தினமணி கதிர்

திரைக்கதிர்

தெலுங்கில் வெற்றியடைந்த "மங்களா', தமிழில் "சிவாங்கி' என்ற பெயரில் வெளியாகிறது. விஞ்ஞானத்தையும் ஆன்மிகத்தையும் கலந்து வித்தியாசமான பின்னணியில் உருவாகியுள்ள இந்தப் படத்தை ஓஷோ துளசிராம் இயக்கியுள்ளார். ப

மனோஜ் கிருஷ்ணா

தெலுங்கில் வெற்றியடைந்த "மங்களா', தமிழில் "சிவாங்கி' என்ற பெயரில் வெளியாகிறது. விஞ்ஞானத்தையும் ஆன்மிகத்தையும் கலந்து வித்தியாசமான பின்னணியில் உருவாகியுள்ள இந்தப் படத்தை ஓஷோ துளசிராம் இயக்கியுள்ளார். படத்தில் கதாநாயகியாக நடித்துள்ள ஷார்மி இதுவரை எந்த நடிகையும் நடித்திராத அளவுக்கு ஆக்ஷன் காட்சிகளில் ருத்ரதாண்டவம் ஆடியிருக்கிறார்.

அண்மையில் "மேக்ஸிம்' பத்திரிகைக்காக நடத்தப்பட்ட ஃபோட்டோ ஷூட் ஒன்றுக்காக ஆடைக்குறைப்பில் புரட்சியே செய்திருக்கிறார் ஸ்ரேயா. முன்பு போல் வாய்ப்பு இல்லாததால்தான் இப்படியெல்லாம் "போஸ்' கொடுக்க ஆரம்பித்துவிட்டார் என பலரும் கூறத் தொடங்கினர். இது குறித்து தன்னுடைய டிவிட்டரில் ""தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தியில் இப்போதும் எனக்குப் படங்கள் இருக்கின்றன. நான் அப்படி "போஸ்' கொடுத்ததற்குக் காரணம் புகைப்படக்காரர் ஃபராக்தான். அவருடைய பெர்ஃபெக்ஷன் அப்படி! அவர் கேட்டுக்கொண்டால் நிர்வாணமாகக் கூட போஸ் கொடுப்பேன். ஏனென்றால் அவர் எடுக்கும் புகைப்படங்களில் க்ளாமர் இருந்தாலும் அதைத் தாண்டி கலைநயமும் இருக்கும்'' என்று கூறியிருக்கிறார்.

"ஒய் திஸ் கொலைவெறிடி...' புகழ் அனிருத், பாடகியும் நடிகையுமான ஆண்ட்ரியா ஆகியோரைப் பற்றிதான் இப்போது கோடம்பாக்கத்தில் பேச்சு. சிம்பு-நயன்தாரா பாணியில் இவர்கள் இருவரும் நெருக்கமாக உள்ள புகைப்படங்கள் நெட்டில் உலா வருகின்றன. இதுபற்றி கேட்டால்... "அனிருத்தின் வயது என்ன? என் வயது என்ன? ஒருவருக்கு முத்தம் கொடுத்தால் உடனே காதல் என்று வதந்தி பரப்புவதா?'' என்கிறார் ஆண்ட்ரியா.

"துப்பாக்கி' படத்தையடுத்து கெüதம் மேனனின் "யோஹன்' படத்தில் நடிக்கவிருந்தார் விஜய். இந்நிலையில் இயக்குநர் விஜய்க்கும் கால்ஷீட் ஒதுக்கியுள்ளார். தான் தயாரித்து இயக்கவுள்ள "துப்பறியும் ஆனந்தன்' படத்துக்காக சூர்யாவுக்கு ரூ.4 கோடி அட்வான்ஸ் கொடுத்த கெüதம் மேனன், "யோஹன்' படத்துக்காக விஜய்க்கு ரூ.2 கோடி மட்டுமே அட்வான்ஸ் கொடுத்தாராம். கெüதமிடம் பாராமுகம் காட்டுவதற்கு இதுவே காரணம் எனக் கூறப்படுகிறது.

இயக்குநர் ராதாமோகனின் உதவியாளர் ஒருவர் யு டி.வி. தனஞ்செயனிடம் வாய்ப்பு கேட்டு  ஒரு வித்தியாசமான ஸ்கிரிப்டை அவரை நம்பிக் கொடுத்திருக்கிறார். "காத்திருங்கள்... ஸ்கிரிப்ட் ஓ.கே. ஆகட்டும்; படத்தைத் தொடங்கிவிடலாம்' என்று கூறப்பட்டுள்ளது. அவரும் காத்திருந்தார். ஸ்கிரிப்ட் ஓ.கே. ஆகிவிட்டது. படமும் எடுக்கப்பட்டு பாடல் ரிலீஸ் வரை வந்துவிட்டது. அந்தப் படம்தான் "தாண்டவம்'. தன்னுடைய கதை என்பதற்கு வலுவான ஆதாரம் வைத்திருக்கும் அந்த இயக்குநர் வம்பு, வழக்கு என போய்விடக்கூடாது என்பதற்காக அவருடைய வாயை அடைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது படக் குழு.

தமிழண்ணா என்ற பெயரில் ஐநூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், கட்டுரைத் தொடர்கள்  எழுதியவரும் இயக்குநர் மாதேஷின் உதவியாளருமான ஜெயதமிழ், பிரபல விநியோகஸ்தர் குருராஜாவுடன் இணைந்து "நானும் என் ஜமுனாவும்' என்ற படத்தை இயக்குகிறார். பானுசந்தரின் மகன் ஜெயந்த், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பவுலமி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்க பிரபல மலையாள நடிகர் முகேஷ் முதல் முறையாக வில்லனாக நடிக்கிறார். காதலுக்கும் இசைக்கும் முக்கியத்துவம் அளித்து உருவாகியுள்ள இந்தப் படத்துக்கு "வேதம் புதிது' படத்துக்கு இசையமைத்த ரபி தேவேந்திரன் இசையமைத்துள்ளார்.

அமீர் என பலரை மாற்றிய பாரதிராஜா, கதாநாயகிகளில் இனியாவை நீக்கிவிட்டு கார்த்திகாவைக் கதாநாயகி ஆக்கினார். இப்போது கார்த்திகாவுடன் சுபிக்ஷா என்ற புதுமுக நடிகையை இன்னொரு கதாநாயகியாக அறிமுகப்படுத்தியுள்ளார்.

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானிடம் உதவியாளராகப் பணியாற்றிய ஸ்வரூப் என்பவர் மலையாளப் படத்தில் கதாநாயகனாக அறிமுகமாக, இன்னொரு உதவியாளரான தீபக் தேவ் இசையமைக்கிறார். ஷஜூன் கர்யால் இயக்குகிறார். ஐந்து நண்பர்களைப் பற்றிய இந்தக் கதையில் திருப்புமுனையான ஒரு முக்கிய கதாபாத்திரம் இடம்பெறுகிறது. "அந்தக் கதாபாத்திரத்தில் நீங்கள்தான் நடிக்க வேண்டும்' என ஏ.ஆர்.ரஹ்மானிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர் அவருடைய உதவியாளர்கள்.

தேசிய விருது பெற்ற பாலிவுட் நடிகை கங்கணா ரணாவத், தமிழில் "தாம் தூம்' படத்தில் நடித்தார். அதையடுத்து ஹிந்திப் படங்களுக்கே முன்னுரிமை கொடுத்து நடித்து வந்தார். அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் அண்மையில் நடைபெற்ற திரைப்பட இயக்குநர்களுக்கான பயிற்சி முகாமில் கலந்துகொண்டு பயிற்சி பெற்றதோடு ஒரு குறும்படத்தையும் இயக்கியுள்ளார். தற்போது, ஜெனீலியாவைக் கதாநாயகியாக்கி ஹிந்தியில் ஒரு படத்தை இயக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜம்மு - காஷ்மீர்: பாதுகாப்புப் படையின் ‘ஆபரேசன் த்ராஷியில்’ ஜெய்ஷ்-ஏ-முகமது தளபதி பலி!

”Vijay அரசியலுக்கு வருவது அவரின் ஜனநாயக உரிமை, ஆனால்..!” இயக்குநர் Raju Murugan!

Sunil Gavaskar அறிவுரையைக் கேட்பாரா Abhishek Sharma? | T20 World Cup Review

மின்சாரத் தேவையைத் தொடர்ந்து நிலக்கரித் தேவை அதிகரிக்கும்!

விரைவில் Dragon 2? PR கொடுத்த Update! | Cinema Updates | Dinamani Talkies

SCROLL FOR NEXT