தினமணி கதிர்

திரைக்கதிர்

கேரளம் உள்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் ஆயுர்வேத மருந்துகள் மற்றும் அழகுப் பொருள்களை விற்கும் விற்பனையகங்களைத் தொடங்கவுள்ளார் மம்முட்டி. ""கேரளத்தின் பாரம்பரிய மருத்துவ தயாரிப்புகளுக்கு வெளிநாடுகள

மனோஜ் கிருஷ்ணா

கேரளம் உள்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் ஆயுர்வேத மருந்துகள் மற்றும் அழகுப் பொருள்களை விற்கும் விற்பனையகங்களைத் தொடங்கவுள்ளார் மம்முட்டி. ""கேரளத்தின் பாரம்பரிய மருத்துவ தயாரிப்புகளுக்கு வெளிநாடுகளில் நல்ல வரவேற்பு இருக்கிறது. ஆனால் அதன் மகிமையை இந்தியர்கள் இன்னும் முழுமையாக உணரவில்லை. ஆயுர்வேத தயாரிப்புகள் சாதாரண மனிதனுக்கும் பயன்பட வேண்டும் என்பதாலேயே இந்த விற்பனையகங்களைத் தொடங்கவுள்ளேன்'' என்கிறார் மம்முட்டி.

சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் யார் யாரையோ நடிக்க அழைக்கிறார்கள்; ஆனால் அதற்கு மிகத் தகுதியான தன்னை யாரும் ஒரு பொருட்டாகவே நினைக்கவில்லை என்ற வருத்தத்தில் இருக்கிறார் நமீதா. ""சில்க் ஸ்மிதாவுக்குப் பிறகு தமிழ் சினிமாவில் க்ளாமருக்கு என தனி அந்தஸ்து கிடைத்தது எனக்குத்தான். அவருடைய வேடத்துக்குப் பொருத்தமான நடிகை நான் மட்டும்தான். இப்போது என் எடை கூடியுள்ளது போலத் தெரியலாம். ஆனால் சில்க் வேடம் மட்டும் தந்து பாருங்கள்; பதினைந்தே நாள்களில் எடையைக் குறைத்து ஸ்லிம் ஆகிக் காட்டுகிறேன்'' என பகிரங்கமாக வாய்ப்பு கேட்டு வருகிறார் நமீதா.

கமல்ஹாசனும் ரஜினிகாந்தும் அண்மையில் சந்தித்து நீண்ட நேரம் மனம் விட்டுப் பேசியிருக்கிறார்கள். இந்தச் சந்திப்பின்போது உடனிருந்த "விவரமறியாத' வட்டாரங்களின் விவாதத்திலிருந்து கசிந்த விவரம் இதுதான்... கமல், ரஜினி இருவரின் கூட்டுத் தயாரிப்பில் ஒரு படம் உருவாகிறது. இதில் இருவரும் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இணைந்து நடிக்கவுள்ளனர். 2013-ல் படப்பிடிப்பு தொடங்குகிறது.

ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் "ஐ' படத்தில் தன்னுடைய உடல்நிலை காரணமாக விலகிக் கொள்வதாகக் கூறியிருக்கிறார் சமந்தா. அவர் விலகும் பட்சத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நடிக்க ஸ்ருதிஹாசன், எமி ஜாக்சன், காஜல் அகர்வால் ஆகியோரைப் பரிசீலித்து வருகிறார் ஷங்கர்.

விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் பெயரிடப்படாத புதிய படத்தில் அஜித் வித்தியாசமான "கெட்-அப்'பில் தோன்றுகிறார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு "ஸ்லிம் கம் ட்ரிம் பாய்' தோற்றத்தில் நடிக்கும் அஜித், இந்தப் படத்துக்காக தினமும் நான்கரை மணி நேரம் கடும் உடற்பயிற்சி செய்து உடலை மெருகூட்டி வருகிறார்.

ரஜினிகாந்த் நடித்த பழைய ஹிட் படங்களின் பெயரில் சில படங்கள் ரீமேக் செய்யப்பட்டன. மேலும் அவருடைய பல படங்களை அதே பெயரில் ரீமேக் செய்ய பலர் வரிசையில் காத்து இருக்கிறார்கள். ஆனால் ரஜினி படங்களின் டைட்டிலை இனி யாரும் பயன்படுத்த வேண்டாம் என அவருடைய குடும்பத்திலிருந்து அன்புக் கட்டளை பிறந்திருக்கிறது.

இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் ரூ.1 கோடியே 40 லட்சம் மதிப்புள்ள புதிய ஜாகுவார் எக்ஸ்ஜே ரக வெளிநாட்டு காரை வாங்கியுள்ளார். ஒரு மினி அபார்ட்மெண்ட்டில் உள்ள வசதிகள் அனைத்தையும் உள்ளடக்கிய இந்தக் காருக்கு, தனக்கு ராசியான டி.என்.09 சி.ஏ. 1 என்ற ஃபேன்ஸி நம்பரை வாங்கியுள்ளார். இதற்காக மட்டும் தனியே சில லட்சங்களைச் செலவழித்துள்ளாராம்.

"சகுனி' படம் ஓடும் திரையரங்குகளில் யாருக்கு விசில் சத்தம் கிடைக்கிறதோ இல்லையோ அனுஷ்கா வரும்போது அப்படி ஒரு வரவேற்பு கிடைக்கிறது. படத்தில் வெறும் ஐந்து நிமிடம் மட்டுமே கெüரவத் தோற்றத்தில் வரும் அனுஷ்காவுக்கு கிடைத்துள்ள சம்பளம் ரூ.25 லட்சம். அதாவது ஒரு நிமிடத்துக்கு

ரூ.5 லட்சம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜம்மு - காஷ்மீர்: பாதுகாப்புப் படையின் ‘ஆபரேசன் த்ராஷியில்’ ஜெய்ஷ்-ஏ-முகமது தளபதி பலி!

”Vijay அரசியலுக்கு வருவது அவரின் ஜனநாயக உரிமை, ஆனால்..!” இயக்குநர் Raju Murugan!

Sunil Gavaskar அறிவுரையைக் கேட்பாரா Abhishek Sharma? | T20 World Cup Review

மின்சாரத் தேவையைத் தொடர்ந்து நிலக்கரித் தேவை அதிகரிக்கும்!

விரைவில் Dragon 2? PR கொடுத்த Update! | Cinema Updates | Dinamani Talkies

SCROLL FOR NEXT