தினமணி கதிர்

திரைக்கதிர்

டி.பி.கஜேந்திரன் இயக்கத்தில் பிரபு நடித்து சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியான "பந்தா பரமசிவம்' படம் தற்போது "ஹவுஸ்ஃபுல் 2' என்ற பெயரில் ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. இதில் அக்ஷய்குமார், ஜான் ஆப்ரஹ

மனோஜ் கிருஷ்ணா

டி.பி.கஜேந்திரன் இயக்கத்தில் பிரபு நடித்து சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியான "பந்தா பரமசிவம்' படம் தற்போது "ஹவுஸ்ஃபுல் 2' என்ற பெயரில் ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. இதில் அக்ஷய்குமார், ஜான் ஆப்ரஹாம், அஸின் ஆகியோர் நடித்துள்ளனர். தமிழில் எடுத்த தயாரிப்பாளர் பி.டி.செல்வக்குமாரிடம் இருந்து சில லட்சங்கள் மட்டுமே கொடுத்து உரிமை பெறப்பட்ட இந்தப் படம், இதுவரை ரூ.80 கோடி வரை வசூல் செய்துள்ளது.

வரும் ஆண்டிலிருந்து 10 மற்றும் ப்ளஸ் டூ வகுப்புகளில் முதல் மூன்று இடங்களைப் பெறும் ஆறு மாணவர்களின் குடும்பங்களை அழைத்து அவர்களுக்கு ஒரு தொகையைப் பரிசளிப்பதோடு ஒரு நாள் முழுவதும் அந்தக் குடும்பங்களுடனேயே செலவிடப் போவதாக விஜய் கூறியுள்ளார்.

தெலுங்கின் முன்னணி நடிகர் மகேஷ்பாபு நடிக்கும் புதிய படத்தில் அவருக்கு அண்ணியாக நடிக்க பல முன்னாள் முன்னணி நடிகைகளுக்கு அழைப்பு விடுத்துள்ளனர். ஆனால் யாரும் நடிக்க சம்மதிக்கவில்லை. ஆனால் அந்த வேடத்தில் தைரியமாக நடிக்க சம்மதம் தெரிவித்து படத்திலும் ஒப்பந்தமாகிவிட்டார் "அங்காடித் தெரு' அஞ்சலி.

அமிதாப் பச்சன், ஜெயபாதுரி நடித்து சூப்பர் ஹிட் ஆன "ஜஞ்ஜீர்' படம் அதே பெயரில் மீண்டும் ஹிந்தியில் ரீமேக் செய்யப்படுகிறது. தெலுங்கின் இளம் முன்னணி நடிகர் ராம்சரண் தேஜா, ப்ரியங்கா சோப்ரா ஆகியோர் நடிக்கும் இந்தப் படத்தை அமித் மெஹ்ரா இயக்குகிறார். இந்தப் படத்துக்காகப் ப்ரியங்கா சோப்ராவுக்கு ரூ.9 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளது. இதையடுத்து நாட்டிலேயே அதிகச் சம்பளம் வாங்கும் நடிகை என்ற பெயரைப் பெற்றுள்ளார் ப்ரியங்கா.

அண்மையில் திருமலைக்குச் சென்று ஏழுமலையானை தரிசித்த நடிகை காம்னா "ஏழுமலையான் என் பாய் ஃப்ரெண்ட்' என்று கமெண்ட் அடித்தார். இதையடுத்து பல ஆன்மிக அமைப்புகளும் சமூக அமைப்புகளும் அவருக்கு பலத்த கண்டனம் தெரிவித்தன. இதற்கு ""நான் தவறான அர்த்தத்தில் சொல்லவில்லை. ஏழுமலையான் என் இஷ்ட தெய்வம். அவர் என் தந்தை, குரு, வழிகாட்டும் நண்பர் என்ற அர்த்தத்தில் அப்படிச் சொன்னேன். நான் பேசியது யாருடைய மனதையாவது புண்படுத்தியிருந்தால் மன்னித்துவிடுங்கள்'' என வருத்தம் தெரிவித்திருக்கிறார் காம்னா.

ரஜினிகாந்த் நடிக்கும் "கோச்சடையான்' படத்தில் நடனத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து காட்சிகளை அமைத்துள்ளார் இயக்குநர் செüந்தர்யா. இதனால் பிரபுதேவா, ராஜுசுந்தரம், சரோஜ்கான், சின்னி பிரகாஷ், ஷோபி என ஐந்து பிரபல நடன இயக்குநர்கள் பணிபுரிகிறார்கள்.

இரண்டு ஆண்டுகளுக்கு தொடர்ச்சியாக பல படங்களுக்கு கால்ஷீட் கொடுத்துள்ள அனுஷ்கா, இப்போதெல்லாம் மிகவும் அமைதியாகி விட்டார். பத்திரிகையாளர்களைச் சந்திப்பதைத் தவிர்த்து விடுகிறார்; சினிமா நண்பர்களுடனும் சரிவரப் பேசுவதில்லை; குறிப்பாக, எந்த ஹீரோவுடனும் சகஜமாகப் பேசுவதில்லை என்பதால் அவர் காதல் வலையில் சிக்கியிருக்கிறார் என கிசுகிசுக்கப்படுகிறது.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என கலக்கி வரும் சமந்தாவுக்கு ஏகப்பட்ட கண்திருஷ்டி பட்டிருக்கிறதாம். இதனால் அவருடைய குடும்பத்தார் மந்திரித்த கறுப்புக் கயிறை இடது காலில் கட்டியுள்ளனர். படத்தில் அது தெரியக்கூடாது என்பதற்காக ஸ்கின் கலரில் காலுறை அணிந்துகொள்

கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜம்மு - காஷ்மீர்: பாதுகாப்புப் படையின் ‘ஆபரேசன் த்ராஷியில்’ ஜெய்ஷ்-ஏ-முகமது தளபதி பலி!

”Vijay அரசியலுக்கு வருவது அவரின் ஜனநாயக உரிமை, ஆனால்..!” இயக்குநர் Raju Murugan!

Sunil Gavaskar அறிவுரையைக் கேட்பாரா Abhishek Sharma? | T20 World Cup Review

மின்சாரத் தேவையைத் தொடர்ந்து நிலக்கரித் தேவை அதிகரிக்கும்!

விரைவில் Dragon 2? PR கொடுத்த Update! | Cinema Updates | Dinamani Talkies

SCROLL FOR NEXT