முகப்பு
தினமணி கதிர்

ஆன்மீக செய்திகள்

சுவாமியின் வீதிப் புறப்பாட்டில் நிவேதனத்திற்கு வைத்திருக்கும் தேங்காய், பழம், "திருக்கண் சாந்து' எனப்படும்.

Updated On : 3 ஜனவரி, 2024 at 6:41 PM
பகிர்:

  மணலால் ஆகிய சிவலிங்கம் கைகதலிங்கம் எனப்படும்.

  உளியினால் செதுக்கப்படாது தானே உண்டான லிங்கம் விடங்கன் எனப்படும்.

  சுவாமியின் வீதிப் புறப்பாட்டில் நிவேதனத்திற்கு வைத்திருக்கும் தேங்காய், பழம், "திருக்கண் சாந்து' எனப்படும்.

  கோயில்களில் கிடைக்கும் கட்டிச் சாதம் "வில்லைச் சாதம்' எனப்படும்.

  திருநீறுக்கு வெண்ணீறு, வெண்பலி என்ற பெயர்களுண்டு.

  கோயிலில் பூசை செய்யுமிடம் வேதிகை எனப்படும்.

  திருமஞ்சன காலத்தில் கோயில் மூர்த்திக்கு அணிவிக்கப்படும் ஆடை ஜலபத்திரம் எனப்படும்.

  தெய்வங்களின் விக்கிரகங்களை நிறுத்தும் ஆதாரக்கல் ஸ்ரீபீடம் எனப்படும்.

  கடவுளுக்கு வாசனை தைலம் கொண்டு அபிஷேக ஆராதனை செய்வது தைலதாரை எனப்படும்.

  பழம், நெய், சர்க்கரை முதலியவற்றைச் சேர்த்து செய்யப்படும் நைவேத்யம் "திருமதுரம்' எனப்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.