முரண்சுவை-35: அடிமைகளின் தலைவன்!
ரோமப் பேரரசில் மன்னர்களுக்கும், அரண்மனையிலுள்ள பெரும் புள்ளிகளுக்கும் பல பொழுது போக்குகள் உண்டு. அவற்றில் ஒன்று நன்றாக சண்டை போடத் தெரிந்த அடிமைகளை ஒருவரோடு ஒருவர் மோதவிட்டு வேடிக்கை பார்ப்பது. அப்படி
தினமணி கதிர்முரண்சுவை-35: அடிமைகளின் தலைவன்!
ரோமப் பேரரசில் மன்னர்களுக்கும், அரண்மனையிலுள்ள பெரும் புள்ளிகளுக்கும் பல பொழுது போக்குகள் உண்டு. அவற்றில் ஒன்று நன்றாக சண்டை போடத் தெரிந்த அடிமைகளை ஒருவரோடு ஒருவர் மோதவிட்டு வேடிக்கை பார்ப்பது. அப்படி
ரோமப் பேரரசில் மன்னர்களுக்கும், அரண்மனையிலுள்ள பெரும் புள்ளிகளுக்கும் பல பொழுது போக்குகள் உண்டு. அவற்றில் ஒன்று நன்றாக சண்டை போடத் தெரிந்த அடிமைகளை ஒருவரோடு ஒருவர் மோதவிட்டு வேடிக்கை பார்ப்பது. அப்படி நடந்த ஒரு சண்டையில் தோற்றுப் போன ஒருவீரன் தான் ஸ்பார்டகஸ். அவனைக் கொல்லாமல் விட்டுவிட்டான் ஓர் அடிமைப் போராளி. எனவே ஸ்பார்டகஸ் அடிமைகளை ரோமப் பேரரசிலிருந்து விடுவிப்பதையே தன்னுடைய லட்சியமாகவும் குறிக்கோளாகவும் கொண்டார்.
இயேசுநாதர் பிறப்பதற்கு எழுபது ஆண்டுகளுக்கு முன்பாக வாழ்ந்தவர் தான் ஸ்பார்டகஸ் என்ற புரட்சி வீரன். அடிமைகளின் விடுதலைக்காக போராடிய ஸ்பார்டகஸ், ரோமப் பேரரசை எதிர்த்து 19 வருடங்கள் போராடினார். இவரால் ஐந்து ராணுவ பிரிவுகளை ரோமப் பேரரசு இழந்தது. யார் இந்த ஸ்பார்டகஸ் அவனுடைய உருவம் என்ன என்பது கூடத் தெரியாமல் 19 வருடங்களாக ரோமப் பேரரசு தலையை பிய்த்துக் கொண்டது.
லென்டுலஸ் அரசாட்சியின் கீழ், அடிமைப் போராளியாக வைக்கப்படிருந்த ஸ்பார்டகஸ், தன்னுடன் சிறை வைக்கப்பட்டிருந்த முப்பது அடிமைகளுடன் அடிமைக் கொட்டடியிலிருந்து தப்பி, ரோமானிய ஆட்சிக்கு எதிராக ஆயுதம் எடுத்தார்.
ரோமானியத் தளபதிகளை போர்க்களத்தில் தோற்கடித்தார். இப்போர்களில் ஸ்பார்டகஸ் மிகவும் உக்கிரமாகப் போரிட்டார். ஆகவே அவருக்கு எதிராக கிராஸஸ் அனுப்பப்பட்டார். பயங்கரமாக நடந்த அந்தப் போரின் இறுதியில் அடிமைப் போராளிகள் தோற்கடிக்கப்பட்டனர். இப்போரில் ஸ்பார்டகஸ் காலில் வெட்டுக் காயம் பட்ட போதிலும், முழங்காலால் நகர்ந்தே தீவிரமாகப் போரிட்டார்.
ஒரு கையில் கேடயத்தால் எதிரியின் தாக்குதலை எதிர்கொண்ட அதே சமயம், மறு கையால் வாளை வீசினார். இறுதியாக அவர் சாய்ந்தபோது, மண்ணில் சாயவில்லை. ரோமானியர்களுக்கு மத்தியில் சாய்ந்தார். கி.மு.71-ல் நடந்த இந்தச் சண்டையால் 40,000 கலகக்காரர்கள் கொல்லப்பட்டனர். ஸ்பார்டகஸின் விடுதலைப் போராட்டமே மனித குலத்தின் முதல் விடுதலை போராட்டமாக வரலாற்று ஆசிரியர்களால் கருதப்படுகிறது.
பலவிதமான போர்த் தந்திரங்களில் ரோமப் பேரரசை எதிர்த்து போரிட்டார். இருப்பினும் வலுவான ரோமப் பேரரசு ஸ்பார்டகûஸ 6000 அடிமைகளுடன் கைது செய்தது. இந்தக் கூட்டத்தில் யாரோ ஒருவர் தான் ஸ்பார்டகஸ் என்பது படைத்தளபதிக்குத் தெரிந்தது. ஆனால் யார் என்பது தான் தெரியவில்லை. எனவே கூட்டத்தினரைப் பார்த்து, இந்த கூட்டத்தில் ஸ்பார்டகஸ் இருந்தால் சரணடைந்து விட வேண்டும். இல்லை என்றால் எல்லோரையும் சிலுவையில் அறைந்து கொன்றுவிடுவோம் என்று மிரட்டினான். அதற்கு பதில் கூறும் விதமாக ஒவ்வொருவரும் தன்னை ஸ்பார்டகஸ், ஸ்பார்டகஸ் என்று கூச்சலிட்டார்கள். அதைப் பார்த்து கோபமடைந்த படைத்தளபதி உடனே எல்லோரையும் ரோமானிய வீதிகளின் இருபுறமும் சிறிதளவு இடைவெளி விட்டு சிலுவையில் அறையும் படி உத்தரவிட்டார்.
சிலுவையில் அறைவதற்கு கைதிகளை ஒருவரோடு ஒருவரை பிணைத்து இழுத்துச் சென்றார்கள். குதிரையில் அமர்ந்து கொண்டு, அதை கண்காணித்த தளபதி, தன்னிடம் விசுவாசமாக வேலை பார்த்த ஓர் அடிமையும் உடன் செல்வதைப் பார்த்தார். உடனே நிறுத்தச் சொல்லி, நீ தானே என்னிடம் வேலை பார்த்த அன்டானிமஸ் என்றார். அவன் பதில் எதுவும் சொல்லாமல் வெறுமனே அவரை பார்த்துக் கொண்டு இருந்தான்.
படைத் தளபதியாகிய என்னிடம் வேலை பார்த்த ஒருவன், ஒரு சாதாரண அடிமையிடம் வேலை பார்க்க மாட்டான். அவன் அடிமைகளின் தலைவனுக்குத் தான் ஊழியம் செய்வான். எனவே பக்கத்தில் இருப்பவன் தான் ஸ்பார்டகஸôக இருக்க வேண்டும் என்று தீர்மானித்தான்.
ஸ்பார்டகûஸயும் அன்டானிமûஸயும் சிலுவையில் அறையாமல், இருவரையும் கொண்டு போய் ஒரு கொட்டடியில் அடைத்தான். இறுதியில் அவர்கள் இருவரையுமே அந்த தளபதி சண்டையிட உத்தரவிடுகிறார். அவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து வீர மரணமடைய விரும்புகிறார்கள். ஏன் என்றால் சிலுவையில் கொல்லப்படுவது என்பது மிகக் கொடூரமானது. அன்டானிமஸ் ஸ்பார்டகஸ் வாளுக்கு தன்னை ஒப்புக் கொடுக்கிறார். ஸ்பார்டகஸ் சிலுவையில் அறையப்பட்டு கொல்லப்படுகிறார்.
ஒரு ஸ்பார்டகஸ் போனால், அந்த இடத்தில் ஓராயிரம் ஸ்பார்டகஸ் தோன்றுவார்கள் என்று அவருக்குப் பின்னால் வரலாறு காட்டியது. ஸ்பார்டகஸின் தோல்வியால், கம்யூனிஸம் ஆயிரம் ஆண்டுகள் பின்னோக்கி தள்ளப்பட்டது என்று கார்ல்மார்க்ஸ் கூறினார். கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல், பழிக்கு பழி, இரத்தத்திற்கு இரத்தம் என்று போராடிய ஸ்பார்டகஸ் இறுதியில் தோற்றுப்போனார். ஆயுதம் ஏந்திப் போராடிய பரம்பரையில் வந்த மக்களிடம் அந்த சோகத்தின் வடுக்கள் மறையாதிருந்தது. எனவே அவருடைய மறைவுக்குப் பின், 70 ஆண்டுகள் கழித்து வந்த இயேசு கிறிஸ்துவின் அன்பு, சகோதர பாசம், மனித நேயம், அகிம்சை, ஒரு கன்னத்தில் அடித்தால், மறு கன்னத்தை திருப்பிக் காட்டு என்பது போன்ற உபதேசங்கள் மக்கள் மத்தியில் வெகுவாக எடுபட்டது என்று மார்க்ஸிய எழுத்தாளர்களும், முற்போக்கு வரலாற்று ஆசிரியர்களும் குறிப்பிடுகிறார்கள்.
(தொடரும்)