தினமணி கதிர்

திரைக் கதிர்

உலக சினிமாக்களில் மரியோ புஸ்úஸôவின் புகழ் பெற்ற நாவலான "காட் ஃபாதர்' நாவலின் கதைக் கருவை பலர் படங்களாக எடுத்து விட்டனர்.

ஜி. அசோக்

உலக சினிமாக்களில் மரியோ புஸ்úஸôவின் புகழ் பெற்ற நாவலான "காட் ஃபாதர்' நாவலின் கதைக் கருவை பலர் படங்களாக எடுத்து விட்டனர். எந்தச் சூழலுக்கும் பொருந்தும் கதை என்பதால் இந்த நாவலைத் தழுவி நிறையப் படங்கள் உருவாகி விட்டன. நாயகன், தேவர் மகன், புதுப்பேட்டை, தலைவா என தமிழிலும் இந்நாவலைத் தழுவி படங்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. தற்போது கெüதம் மேனனும் இந்த நாவலின் சாரம்சத்தின் ஒரு பகுதியைத்தான் சிம்பு நடிக்கும் "அச்சம் என்பது மடமையடா' படத்தின் கதைக் கருவாக எடுத்து வருகிறார். இந்த நாவலில் இடம்பிடித்துள்ள காதல் பகுதிதான் கெüதம் மேனன் தன் படத்தில் கையாண்டிருக்கும் கதைக்கருவாம். பெரும்பான்மையான படப்பிடிப்புகள் நடந்து முடிந்துவிட்ட நிலையில், ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு என உருவாகிவரும் இப்படத்தில் நாயகியாக மஞ்சிமா மோகன் நடித்துவருகிறார். தெலுங்கில் நாக சைதன்யா ஹீரோவாக நடிக்க ஹீரோயினாக தெலுங்கிலும் மஞ்சிமா மோகன் தான் நடிக்கிறார். படத்திற்கு இசை ஏ.ஆர்.ரஹ்மான்.

"தூங்காவனம்' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் தனது அடுத்தப் படத்துக்கான கதை விவாதங்களில் இறங்கியுள்ளார் கமல்ஹாசன். குறுகிய காலத் தயாரிப்பாக உருவாகியுள்ள "தூங்காவனம்' படத்தின் இறுதிக் கட்டப் பணிகள் தற்போது நடந்து வரும் நிலையில், தீபாவளிக்கு அப்படத்தை வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தப் படம் வெளியாகும் முன்னரே தனது அடுத்தப் படத்தின் படப்பிடிப்புகளில் கமல் இறங்கி விடுவார் என்கிறது அவரது அலுவலக வட்டாரங்கள். "உத்தமவில்லன்' படவெளியீடு சமயத்தில் எழுந்த சிக்கலையொட்டி ஒருபடத்தில் நடித்துக் கொடுப்பதாக ஒப்புக்கொண்டிருந்தார் கமல். "பாபாநாசம்' படவெளியீடு சமயத்தில் அந்தப் படம் தொடர்பாக நடந்த பேச்சுவார்த்தைகளின்படி "தூங்காவனம்' படத்தை முடித்துவிட்டு பேசியபடி ஒருபடம் செய்கிறேன் என்று கமல் உறுதி கூறியதாகச் சொல்லப்பட்டது. இப்போது அந்தப் படத்தின் வேலைகள் தொடங்கியிருக்கின்றனவாம். அடுத்த படத்தை நடிகர் மெüலி இயக்கப் போகிறார் என்று செய்திகள் வந்திருக்கின்றன. அவர் ஏற்கெனவே கமல் தயாரிப்பில் "நளதமயந்தி' படத்தையும் கமல் நடிப்பில் "பம்மல்கேசம்பந்தம்' படத்தையும் இயக்கியிருக்கிறார்.

சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித்தின் 56-ஆவது படமாக உருவாகி வரும் படத்தை ரஜினியின் "பாட்ஷா' படத்தோடு ஒப்பிட்டுப் பேசப்பட்டு வருகிறது. ரஜினி போலவே அஜித்துக்கு டாக்ஸி டிரைவர் வேடம் என்பதால் ஏறக்குறைய பாட்ஷாவின் தழுவலாக இப்படம் உருவாகி வருவதாகச் சொல்லப்படுகிறது. அஜித் நடிக்கும் படத்தின் திரைக்கதை சென்னை மற்றும் கொல்கத்தாவில் நடப்பதுபோல அமைக்கப்பட்டுள்ளது. ஓரிடத்தில் பெரிய ரவுடியாக இருக்கும் அஜித் இன்னொரு ஊருக்கு வந்து அமைதியாக வாழுகிறார் என்பதுதான் கதையின் சாரம்சம். இவற்றால் இந்தப் படம் ரஜினியின் "பாட்ஷா' போலவே இருக்கிறது என்றும், அந்தப் படத்தைத் திரும்ப எடுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்றும் கோலிவுட்டில் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. ஆனால் "பாட்ஷா' படத்துக்கும் இதற்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன என படக்குழு மறுப்பு தெரிவித்துள்ளது. அப்படி என்ன வேறுபாடு என விசாரித்தால், அஜித்தின் அன்புத் தங்கையான லட்சுமிமேனனுக்கு ஆபத்து ஏற்படுகிறது. அந்த ஆபத்தை விளைவித்தவர்களுக்கு எதிராக அமைதியாக இருக்கும் அஜித் பொங்கி எழுகிறார் என்பதுதான் லைன் என்கிறது படக்குழு. பாட்ஷா படத்துக்கான லைன் இதில் இருந்தாலும் கதை சொல்லப்படுகிற சூழல்தான் திரைக்கதையின் புதுமையாம்.

பிரபுசாலமன் இயக்கத்தில் தற்போது நடித்து வரும் படம் முடிந்ததும் துரை செந்தில்குமாரின் இயக்கத்தில் நடிக்கிறார் தனுஷ். இந்தப் படத்துக்காக முதன் முறையாக இரட்டை வேடங்கள் ஏற்கிறார். ஜனவரி முதல் வாரத்தில் இருந்து படப்பிடிப்பு தொடங்குகிறது. படத்துக்கான மற்ற நடிகர், நடிகைகள் தேர்வு நடந்து வரும் நிலையில், தனுஷின் ஜோடியாக பாலிவுட் நடிகை வித்யாபாலனை நடிக்க வைக்கும் முயற்சிகளில் படக்குழு இறங்கியுள்ளது. அண்ணன் - தம்பி என இரட்டை வேடங்களில் அண்ணனாக வேடம் ஏற்கும் தனுஷுக்கு ஜோடியாக வித்யாபாலன் நடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. கதைப்படி இந்த வேடம் மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது. அதனால் அந்த வேடத்துக்கு வித்யாபாலனைத் தேர்வு செய்துள்ளதாக இயக்குநர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வித்யாபாலனைத் தொடர்பு கொண்டு கதை சொல்லும் முயற்சிகள் நடந்து வருகின்றன. வித்யாபாலன் ஒப்புக் கொண்டால் படத்துக்கு விளம்பரம் மட்டுமின்றி வியாபாரமும் பெரிதாகும் என்று நம்புகிறார்கள். இப்படத்தில் வித்யாபாலன் நடிப்பது உறுதியானால் அவர் நடிக்கும் முதல் தமிழ்ப் படம் இதுவாகும். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்ப் படம் ஒன்றில் நடிக்கத் தேர்வாகி பின் பாலிவுட்டில் முன்னணணி இடம் பிடித்தவர் வித்யாபாலன்.

"ரோமியோஜூலியட்' படத்தைத் தயாரித்த நிறுவனம் அடுத்து தயாரிக்கும் படமொன்றில் விக்ரம்பிரபு கதாநாயகனாக நடிக்கிறார். இந்தப் படத்தை அருள்நிதி நடித்த "தகராறு' படத்தை இயக்கிய கணேஷ்விநாயக் இயக்கவிருக்கிறார். சுகுமார் ஒளிப்பதிவு செய்கிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. படத்துக்கான மற்ற நடிகர், நடிகைகள் தேர்வு நடந்து வரும் நிலையில், விக்ரம் பிரபு ஜோடியாக நடிக்க ஹீரோயின் தேர்வும் நடந்து வருகிறது. விக்ரம் பிரபு இப்போது ஜி.என்.ஆர்.குமரவேலன் இயக்கும் "வாகா' படத்தின் படப்பிடிப்பில் இருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் நடந்து வரும் நிலையில், இப்படம் முடிந்த பின்னரே கணேஷ்விநாயக் படத்துக்கு வருகிறாராம். இந்தப் படத்தில் விக்ரம்பிரபு ஜோடியாக நடிக்கப் பல நாயகிகளைத் தேடிக் கடைசியாக அஜீத்தின் மனைவி ஷாலினியின் தங்கை ஷாம்லியை ஒப்பந்தம் செய்திருப்பதாகத் தெரிகிறது. ஷாம்லி சில ஆண்டுகளுக்கு முன்பாக ஒரு தெலுங்குப்படத்தில் நடித்தார். அந்தப்படம் தோல்வியடைந்ததால், மேலும் படங்களில் நடிப்பதற்கான ஆர்வம் இல்லாமல் இருந்து வந்தார். தமிழில் ஏற்கெனவே பல பட வாய்ப்புகள் தேடி வந்த நிலையில் இப்போது விக்ரம் பிரபுவின் பட வாய்ப்பை ஏற்றுக் கொண்டுள்ளார்.

சிம்புதேவன் இயக்கத்தில் விஜய்யின் "புலி' வரும் செப்டம்பர் 17-ஆம் தேதி வெளியாகும் என படப்பிடிப்புத் தொடங்குவதற்கு முன்பே திட்டமிடப்பட்டது. அதற்குத் தகுந்தவாறு படப்பிடிப்பு மற்றும் படத்தின் இறுதிக் கட்ட பணிகள் நடந்து வந்தன. ஆனால் இப்போது அந்த தேதியில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அக்டோபர் 1-ஆம் தேதியில்தான் படம் வெளியாகும் என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 17-ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விடுமுறை. வியாழக்கிழமையில் விநாயகர் சதுர்த்தி என்பதால், வியாழன், வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நான்கு நாட்கள் நல்ல வசூல் இருக்கும் என்று நினைத்துத்தான் அந்தத் தேதியில் படத்தை வெளியிட முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில் படத்துக்கான கிராபிக்ஸ் வேலைகள் மீதம் இருப்பதால் செப்டம்பர் 17-ஆம் தேதிக்குள் படம் தயாராகாது என்பதால் படத்தை வெளியிடுவது அக்டோபர் 1 -ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. இது பற்றிப் படக்குழு வட்டாரங்களில் விசாரித்தால், இதுவரை எந்தத் தேதியில் படத்தை வெளியிட இருக்கிறோம் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. படத்துக்கான கிராபிக்ஸ் வேலைகள் மீதம் உள்ளன. அந்த வேலைகள் முடிந்த பின்னரே படம் வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா

வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!

வாக்காளர் இறுதிப் பட்டியல்: புதுக்கோட்டையில் 12.98 லட்சம் பேர்!

வாக்காளர் இறுதிப் பட்டியல்: ஈரோட்டில் 17 லட்சத்து 40 ஆயிரம் பேர்!

மேற்கு வங்க அரசியல் சாணக்கியர் முகுல் ராய் காலமானார்!

SCROLL FOR NEXT