மூளையைப் பாதிக்கும் பத்து பழக்கங்கள்
காலையில் உணவு உண்ணாமல் இருப்பவர்களுக்கு ரத்தத்தில் குறைவான அளவே சர்க்கரை இருக்கும். இது மூளைக்குத்
1. காலையில் உணவு உண்ணாமல் இருப்பது:
காலையில் உணவு உண்ணாமல் இருப்பவர்களுக்கு ரத்தத்தில் குறைவான அளவே சர்க்கரை இருக்கும். இது மூளைக்குத் தேவையான சக்தியையும் தேவையான ஊட்டச் சத்துகளையும் கொடுக்காமல் செய்து மூளை அழிவுக்குக் காரணமாகிவிடும்.
2. மிக அதிகமாகச் சாப்பிடுவது: இச்செயல் மூளையில் இருக்கும் ரத்த நாளங்கள் இறுகக் காரணமாகிவிடும். இது மூளையின் சக்தி குறைவுக்கு வழி வகுக்கும்.
Advertisement
3. புகைபிடித்தல்: மூளை சுருங்கவும் "அல்சமைர்ஸ்' வியாதி வருவதற்கும் புகைபிடித்தல் காரணமாகிறது.
4. நிறைய சர்க்கரை சாப்பிடுதல்: நிறைய சர்க்கரை சாப்பிடுவது புரோட்டீன் நமது உடலில் சேர்வதைத் தடுக்கிறது. இதுவும் மூளை வளர்ச்சிக்குப் பாதிப்பாகிறது.
5. மாசு நிறைந்த காற்று: மாசு நிறைந்த காற்றைச் சுவாசித்தல் நமக்குத் தேவையான ஆக்ஸிஜனை நாம் பெறுவதிலிருந்து தடை செய்கிறது. மூளைக்கு ஆக்ஸிஜன் செல்லாவிட்டால், மூளை பாதிப்படையும்.
6. தூக்கமின்மை: நல்ல தூக்கம் நம் மூளைக்கு ஓய்வு கொடுக்கும். வெகுகாலம் தேவையான அளவு தூங்காமலிருப்பது மூளைக்கு நீண்டகாலப் பாதிப்பை ஏற்படுத்தும்.
7. தலையை மூடிக்கொண்டு தூங்குவது: தலையை மூடிக்கொண்டு தூங்கும்போது போர்வைக்குள் கரியமிலவாயு அதிகரிக்கிறது. இது நீங்கள் சுவாசிக்கும் ஆக்ஸிஜனைக் குறைக்கிறது. குறைவான ஆக்ஸிஜன் மூளையைப் பாதிக்கிறது.
8. நோய் வாய்ப்பட்ட காலத்தில் மூளைக்கு வேலை கொடுப்பது: உடல் நோயுற்ற காலத்தில் மிக அதிகமாக மூளைக்கு வேலையைக் கொடுப்பதும், தீவிரமாகப் படிப்பதும் மூளையைப் பாதிக்கும். உடல் சரியாக ஆன பின்னால் மூளைக்கு வேலை கொடுப்பதே சிறந்தது.
9. உடல் ஆரோக்கியத்துடன் இருக்கையில், மூளைக்கு வேலை கொடுக்கும் சிந்தனைகளை மேற்கொள்ளாமல் இருப்பது: உடல் ஆரோக்கியமாக இருக்கும்போது எப்போதும் மூளைக்கு வேலை கொடுத்துக் கொண்டிருப்பது நல்ல செயலாகும். மூளையை அதிகமாக உபயோகப்படுத்தும் சிந்தனைகளை மேற்கொள்வதால் மூளையில் புதுப்புது இணைப்புகள் உருவாகின்றன. அதனால் மூளை வலிமையான உறுப்பாக ஆகிறது.
10. பேசாமல் இருப்பது: அறிவுப்பூர்வமான உரையாடல்களை மேற்கொள்வது மூளையின் வலிமையை அதிகரிக்கிறது.