தினமணி கதிர்

திரைக்கதிர்: எல்லாருக்கும் திருப்புமுனை

நீண்ட இடைவெளிக்குப் பிறகு ராமராஜன் நடித்து வரும் "மேதை' படம் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. ஹரியின் உதவியாளர் என்.டி.ஜி.சரவணன் இந்தப் படத்தை இயக்கி வருகிறார். பாடல் வெளியீட்டு முயற்சியில் பரபரப்பாக இர

மனோஜ் கிருஷ்ணா

நீண்ட இடைவெளிக்குப் பிறகு ராமராஜன் நடித்து வரும் "மேதை' படம் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. ஹரியின் உதவியாளர் என்.டி.ஜி.சரவணன் இந்தப் படத்தை இயக்கி வருகிறார். பாடல் வெளியீட்டு முயற்சியில் பரபரப்பாக இருந்த இயக்குநரிடம் பேசியபோது...

""இது ராமராஜனுக்கு மட்டுமல்லாமல் படத்தில் உள்ள அனைவருக்கும் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தும் படம். ராமராஜனுக்கு ஆசிரியர் கதாபாத்திரம். அனைத்து தரப்பினரும் விரும்பிப் பார்க்கக்கூடிய ஒரு குடும்பக் கதை. "கரகாட்டக்காரன்' படத்தில் கவுண்டமணியின் காமெடியைப் போல இதில் வடிவேலுவின் காமெடி பெரிய அளவில் பேசப்படும். படத்தில் பாடல்களுக்கு அதிக முக்கியத்துவம் அளித்துள்ளோம். பொதுவாக ராமராஜன் படங்களில் பாடல்கள் சூப்பர் ஹிட் ஆகிவிடும். தினா இசையில் உருவான ஏழு பாடல்களை எஸ்.பி.பி., கே.ஜே.யேசுதாஸ், உன்னிமேனன், ஹாரிஸ் ராகவேந்தர், கார்த்திக், பெல்லிராஜ் ஆகியோருடன் சித்ரா, சின்மயி, சைந்தவி போன்றோர் பாடியுள்ளனர்'' என்றார்.

தாத்தாக்களின் கதை!

இயக்குநர் ஷங்கர் தயாரிப்பில் கே.பாலசந்தர், பாரதிராஜா ஆகியோர் முதல்முறையாக நடிக்கும் "ரெட்டச்சுழி' படம், கோலிவுட்டில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. படம் குறித்து இயக்குநர் தாமிராவிடம் பேசியபோது...

""கிராமங்களில் ரெட்டச்சுழிக்காரன் என்றால் பெரிய சேட்டைக்காரன் என்று பெயர். இந்தப் படத்தில் வரும் இரண்டு பெரியவர்களும் அப்படிப்பட்ட குணாதிசயம் கொண்டவர்கள். 60 வயதுக்கு மேல் ஆனால் மீண்டும் குழந்தைத்தனம் வந்துவிடும் என்பார்கள். அதுபோல, வயதாகியும் தம்முடைய வீம்பான போக்கால் குழந்தைத்தனமாக நடந்துகொள்ளும் இரண்டு தாத்தாக்களின் கதைதான் "ரெட்டச்சுழி'. இது முற்றிலும் குழந்தைகளுக்கான ஒரு மாறுபட்ட படம். கே.பாலசந்தரிடம் நான் பணியாற்றியிருந்ததால் அவரிடம் வேலை வாங்குவதில் பெரிய சிரமம் இல்லை. ஆனால் பாரதிராஜாவிடம் தயங்கித் தயங்கியே வேலை வாங்கினேன். இயக்குநர் இமயத்தையும் இயக்குநர்  சிகரத்தையும் நடிக்க வைத்ததை... அதிலும் ஷங்கர் தயாரிப்பில் நடிக்க வைத்ததை மிகப் பெரிய கெüரவமாகக் கருதுகிறேன்'' என்றார்.

இனியொரு பிறவியில்...

இயக்குநர் பி.வாசுவின் மகன் ஷக்தி, தான் நடித்து வரும் "ஆட்ட நாயகன்' படம், தனக்கு நட்சத்திர நாயகன் அந்தஸ்தைப் பெற்றுத் தரும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார். விக்ரமனின் உதவியாளர் கிருஷ்ணராம் படத்தை இயக்கியிருக்கிறார். இறுதிக்கட்டப் பணியில் இருந்த இயக்குநரிடம் பேசியபோது...

""மகனைத் திட்டிக்கொண்டே இருக்கும் ஒரு தந்தை, ""அடுத்த ஜென்மம் என ஒன்று இருந்தால் இவனே தன் மகனாகப் பிறக்க வேண்டும்'' என வேண்டுகிறார். அந்த மாற்றம் எப்படி நிகழ்ந்தது என்பதை சென்டிமெண்ட், காமெடி, ஆக்ஷன் கலந்து சொல்லியிருக்கிறோம். இந்தக் கேரக்டரில் நடிக்க ஸ்டார் நடிகராகவும் இருக்கக் கூடாது; அதே சமயம் புதிய முகமாகவும் இருக்கக் கூடாது என யோசித்து ஷக்தியைத் தேர்வு செய்தோம். இவரால் இப்படிக் கூட நடிக்க முடியுமா? என அனைவரையும் ஆச்சரியப்படுத்தியிருக்கிறார் ஷக்தி. என்னுடைய குருநாதரின் யதார்த்தமான பாணியில் இன்றைய சூழ்நிலைக்கேற்ப விறுவிறுப்பைக் கூட்டி படத்தை உருவாக்கியிருக்கிறேன்'' என்றார்.

எப்போதும் ரெடி!

தான் நடித்த "ஜக்குபாய்', "குட்டி' படங்கள் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறாததில் வருத்தத்தில் இருக்கிறார் ஸ்ரேயா. அவருடைய சமீபத்திய தெலுங்கு, ஹிந்திப் படங்களும் தோல்வியைத் தழுவியுள்ளன. தமிழில் ஆர்யாவுடன் நடிக்கும் "சிக்கு புக்கு' மட்டுமே கைவசம் உள்ளது. இந்நிலையில் ஜீவாவுடன் நடிக்கவிருக்கும் "ரெüத்ரம்' படத்திலிருந்து ஸ்ரேயா நீக்கப்பட்டுவிட்டார் என தகவல் வெளியானது. இதுபற்றி கேட்டால்...

""ரெüத்ரம் படத்திலிருந்து என்னை யாரும் நீக்கவில்லை. அந்தப் படம்

தள்ளிப் போயுள்ளது. அவ்வளவுதான். அந்தப் படத்தை எப்போது எடுத்தாலும் கால்ஷீட் தருவேன்'' என்கிறார் ஸ்ரேயா.

இன்னொரு ரீமேக்!

மலையாளத்தில் ஹிட் ஆன "பாடிகாட்' படத்தை இயக்குநர் சித்திக் தமிழிலும் ரீமேக் செய்கிறார். விஜய்}அஸின், வடிவேலு நடிக்கும் இந்தப் படத்தில் ராஜ்கிரண் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நடிக்க முன்னாள் முன்னணி நடிகைகள் சிலரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்தப் படத்துக்கு வித்யாசாகர் இசையமைக்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதுச்சேரி காங்கிரஸ் - பாஜக நிா்வாகிகள் மீது வழக்குப் பதிவு

பாகிஸ்தான் போதைப் பொருள் கடத்தல் கும்பலுடன் தொடா்பு: ராணுவ வீரா், பணிநீக்கப்பட்ட காவலா் உள்பட 6 போ் கைது

சித்தோட்டில் கிணற்றில் தவறி விழுந்த மூதாட்டி மீட்பு

பிரதமா் மோடி உரை: இஸ்ரேல் எதிா்க்கட்சியினா் புறக்கணிப்பு?

ரயிலில் பயணியிடம் மடிக்கணினி திருடியவா் கைது

SCROLL FOR NEXT