போட்டி: ஹேய்....பாடல்... ஒன்று!
மும்பை அரங்கத்தில் ஜோராக ஒலிக்கிறது சென்னை கஸ்டம்ஸ் அணியின் பாடல். 5 நிமிட பாடலுக்குப் பின்னர் அரங்கத்தில் கைதட்டல் ஒலி விண்ணைப் பிளந்தது. அற்புதமான பாடலைப் பாடி முதல் பரிசைத் தட்டி வந்துள்ளது கஸ்டம்ஸ
தினமணி கதிர்போட்டி: ஹேய்....பாடல்... ஒன்று!
மும்பை அரங்கத்தில் ஜோராக ஒலிக்கிறது சென்னை கஸ்டம்ஸ் அணியின் பாடல். 5 நிமிட பாடலுக்குப் பின்னர் அரங்கத்தில் கைதட்டல் ஒலி விண்ணைப் பிளந்தது. அற்புதமான பாடலைப் பாடி முதல் பரிசைத் தட்டி வந்துள்ளது கஸ்டம்ஸ
மும்பை அரங்கத்தில் ஜோராக ஒலிக்கிறது சென்னை கஸ்டம்ஸ் அணியின் பாடல். 5 நிமிட பாடலுக்குப் பின்னர் அரங்கத்தில் கைதட்டல் ஒலி விண்ணைப் பிளந்தது. அற்புதமான பாடலைப் பாடி முதல் பரிசைத் தட்டி வந்துள்ளது கஸ்டம்ஸ் அணி. அதேநேரத்தில் அகில இந்திய அளவிலான கஸ்டம்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியில் வாலிபால், கால்பந்துப் போட்டிகளில் சாம்பியன் பட்டம் வென்று முத்தான மூன்று வெற்றிகளைப் பெற்றுள்ளது கஸ்டம்ஸ் துறை.
முதல் முறையாக பாடல் போட்டிக்கு அதுவும் அகில இந்திய அளவிலான போட்டியில் கஸ்டம்ஸ் அணி முதல் பரிசை வெல்வது இப்போதுதான். இதனால் கஸ்டம்ஸ் துறையில் இருக்கும் ஊழியர்கள் ஏகத்துக்கும் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். கஸ்டம்ஸ் ஹவுஸின் இசையமைப்பாளர் டி. துரைப்பாண்டியனும் விளையாட்டுப் பிரிவு அதிகாரி தியாகராஜனும் பாராட்டு மழையில் நனைந்து கொண்டிருக்கின்றனர். உற்சாகத்துக்கு இடையே நம்மிடம் பேசினார் துரைப்பாண்டியன்!
இந்தப் பாடல் போட்டியை நடத்துவது யார்...இதில் சென்னை கஸ்டம்ஸ் அணி தேர்வானது எப்படி?
அகில இந்திய அளவில் கஸ்டம்ஸ் அணிகளுக்கு இடையே பல்வேறுவிதமான போட்டிகளை நடத்துவது "சென்ட்ரல் ரெவின்யூ ஸ்போர்ட்ஸ் போர்ட்' எனப்படும் மத்திய வருவாய்த்துறை விளையாட்டு வாரியமாகும். ஆண்டுதோறும் பாடல், கலை, விளையாட்டு எனப் பல்வேறு பிரிவுகளில் இப்போட்டி நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு பாடல், கால்பந்து, வாலிபால் என மூன்றிலும் வென்று வந்துள்ளோம்.
முதலில் மண்டல அணிகளுக்கு இடையே போட்டி நடைபெறும். அதில் தேர்வாகி, தென்னிந்திய அளவிலான போட்டியில் வெற்றி பெற்று, அகில இந்திய கஸ்டம்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியில் நுழைந்தோம். அகில இந்திய அளவிலான போட்டி மிகவும் கடினமானதாக இருந்தது. இருந்தும் மன உறுதியுடன் போட்டியில் பங்கேற்று பரிசைத் தட்டி வந்தோம். இது எங்கள் குழு முயற்சிக்குக் கிடைத்த வெற்றி என்றுதான் சொல்வேன்.
போட்டியில் எந்த மொழிப் பாடலைப் பாடினீர்கள்? அந்தப் பாடலைத் தேர்ந்தெடுத்தது எப்படி?
சினிமா பாடல்களைப் போட்டியில் பாடக்கூடாது. திரைப்படங்களில் இல்லாத பாடல்களைத்தான் தேர்வு செய்து பாடவேண்டும் என்பது போட்டியின் விதியாக இருந்தது. எனவே வித்தியாசமாக நாம் ஏதாவது செய்து பரிசை வெல்வதற்குத் திட்டமிட்டோம். அப்படி யோசித்ததின் விளைவாகத்தான் இந்திய மொழிகளில் ஒன்றான கூர்க் மொழி எனப்படும் குடகு மொழிப் பாடலைப் பாடுவது என்று முடிவு செய்தோம். நாங்கள் நினைத்ததுபோலவே வெற்றியும் கண்டோம். ஆண்கள், பெண்கள் என 11 பேர் கொண்ட எங்களின் குழு, இசைக்கருவிகளுடன "லைவ்'வாக இசைத்துப் போட்டியில் பங்கேற்றோம். போட்டி மேடையில் ஒருவர் பின்னர் ஒருவராக பாடலைப் பாடியபடி உள்ளே நுழைந்தது, பின் கோரஸôக பாடலைப் பாட, அந்த நேர்த்தியான பிரம்மாண்டமான பங்களிப்பே எங்களுக்குப் பரிசையும் பெற்றுத் தந்தது.
மண்டல அளவிலான போட்டியில் 4 குழுக்களும், தென்னிந்திய அளவிலான போட்டியில் 4 குழுக்களும் பங்கேற்றன. இறுதிப் போட்டியில் 4 குழுக்களும் பங்கேற்று இறுதியில் நாங்கள் தேர்வு செய்யப்பட்டோம். அகில இந்திய பாடல் போட்டியில் கஸ்டம்ஸ் துறை வெல்வது இதுவே முதல்முறையாகும்.
எத்தனையோ தமிழ் பாடல்கள் இருக்க குடகு மொழி பாடலை தேர்ந்தெடுத்தது ஏன்?
அகில இந்திய போட்டியில் நாட்டுப்புற பாடல்கள் மட்டுமே பாடவேண்டும் என்று தெரிவித்தனர். இந்த விதியின் அடிப்படையில் பாடல்களைத் தேடியபோது குடகு மொழியில் அமைந்த ஒரு பாடல் கிடைத்தது. அறுவடை சமயத்தில் பெண்களும், ஆண்களும் இணைந்து பாடும் வகையில் குடகு மொழிப் பாடல் அமைந்திருந்தது. அந்தப் பாடலின் டியூனும் மிகவும் கவரக்கூடிய வகையில் இருந்தது. அறுவடையில் நல்ல விளைச்சல் கிடைத்த மகிழ்ச்சியை வெளிப்படுத்துவதாக பாட்டின் அர்த்தம் அமைந்துள்ளது. எனவே இதைத்தேர்வு செய்தோம்.
போட்டிக்காக நாங்கள் கடுமையாகப் பயிற்சி செய்தோம். இதற்காக எங்கள் உயர் அதிகாரிகள் நேரம் ஒதுக்கிக் கொடுத்து எங்களை ஊக்கப்படுத்தினர். கஸ்டம்ஸ் ஆணையர் அலோக் சுக்லா எங்களுக்கு அளித்த உற்சாகத்தை குறிப்பாகச் சொல்லவேண்டும்.
தனிநபர் போட்டியில் சென்னை கஸ்டம்ஸ் பிரிவு அதிகாரிகள் சங்கரி, பத்மஜா ஆகியோர் அகில இந்திய போட்டி வரை தேர்வாயினர். ஆனால் இறுதிப் போட்டியில் அவர்கள் பரிசு வெல்ல முடியாமல் போனது வருத்தம்தான்.