கிராமத்து வீட்டுக் கதவைத் தட்டும்கண் மருத்துவம்!
""இப்படி கண் சிகிச்சைக்கான வாகனங்கள் கிராமத்துக்குப் போவது புதிய விஷயமல்ல. ஆனால் அந்த வாகனங்களில் கிராமத்து மக்களை
ஒரு வேனை என்னவாக மாற்ற முடியும்?
""பல நவீன கண் மருத்துவ சிகிச்சைக் கருவிகளுடன் இயங்கும் கண் மருத்துவமனையாக மாற்ற முடியும்'' என்கிறார் டாக்டர் மோகன் ராஜன். அப்படி மாற்றப்பட்ட "நேத்ர வாகனம்' சென்னையைச் சுற்றியுள்ள 150 கி.மீ. தொலைவு உள்ள கிராமங்களுக்குச் செல்கிறது. அங்குள்ள ஏழை மக்களுக்கு இலவசமாகக் கண் மருத்துவம் செய்கிறது. இந்த கண் மருத்துவ வாகனம் பற்றிச் சொல்கிறார் சென்னை ராஜன் கண் மருத்துவமனையின் தலைவரும் மருத்துவ இயக்குநருமான டாக்டர் மோகன் ராஜன்.
""இப்படி கண் சிகிச்சைக்கான வாகனங்கள் கிராமத்துக்குப் போவது புதிய விஷயமல்ல. ஆனால் அந்த வாகனங்களில் கிராமத்து மக்களை ஏற்றிக் கொண்டு வந்து மருத்துவமனைகளில் சிகிச்சை அளிப்பார்கள். ஆனால் எங்கள் நேத்ர வாகனத்திலேயே கண் சிகிச்சை செய்யப்படுகிறது.
இந்த ஆண்டு ஜனவரி 19 ஆம் தேதி முதல் இயக்கப்படுகிற இந்த நேத்ர வாகனத்தில் பல நவீன கண் மருத்துவ சிகிச்சை கருவிகள் உள்ளன. கஅஎ கஹள்ங்ழ் என்ற கருவியின் மூலம் கண்ணில் உள்ள அழுத்தத்துக்கு சிகிச்சை அளிக்கிறோம். கண்புரை அறுவைச் சிகிச்சை செய்து கொண்டு லென்ஸ் பொருத்திய சிலருக்கு 2 - 3 ஆண்டுகளில் லென்சுக்கு கீழே ஒரு லேயர் உருவாகிவிடும். அந்த லேயரை அழிப்பதற்கு இந்த கஅஎ கஹள்ங்ழ் கருவி பயன்படுகிறது.
இன்னொரு நவீன கருவி ரெட்டினால் லேசர். இதை க்ரீன் லேசர் என்றும் சொல்வார்கள். சிலருக்குக் கண்களின் விழித்திரை பகுதியில் ரத்தக் கசிவு ஏற்படும். இந்த லேசர் மூலம் ரத்தக் கசிவு உள்ள இடங்களை அடைத்துவிடலாம்.
கண்களின் உள்ளே உள்ள அழுத்தத்தைக் கண்டுபிடிக்கும் கருவியும் உள்ளது. இந்தக் கருவியின் மூலம் கண் அழுத்தத்தைக் கண்டுபிடித்துச் சிகிச்சை அளிக்கிறோம். இந்தச் சிகிச்சைகளை நாங்கள் எங்கள் நேத்ர வாகனத்தில் இலவசமாக அளிக்கிறோம்.
எங்கள் வாகனத்தில் ரெட்டினால் கேமரா ஒன்று உள்ளது. கிராமம் ஒன்றுக்கு எங்கள் வாகனம் செல்லும்போது கூடவே தேர்ச்சி மிக்க மருத்துவர்களும் போவார்கள். அங்கு வரும் நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிப்பார்கள். சில நேரங்களில் நோயாளிக்கு அளிக்கப்பட வேண்டிய சிகிச்சைகளைப் பற்றி சென்னையில் உள்ள எங்களிடம் கலந்து ஆலோசிக்க விரும்புவார்கள். அதற்கு இந்த ரெட்டினால் கேமரா பயன்படுகிறது. நோயாளியின் கண்களைப் புகைப்படம் எடுத்து 5 நிமிடங்களுக்குள் சென்னையில் உள்ள எங்களுக்கு இந்த கேமரா அனுப்பிவிடும். நாங்கள் புகைப்படங்களைப் பார்த்துத் தேவையான தகவல்களை வேனில் உள்ள மருத்துவர்களிடம் பகிர்ந்து கொள்கிறோம்.
இந்த வேனிலேயே கண் நோயாளிகளுக்குத் தேவையான மருந்து, மாத்திரைகள், கிட்டப் பார்வை, தூரப் பார்வை உள்ளவர்களுக்குத் தேவையான கண்ணாடி போன்றவையும் உள்ளன. அவற்றையும் இலவசமாகத் தருகிறோம். 3 லட்சத்து 20 ஆயிரம் கண்ணாடிகளை இலவசமாக வழங்கி இருக்கிறோம்.
கிராமத்தில் உள்ள மக்களுக்கு கண் நோய்கள் பற்றிய விழிப்புணர்வு குறைவு. விழிப்புணர்வு இருந்தாலும் அருகில் உள்ள நகரத்துக்கு வந்து தங்கியிருந்து கண் சிகிச்சைகள் செய்து கொள்வதற்கு, அவர்களிடம் பணம் இருப்பதில்லை. எவ்வளவு பணம் செலவாகுமோ என்ற பயத்தில் பலர் சிகிச்சை செய்து கொள்வதில்லை. சில ஊர்களில் போக்குவரத்து வசதி குறைவு. இதனால் உரிய நேரத்தில் கண் சிகிச்சைகளைச் செய்து கொள்ளாமல் தள்ளிப் போட்டுக் கொண்டே இருப்பார்கள். ஒரு கட்டத்தில் கண் பார்வையை இழப்பதில் கூட இது முடியும்.
எனவே, இந்த மாதிரி நிலை யாருக்கும் ஏற்படக் கூடாது என்பதற்காக, கிராம மக்களின் வீட்டுக் கதவைத் தட்டி அவர்களுக்கு இலவச கண் சிகிச்சை அளிக்கிறோம். இதுவரை 96,000 இலவச கண் புரை நீக்க அறுவைச் சிகிச்சைகளை நடத்தியிருக்கிறோம்.
எங்களுக்கு பல அமைப்புகளின் உதவி கிடைக்கிறது. காக்னிஸன்ட் ஃபவுண்டேஷன், அமிர்தராஜ் ஃபவுண்டேஷன், சரிதா ஜெயின் ஃபவுண்டேஷன், ரோட்டரி இன்டர்நேஷனல் போன்ற அமைப்புகள் எங்களுக்கு உதவுகின்றன'' என்கிறார் பெருமையாக டாக்டர் மோகன்ராஜன்.