முகப்பு
தினமணி கதிர்

தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்

சர்க்கரை நோய், இரத்த அழுத்தம் இருப்பவர்கள் குளிர்காலத்தில் குளிரில் எந்த வேலையையும் வைத்துக் கொள்ளக் கூடாது.

Updated On : 5 ஏப்ரல், 2015 at 8:59 AM
பகிர்:
Updated On : 9 ஜனவரி, 2024 at 10:35 AM

* சர்க்கரை நோய், இரத்த அழுத்தம் இருப்பவர்கள் குளிர்காலத்தில் குளிரில் எந்த வேலையையும் வைத்துக் கொள்ளக் கூடாது. அதிகாலையில் எழுந்து போகும் பழக்கத்தை குளிர் காலம் போகும் வரை மாற்றிக்கொள்ள வேண்டும்.

* துளசி இலை போட்ட நீரை தினசரி குடித்து வந்தால் மூளை பலம் பெறும்.

* * கேஸ் சிலிண்டரை தரையில் படுக்க வைத்துப் பயன் படுத்தக் கூடாது. சமையல் எரிவாயு மேல் நோக்கிப் போவது போல் சிலிண்டர் அமைக்கப்பட்டிருப்பதால் படுக்க வைத்துப் பயன்படுத்தும்போது வாயு மேலே செல்லும் வேகம் குறையும். அதனால் கேஸ் வீணாகும். அது மட்டுமில்லாமல் படுக்க வைத்துப் பயன்படுத்தும்போது கேஸ் கசிய வாய்ப்பு அதிகம். ஜாக்கிரதை.

Advertisement

* வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்ப  அதிகாலை அல்லது இரவு நேரமே சிறந்தது. குளிர்ச்சியாக இருக்கும்போதுதான் எரிபொருள் அடர்த்தியாக இருக்கும். வெப்பம் அதிகமான மதிய வேளையில் எரிபொருள் விரிவடையும். அந்த நேரத்தில்  பெட்ரோல், டீசல் நிரப்பினால் அளவு சற்று குறைவாக இருக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.