ஸ் என்ன வெயில்!
உணவில் பச்சை வெங்காயம், வெள்ளரி, வாழைத்தண்டு, மோர், புதினா ஆகியவற்றைத் தவறாமல் சேர்த்துக்கொள்ள வேண்டும். வேப்பிலை, துளசி இவற்றைக் காயவைத்து பொடித்து வைத்துக்கொண்டு, நீரில் கலந்து குளிக்கலாம். வியர்க்க
உணவில் பச்சை வெங்காயம், வெள்ளரி, வாழைத்தண்டு, மோர், புதினா ஆகியவற்றைத் தவறாமல் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
வேப்பிலை, துளசி இவற்றைக் காயவைத்து பொடித்து வைத்துக்கொண்டு, நீரில் கலந்து குளிக்கலாம். வியர்க்காமல் இருப்பதோடு, சரும வியாதிகளும், வெயில் கொப்பளங்களும் வராது.
நீராகாரம், கூழ் போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்வது நலம் தரும்.
Advertisement
மாதுளம் இலையை அரைத்துப் பூசிக் குளித்தால், வேனல் கட்டிகள், வியர்க்குரு ஆகியன நீங்கும்.
நா வறட்சி தணிய கொத்தமல்லி, கசகசா இரண்டையும் சிவக்க வறுத்து, அவற்றுடன் பனைவெல்லம், ஏலக்காய்பொடி சேர்த்து கஷாயம் செய்து அருந்தினால் தாகம் தீர்வதோடு பித்தமும் நீங்கும்.
வெளியே கிளம்பும்போது அருநெல்லிக்காய் ஒன்றிரண்டை வாயில் போட்டு மெல்லுங்கள். நாக்கு உலர்ந்து போகாமல் இருக்கும்.
உச்சி வெயிலில் வெளியே போகும்போது, ஒரு துண்டு எலுமிச்ச பழத்தையோ, அல்லது ரோஜா பூவையோ கையில் கொண்டு செல்லவும். மயக்கம் வருவது போல் இருந்தால், முகர்ந்து பார்த்துக் கொள்ளவும்.
ஒரு நாள் விட்டு ஒருநாள் இரவு வெந்தயத்தை மோரில் ஊறவைத்து அரைத்து மறுநாள் காலை தலைக்குப் பூசிக் குளித்து வந்தால் உடல் குளிர்ச்சியாக இருக்கும்.
கனத்த கோணிகளைத் தண்ணீரில் நனைத்து ஜன்னலில் தொங்கவிடுவது அறையின் வெப்பத்தைக் குறைக்க உதவும்.
உடலின் வியர்வையை வெளியேற்றக்கூடிய கதர் துணிகளால் ஆன ஆடைகளை அணிந்து கொள்ள வேண்டும்.
இரவில் வெள்ளரித்துண்டுகளைக் கண்களின் மீது வைத்து உறங்கினால், வெயிலால் உண்டான எரிச்சல் சரியாகும்.
மோரினை அடிக்கடி குடிப்பதால் வெயிலினால் ஏற்படும் நரம்புத் தளர்ச்சி சரியாகும்.