வாழ்க்கையில் இழப்பதற்கு ஏதும் இல்லை: நர்கீஸ் ஃபக்ரி
திரையுலகில் நுழைந்தவுடனேயே வரவேற்பையும் கண்டனத்தையும் ஒரே சமயத்தில் பெற்ற
திரையுலகில் நுழைந்தவுடனேயே வரவேற்பையும் கண்டனத்தையும் ஒரே சமயத்தில் பெற்ற நடிகை நர்கீஸ்ஃபக்ரியாகத்தான் இருக்கமுடியும். அவரது தோற்றத்திற்கு கிடைத்த வரவேற்பு அவரது நடிப்புக்கு கிடைக்கவில்லை. அது அவருடைய தவறல்ல. இவர் லண்டனின் மாடலாக இருந்து மும்பை திரையுலகிற்கு வந்தவர்.
""திரையுலகில் என்னை சூப்பர் கவர்ச்சி பாவையாக கருதினேன், ஆனால் திரையில் என்னுடைய கவர்ச்சி 20 சதவீதம் கூட எடுபடாது என்றே தோன்றுகிறது. மாடலாக இருந்தபோது எனக்கு நானே நூற்றுக்குநூறு மதிப்பெண் போட்டுக் கொண்டேன். திரையுலகைப் பொறுத்தவரை நான் செல்லவேண்டிய தூரம் வெகுதொலைவில் இருப்பதாகவே கருதுகிறேன்' என்று கூறும் நர்கீஸþக்கு, மேக்கப் போட்டுக் கொள்வதில் பொறுமையே கிடையாதாம்.
திரையுலக அனுபவத்தைப் பற்றி என்ன சொல்கிறார்? பாலிவுட் கனவுடன் இந்தியா வந்த பின்புதான் இங்கு வசிப்பது அத்தனை சுலபமல்ல என்று தெரிந்தது. கடந்தகால அனுபவம் வாழ்க்கையில் எதிர்மாறாக ஒதுங்கியிருக்கவே தூண்டுகிறது. 12 வயதில் பெரியவளானவுடன் மளமளவென்று வளரத் தொடங்கினேன். மற்றவர்கள் என்னை அனுதாபத்துடன் பார்த்தபோது, நான் எதிர்காலத்தைப் பற்றி நினைத்தேன். வாழ்க்கைக்குத் தேவையான சக்தியைப் பெற்றேன்.
அதுவரை என்னுடைய வாழ்க்கை ஒரு நாடோடிபோல் 20 குடும்ப உறுப்பினர்களுடன் கழிந்தது. என்னுடைய வீட்டை அலங்கரிக்கக் கூட எனக்கு நேரம் இல்லை. தற்போது அபார்ட்மெண்ட் ஒன்றில் வாடகைக்கு குடியிருக்கிறேன். ஓராண்டுக்கு பின்னரே அனைத்து பொறுப்புகளையும் உணர்ந்தேன். என்னுடைய அறை சுவர்களுக்கு பெயிண்ட் அடித்தேன். மகிழ்ச்சியான நாட்களை நினைவுபடுத்த சில புகைப்படங்களை மாட்டி வைத்திருக்கிறேன். புத்தர், விநாயகர் சிலைகளை வைத்த பின்னரே வீடு என்பது முழுமை பெற்றது.
சொந்தமாக வீடு வாங்குவதில் எனக்கு உடன்பாடில்லை. அதில் பணத்தை முதலீடு செய்வது அவசியமா என்று தோன்றுகிறது. நான் தனிமையில் வசிக்க தொடங்கியது முதல் உணவு விஷயத்தில் நான் மிகவும் கட்டுப்பாட்டுடன் இருக்கிறேன். படிப்பதிலும், ஆவணப் படங்களைப் பார்ப்பதிலும் ஆர்வம் உண்டு.
வேதங்கள் கூறும் ஜோதிடத்தில் எனக்கு நம்பிக்கை உண்டு. அது ஒரு சயின்ஸ். எனக்கென்று ஒருபட்டியலை தயாரித்திருக்கிறேன். துல்லியமாக எதையும் என்னால் கணிக்க முடியும். உண்மைதான் நான் எதிர்காலத்தை கூறுபவளாக விளங்க வேண்டுமென்று ஆசைப்படுகிறேன். அதை வளர்த்துக் கொள்வதில் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறேன். வாழ்க்கையில் இழப்பதற்கு எதுவுமே இல்லை. எனக்கென்று கடவுள் அமைத்த விதிப்படித்தான் எல்லாமே நடக்குமென்பதை நான் நம்புகிறேன்.
ஒருவேளை தனிமையில் வாழ்வதால் ஆன்மிகத்தில் நாட்டம் ஏற்படுகிறதோ என்று கூட நினைப்பதுண்டு. பாசிடிவ் - நெகடிவ் இரு சக்திகளுக்குமிடையே உள்ள வித்தியாசத்தை உணர்ந்துள்ளேன். உங்களுடைய வாழ்க்கையில் சிலர் உள்ளே வருவதும் சிலர் வெளியேறுவதற்கும் கூட அர்த்தம் உள்ளது. எனக்கு இதில் சூப்பர் சென்சிடிவ் சக்தி உண்டு.
என்னுடன் நடிப்பவர்களுடன் நட்பை வளர்த்துக்கொள்ள வேண்டுமென்று நான் கருதியதில்லை. நட்பை வளர்த்துக் கொள்ள பலமான அஸ்திவாரம் போட உடன் நடிப்பவர்களின் பணிகளுக்கிடையே நேரமும் இருப்பதில்லை. எப்போதாவது சந்தித்துக் கொண்டால் உண்டு.
என்னுடைய குடும்பத்தைவிட்டு நான் விலகியே இருக்கிறேன். அண்மையில் ஒருவாரம் வீட்டிற்கு சென்றபோது கூட குடும்பத்தினரைச் சந்தித்துப் பேச நேரம் கிடைக்கவில்லை. இந்த மும்பை எனக்கு எப்போது என்னுடைய இருப்பிடமாக மாறும் என்பதும் தெரியவில்லை.
இவரது அனுபவங்களை கேட்கும்போது இவர் ஒரு வித்தியாசமாணவர் என்பதுமட்டும் தெரிகிறது.