மதுரையில் சத்ய சாய் நகரில் உள்ள ஸ்ரீசத்ய சாய் ஆனந்த நிலையம் 1999 ஏப்ரல் 22-ல் சத்ய சாய் பாபாவால் தொடங்கிவைக்கப்பட்டது. இங்கு ஷீர்டி சாய் பாபாவின் திருவுருவச் சிலை உள்ளது.
ஆண்டுதோறும் ஏப்ரலில் சத்ய சாய் பாபா கொடைக்கானலுக்கு வருகை புரிவது வழக்கம். அப்படி கொடைக்கானலுக்கு அவர் வரும்போதெல்லாம் மதுரை வந்து ஆனந்த நிலையத்தில் தங்கிச் செல்வதையும் வழக்கமாகக் கொண்டுள்ளார்.
சாய் பாபா வருகையின்போது ஆனந்த நிலையம் பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிவதைக் காணலாம். எனினும் வாரம்தோறும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை 6 மணிக்கு இங்கு சாய் பஜன் வழக்கமாக நடைபெற்றுவருகிறது. சனிக்கிழமைதோறும் காலை 5.20 மணிக்கு ஓம்காரம், சுப்ரபாதம், நகர சங்கீர்த்தனம் ஆகியவை நடைபெற்றுவருகின்றன.
மதுரை மாவட்டத்தில் உள்ள சத்ய சாய் சேவா சங்கத்தினரின் குடும்ப நிகழ்ச்சிகள் அனைத்துமே இந்த ஆனந்த நிலையத்தில்தான் நடைபெறுகின்றன. நவம்பர் 23-ம் தேதி சாய் பாபாவின் 85-வது பிறந்த நாளை விமரிசையாக கொண்டாட ஆனந்த நிலைய நிர்வாகிகள் ஏற்பாடுகளைச் செய்துவருகின்றனர்.
ஆனந்த நிலையத்துக்கு சாய் பாபா வருகை தரும்போதும் ஆயிரக்கணக்கானோருக்கு அன்னதானம் வழங்கப்படும். அவர் ஆசி வழங்கும் நேரங்களில் பஜனையும் நடைபெறும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.