முகப்பு
தினமணி கதிர்

தியானம் செய்ய மொட்டை மாடியே போதும்!

""எந்தச் சூழ்நிலையிலும் எந்த விஷயமாக இருந்தாலும் அதை ஒதுக்கிவிடாமலும், அதே சமயம் மனதில் உள்ள அமைதியை அது

Updated On : 5 ஜனவரி, 2024 at 4:25 AM
பகிர்:

""எந்தச் சூழ்நிலையிலும் எந்த விஷயமாக இருந்தாலும் அதை ஒதுக்கிவிடாமலும், அதே சமயம் மனதில் உள்ள அமைதியை அது பாதிக்காமலிருக்கவும், தேவைப்படும்போது அவ்விஷயத்தின் மீது முழுக் கவனத்தைத் திருப்பவும், தேவையற்ற சமயத்தில் அந்த விஷயத்தை ஒதுக்கவும் தியானம் உதவுகிறது. இதற்காக ஆசிரமத்தில் சேர வேண்டுமென்பது அவசியமும் அல்ல. உங்கள் வீட்டிலேயே, தோட்டத்திலேயே, மொட்டை மாடியிலேயே கூட தியானிக்கும்போது அமைதியும், மகிழ்ச்சியும் கிடைக்கும்'' என்று கூறும் பானுமதி நரசிம்மன் "வாழும் கலை' (ஆர்ட் ஆப் லிவ்விங்) நிறுவனர் ஸ்ரீஸ்ரீரவிசங்கர் குருஜியின் சகோதரியாவார்.

பதினேழாவது வயதிலேயே திருமணம் செய்து கொண்ட பானுமதிக்கு இரண்டு மகன்கள். ""ரவிசங்கர் குருஜி மீதும் ஆசிரமம் மீதும் எனக்கேற்பட்ட பற்றுதலுக்குத் தடைவிதிக்காமல் என் கணவரும் மகன்களும் கொடுத்த ஊக்கம் காரணமாக நானும் "வாழும் கலை' பயிற்சி மையத்தில் சேர்ந்தேன். துவக்கத்தில் ஆசிரமத்தில் ஆங்கில ஆசிரியையாகப் பணியாற்றத் தொடங்கி பின்னர் பயிற்சியாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டேன்'' என்கிறார் பானுமதி நரசிம்மன்.

இன்று உலகில் உள்ள "வாழும் கலை' அனைத்து மையங்களிலும் உள்ள பயிற்சியாளர்களிலேயே முதன்மையானவராகவும், "வாழும் கலை' நிர்வாகப் பொறுப்பையும் ஏற்றுச் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறார்.

""வீட்டிலிருந்து வெளியேறி ஆன்மிகத்தில் ஈடுபட்டு குருஜியாக மாறியபோதும் சகோதரர் என்ற உறவை இழந்துவிட்டோமோ என்ற உணர்வை அவர் எப்போதுமே ஏற்படுத்தியதில்லை. உலக மக்கள் அனைவரையும் ஒருங்கிணைப்பதிலும் அவர் தோல்வியடைந்ததில்லை. குருஜி என்ற முறையில் அவரிடம் உள்ள தெய்வீகத் தன்மையை உணரும்போது மனதில் தோன்றும் அமைதி அலாதியானது'' என்கிறார் பானுமதி நரசிம்மன்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.