிறார் பி.வாசு. படத்துக்கு 'வேட்டையன்' என்ற தலைப்பு பரிசீலனையில் உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.