ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: கர்ப்பிணிகளின் கவனத்துக்கு...
குழந்தைகள் எதிர்காலத்தின் பிரஜைகளாகக் கருதப்படுகிறார்கள். உடல் வலிமை, மனோதிடம் ஆகியவற்றை தாய்
என் மகள் தற்போது கர்ப்பமுற்றிருக்கிறாள். கர்ப்பகாலத்தில் கடைபிடிக்கவேண்டிய விதிமுறைகள் எவை? தற்சமயம் உடற்பயிற்சி செய்வது நல்லதா? ஒவ்வொரு மாதமும் கடைபிடிக்கவேண்டியவற்றையும் ஆயுர்வேதமுறைப்படி தெளிவுபடுத்துங்கள்.
கே.அலமேலு, கோவில்பட்டி.
குழந்தைகள் எதிர்காலத்தின் பிரஜைகளாகக் கருதப்படுகிறார்கள். உடல் வலிமை, மனோதிடம் ஆகியவற்றை தாய் தந்தையரிடமிருந்து குழந்தைகள் பெறுகின்றன.
Advertisement
நோய்வாய்ப்பட்ட பெற்றோர் மற்றும் கவனமற்ற தாய்களாலும், குழந்தைகள் நன்றாக வளர்க்கப்படுவதில்லை. குழந்தை பிறந்த பிறகு தான் அதன் போஷாக்கை கவனிக்க வேண்டுமென்பதில்லை. ஒரு பெண் கர்ப்பமுற்றாள் என்று தெரிந்தவுடன் அவள் அனுசரிக்கவேண்டிய சில நியமங்களை Anti natal care என்று சொல்வார்கள்.
மாதவிடாய் நிற்பது மட்டும் ஒரு கர்ப்பத்தின் லட்சணம் இல்லை. உடல் மெலிவது, சோம்பல் உறுவது, தொடைகளின் பலக்குறைவு. அடிவயிற்றில் கனம். கண்ணைச் சுற்றி ஒரு கருமை. கண் இதழ்கள் கீழ் நோக்கிடுதல், காரணமின்றி வாந்தி, வாய் குமட்டல், வாயில் நீர் ஊறுதல் போன்றவையும் ஏற்படும். கர்ப்பம் தரித்த பெண் கடும் வேலைகளைத் தவிர்க்க வேண்டும். அதிக உணவு, குறைந்த உணவு, பகல் தூக்கம், இரவில் கண் விழிப்பது, துக்கப்படுவது, பயப்படுவது, தனிமையில் இருப்பது, கரடுமுரடான இடங்களில் வாகனத்தில் பயணம் செய்வது போன்றவற்றைத் தவிர்க்கவேண்டும்.
அவள் சாப்பிடும் உணவானது கர்ப்பத்திலிருக்கும் சிசுவிற்கும் போஷாக்கைக் கொடுப்பது, எந்த உணவு மனதிற்குப் பிடித்தமாகவும், தாய்க்கும், சேய்க்கும் போஷாக்கைக் கொடுக்கக்கூடியதாகவும் இருக்கிறதோ அதையே உண்ண வேண்டும். கூடுமானவரையில் காரம், புளிப்பு, துவர்ப்பு, உப்பு சேர்ந்த உணவைத் தவிர்க்க வேண்டும்.
இனிப்பும் கொழுப்பும் அதிகரித்த உணவை உண்ணவேண்டும். கர்ப்பத்தின் வளர்ச்சிக்கு தகுந்த மாதிரியும், கால தேசங்களை அனுசரித்தும் உணவு மாற்றப்படவேண்டும்.
கர்ப்பிணி முதல் மூன்று மாதங்களில் இனிப்பு அதிகமாகவும், குளிர்ச்சியுள்ளதும் திரவமான உணவையும் அதிகமாகச் சாப்பிடவேண்டும். அன்னத்தைப் பாலுடன் சாப்பிடலாம். நான்காவது மாதத்தில் அன்னத்தைத் தயிருடனும், ஐந்தாவது மாதத்தில் நெய்யுடனும் உண்ணலாம். பொதுவாக பாலும் வெண்ணெய்யும் நான்காவது
மாதத்தில் சாப்பிடவேண்டும். ஆறாவது மாதத்தில் நெருஞ்சில் கஷாயத்தில் காய்ச்சிய நெய்யையும், ஏழாவது மாதத்தில் ஓரிலை சாற்றுடன் காய்ச்சிய நெய்யையும் உபயோகித்தல் நல்லது. பழைய உணவும், கெட்டுப்போனதும், மது போன்ற லாகிரி வஸ்துக்களையும் தவிர்க்க வேண்டும்.
கர்ப்பிணி போதுமானவரையிலும் உடற்பயிற்சி செய்யவேண்டும். உடற்பயிற்சி உண்ட உணவை ஜீரணம் செய்கிறது, இரத்த ஓட்டத்தைச் செம்மைப்படுத்துகிறது.
மலச்சிக்கலை நீக்குகிறது, சற்று அயர்வு உண்டாக்கி நல்ல தூக்கத்தை உண்டு பண்ணுகிறது. அதிகமான காற்றைச் சுவாசிப்பதால் நரம்புகளுக்கும், மனதிற்கும் தெளிவை உண்டு பண்ணுகிறது. ஆக உடற்பயிற்சி அதிக அயர்வு ஏற்படாத வரையில் கர்ப்பிணிகளுக்கு அவசியமாகிறது.
கர்ப்பிணிகள் அவ்வப்போது தமது சிறுநீரைப் பரிசோதித்து அதில் உப்பு (அல்புமின்) இல்லாமல் இருக்கிறதா? என்று அறிந்து கொள்ள வேண்டும். கண் இமைகளைச் சுற்றி வீக்கமும், காலில் வீக்கமும் இருந்தால் சிறுநீரைப் பரிசோதிப்பது அவசியமாகிறது. இது கர்ப்பிணிகளுக்கு வரக்கூடிய கெடுதலான வலிப்பை (Eclampsia) முன் ஜாக்கிரதையுடன் நிறுத்த உதவுகிறது . மேலும் அடிக்கடி இரத்த அழுத்தம் ஒழுங்காய் இருக்கிறதா? என்று பரிசோதித்துத் தெரிந்து கொள்ள வேண்டும். உடலுக்கும்
மனதிற்கும் பதட்டத்தையும், வேதனையையும் கொடுக்கக்கூடிய எல்லாவற்றையும் தடுக்கவேண்டும். மனதிற்கும், உடலுக்கும் நெருங்கிய தொடர்பிருப்பதால் அது கர்ப்பத்தை பாதிக்கக் கூடும். அதனால் கவலையற்று சந்தோஷமாக இருக்கவேண்டியது அவசியம்.
கர்ப்பம் தரித்த 16வது வாரத்திலிருந்து கர்ப்பத்திலிருக்கும், சிசுவிற்கு மனதிற்கு இருப்பிடமான இதயம் உற்பத்தியாகிறது. அப்பொழுது, தாய்க்கு சில சில தவிர்க்கமுடியாத ஆசைகள் உண்டாகின்றன. இதற்கு இருஇதயங்கள் கொண்டவள் என்று அழைக்கிறோம். தமிழில் மசக்கை என்றும் கூறுவார்கள். கர்ப்பிணிக்கு எந்தெந்த ஆசைகள்
நிறைவேற்றக் கூடியதாக இருக்கின்றனவோ, அவைகளை நிறைவேற்றி வைக்க வேண்டும். இல்லாவிட்டால், கர்ப்ப வளர்ச்சி தடைபடும். நன்றாக வளராததோடு குழந்தை அங்கஹீனங்களுடன் பிறக்கும். மசக்கை நிறைவேறினால் குழந்தை திடகாத்திரமாகவோ, நீண்ட ஆயுளுள்ளதாகவோ பிறக்கும். தாயினுடைய மனசுபாவத்தையொட்டி குழந்தையினுடைய பிறப்பும் இருக்கும்.
ஆயுர்வேத மூலிகை மருந்துகளாகிய கர்ப்பரக்ஷô எனும் மாத்திரையை உள்ளுக்குச் சாப்பிடுவதும், தான்வந்தரம் தைலத்தை வெதுவெதுப்பாக வயிற்றின்மீது தடவி மிதமான வெந்நீரில் குளிப்பதும் பிரசவம் எளிதாக ஆவதற்கான வழிகளை ஏற்படுத்தித் தரும். இதன்மூலம் சிசேரியன் ஆபரேஷனைக் கூட சிலரால் தவிர்க்க முடிகிறது.
(தொடரும்)
ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரி,
நசரத்பேட்டை - 600 123 (பூந்தமல்லி அருகே)
செல் : 94444 41771