தினமணி கதிர்

அப்போதும் நீரே பிரச்னை!

அலெக்சாண்டர் ஹேமில்டன் என்ற ஒரு வணிகர், கிழக்கிந்திய தீவுகளிலிருந்து இங்கு 1718-ல் வந்தார்.

எஸ்.விஜயராகவன்

மதராச பட்டினத்து (சென்னை) நீர்ப் பிரச்னை இன்று நேற்றையதல்ல! ஆங்கிலேயர் இங்கு வந்தபோது, ஒருவிதத் திட்டமும் இன்றி நகரை விஸ்தரித்தனர். அதன் விளைவாக, குடிநீர் பிரச்னை ஆரம்பத்திலிருந்தே இருந்தது. சுமார் ஒரு நூற்றாண்டு வரை ஆங்கிலேயர்கள் இந்தப் பிரச்னைக்கு ஒரு வழியும் காணவில்லை! அலெக்சாண்டர் ஹேமில்டன் என்ற ஒரு வணிகர், கிழக்கிந்திய தீவுகளிலிருந்து இங்கு 1718-ல் வந்தார்.

அவர் எழுதி வைத்த குறிப்பு:

""செயின்ட் ஜார்ஜ் கோட்டை அமைந்துள்ள இடம் ஒருவிதமான செüகர்யங்களும் இல்லாமல் இருந்தது. இக்கோட்டையில் முன் எப்போதும் இல்லாத அளவில் கடல் தனது சீற்றத்தை அலைகளால் காட்டும். இதன் அஸ்திவாரம் உப்பு மணலில். அக்கோட்டைக்குப் பின்புறம் உப்பு நீர்க்கால்வாய்தான் ஓடுகிறது. ஆகையில் எங்கு தோண்டினாலும், ஒரு மைல் சுற்றளவிற்கு உப்பு நீர்தான் கிடைக்கிறது.''

அவர் எழுதியபோது ஆங்கிலேயர்கள் கோட்டையில் குடி புகுந்து 79 ஆண்டுகள் ஆகிவிட்ட நேரம்! தங்களுக்கு வேண்டிய நீர் கிடைக்க மட்டும் அவர்கள் முயன்றார்களே தவிர, மொத்தமாக மதராச பட்டினத்து நகர நிர்மானத்திற்கு ஒரு வித ஏற்பாடும் அப்போது செய்ய முனையவில்லை. அப்போது இருந்த முக்கிய ஏரிகள், வியாசர்பாடி ஏரி, ஸ்பர் ஏரி, நுங்கம்பாக்கம், மயிலாப்பூர் ஏரிகள்.

-"மதராசப் பட்டினம் (ஒரு

நகரத்தின் கதை 1600-1947)' என்ற நூலில்  நரசய்யா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஏ சான்றிதழ் பெற்ற ரஜினி திரைப்படங்கள்!

எங்கள் கூட்டணியிலிருந்து எந்த கட்சியும் வெளியேறாது: அமைச்சர் கே.என்.நேரு

பாலியல் வழக்கு: பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஆயுள் தண்டனை!

ஓவல் டெஸ்ட்டில் டிஆர்எஸ் சர்ச்சை; கள நடுவர் செய்தது சரியா?

சாலையோரத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரின் சடலம்.. ராஜஸ்தானில் அதிர்ச்சி!

SCROLL FOR NEXT