முகப்பு
தினமணி கதிர்

புள்ளிகள்

வாழ்நாள் சாதனையாளரான எம்.எஸ். சுப்புலட்சுமியின் வாழ்க்கையைப் படமாக்க ராஜீவ் மேனன் விரும்பிய போது முதலில் ஐஸ்வர்யா ராயைத் தான் நடிக்கக் கேட்டாராம்.

Updated On : 3 ஜனவரி, 2024 at 10:45 AM
பகிர்:

ஆண்கள் ஆதிக்கம் மிகுந்த கப்பல் தொழிலில் பிபுசிதா தாஸ் (வயது 28) என்ற இளம்பெண், கப்பல் பெண் இன்ஜினியராக உள்ளார். ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர். அம்மாநிலத்தின் முதல் பெண் கப்பல் இன்ஜினியர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
 புவனேஸ்வரா இன்ஜினியரிங் கல்லூரியில் மரைன் இன்ஜினியரிங் படிப்பில் பி.டெக் முடித்து வெற்றி பெற்ற நிலையில் அவரை இந்திய ஷிப்பிங் கார்ப்பரேஷன் பணியில் அமர்த்தியது.
 தன் பணியில் தீவிர பயிற்சிக்குப் பின், ஆஸ்திரேலியாவிலிருந்து ஒடிசாவின் பாரதீப் துறைமுகத்திற்கு குளிர்பானம் ஏற்றி வந்த கப்பலில் 25 ஆண் ஊழியர்களுடன் இயக்கி வந்து சாதனை படைத்துள்ளார் :
 ""இளம் வயதிலேயே எனக்குக் கடல் பயணம், கப்பல்கள் என்று தணியாத ஆர்வம். பணியில் சேர்ந்த ஆரம்பத்தில் ஒத்து வராததால், உடல் நலம் பாதிக்கப்பட்டேன். உடன் இருந்தவர்கள் நீ தவறான துறையைத் தேர்ந்தெடுத்துவிட்டாய் என்றனர்.
 இருந்தாலும், அதற்காக மனம் தளரவில்லை. இப்போது எனக்கு எந்த ஒரு பிரச்னையும் இல்லை. ஆண்களுடன் சேர்ந்து அவர்கள் மேற்கொள்ளும் அனைத்துப் பணிகளிலும் நானும் ஈடுபடுகிறேன்'' என்று கூறியுள்ளார்.
 
மகாராஷ்டிரா மாநிலம் சதாரவில் பிறந்தவர் சுரேகா யாதவ். வயது 44. எலக்ட்ரிகல் இன்ஜினியரிங் டிப்ளமோ படித்தவர். படிப்பு முடிந்த நிலையில் பல நிறுவனங்களுக்கு விண்ணப்பம் அனுப்பினார். ரயில்வேயிலும் உதவி இன்ஜின் டிரைவர் வேலைக்கு விண்ணப்பித்தார். ஆனால் ஆணா, பெண்ணா என்பதைக் குறிக்கும் இடத்தில் எதுவும் எழுத மறந்துவிட்டார்.
 3 ஆண்டுகள் சென்ற நிலையில், 1989 இல் உதவி இன்ஜின் டிரைவர் வேலைக்கு தேர்வு
 ஆனார். ஆண் என நினைத்து இவரைத் தேர்ந்
 தெடுத்துவிட்டனர். அதன்பின்தான் இவர் பெண் என்பது தெரிய வந்தது. மத்திய ரயில்வேயில் பணியைத் தொடங்கினார். இவரது கணவர் போலீசில் வேலை பார்க்கிறார். இவருக்கு 2 மகன்கள் உள்ளனர்.
 இந்நிலையில், ரயில் இன்ஜின் மோட்டார் மேன் என்ற பதவியில் ஆண்களே நியமிக்கப்பட்டு வந்த நிலையில், முதன்முறையாக சுரேகா அப்பதவியில் நியமிக்கப்பட்டார். இதனால் ஆசியாவின் முதல் மோட்டார் பெண் என்ற பெருமையை இவர் பெற்றார்.
 நா.கிருஷ்ணவேலு, புதுச்சேரி.
 
பிரியங்கா சோப்ராவுக்கு அவரது அப்பா மீது அளவு கடந்த பாசம். 1997-ஆம் ஆண்டு இந்திய ராணுவத்தி−ருந்து ஓய்வு பெற்ற லெப்டினென்ட் கர்னல் அசோக் சோப்ரா ஒரு டாக்டர்.
 பிரியங்கா சோப்ரா படப்பிடிப்பிற்கு வரும் போது யாரிடமும்
 தன் குடும்பத்தைப் பற்றி பேசமாட்டாராம். அண்மையில் சஞ்சய்தத்துடன் "ஜன்ஜீர்' படத்தில் நடித்துக் கொண்டிருந்த போது வசனத்தை மாற்றி மாற்றிப் பேசி குழப்பினராம். எந்த சந்தர்ப்பத்திலும் குழப்பமடையாத பிரியங்கா, அன்றைய தினம் பலமுறை ரீடேக் எடுக்கவைத்துவிட்டாராம். பிறகுதான் அவருடைய அப்பா உடல் நலமின்றி மருத்துவமனையில் அட்மிட் ஆகியுள்ள விவரம் தெரியவந்ததாம். தந்தை மீது வைத்திருக்கும் பாசத்தை விளக்கும் வகையில் அவரது மணிக்கட்டில் சிறிய எழுத்தில் "டாடிஸ் −ட்டில் கேர்ள்' என்று பச்சை குத்தியிருக்கிறாராம்!
 
வாழ்நாள் சாதனையாளரான எம்.எஸ். சுப்புலட்சுமியின் வாழ்க்கையைப் படமாக்க ராஜீவ் மேனன் விரும்பிய போது முதலில் ஐஸ்வர்யா ராயைத் தான் நடிக்கக் கேட்டாராம். குழந்தை பிறந்த பின்னர் மீண்டும் திரையுலகத்திற்கு திரும்பும் ஐஸ்வர்யா, மறுபிரவேசத்தில் எடுத்தவுடன் பெரிய வெற்றிப்படமாக அமைந்தால் நல்லது. ஆர்ட் பிலிம் போலிருக்கிறதே என்று கூறி மறுத்துவிட்டாராம். தாமதிக்காத ராஜீவ் மேனன், வித்யா பாலனை தொடர்பு கொண்டார். மறுப்பேதும் கூறாமல் தேதிகளை வழங்க ஒப்புக்கொண்டாராம் வித்யா பாலன். பாலக்காட்டு தமிழ்ப் பெண்ணான வித்யா பாலன், எம்.எஸ். பாத்திரத்தில் நடிப்பது அவரைவிட அவரது பெற்றோர்களுக்கு மிகவும் பிடித்திருக்கிறதாம்!
 ஏ.கே.
 
பிரபல நடிகரான ஜாக்கி சானுக்குப் படிப்பறிவு கிடையாது. பள்ளிக்கூடம் பக்கமே போனதில்லை. ஆங்கிலத்தில் சில எழுத்துக்களைக் கூட எழுதப் படிக்கத் தெரியாது. ஒரு பேட்டியில் இதுபற்றி கூறும்போது, ""படத்திற்கான வசனங்களையும் மற்ற விஷயங்களையும் என் மேனேஜர் சொல்லுவார். அதை நான் கவனமாக மனதில் பதித்துப் பொருத்தமாக ஒப்பித்துவிடுவேன்...!'' என்கிறார்.
 - நெ. இராமன்,
 சென்னை.
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.