முகப்பு
தினமணி கதிர்

வீட்டுத்தோட்டம் - பயன்படும் டிப்ஸ்

ரோஜாச் செடி நடும்போது கூடவே இரண்டு, மூன்று சிறிய வெங்காயத்தை ஊன்றி வையுங்கள். ரோஜாச் செடியை

Updated On : 15 பிப்ரவரி, 2015 at 3:22 PM
பகிர்:
Updated On : 9 ஜனவரி, 2024 at 10:14 AM

* ரோஜாச் செடி நடும்போது கூடவே இரண்டு, மூன்று சிறிய வெங்காயத்தை ஊன்றி வையுங்கள். ரோஜாச் செடியை பூச்சி, புழுக்கள் அண்டாது.

* உங்கள் வீட்டுத் தோட்டத்தில் மா மரம் காய்க்காமல் இருக்கிறதா? மா மரத்தின் பட்டையை வேரிலிருந்து மேலாக 5 செ.மீ அல்லது 6 செ.மீ உயரத்துக்கு உரித்துவிட்டு தினமும் தண்ணீர் ஊற்றி வரவும். அடுத்த சீசனில் நிறைய பூத்துக் காய்க்கும்.

* ரோஜா, துளசி போன்ற செடிகளுக்கு காலையில் வெயில் வரும்முன்னும் மாலையில் வெயில் போன பின்னும் தண்ணீர் ஊற்றுவதோடு இலைகளின் மீதும் பரவலாக படும்படி ஊற்றினால் செடிகளுக்கு நல்ல பாதுகாப்பு கிடைக்கும்.

Advertisement

* பூந்தொட்டியினுள் ஆற்று மணலும் அதற்கு மேலே செம்மண்ணும் கலந்து செடிகள் நட, ஆற்று மணல் ஈரப்பதத்துடன் இருந்து செடிகளை வாடாமல் பாதுகாக்கும்.

* ரோஜாச் செடி அழகாக நிறையப் பூக்கள் பூக்க பீட்ரூட்டின் தோலையும், வேக வைத்த உருளைக்கிழங்கின் தோலையும் உரமாகப் போட வேண்டும்.

* வெயில் காலத்தில் மிக அதிகாலையில் தண்ணீர்விட வேண்டும். மாலையிலும் நன்றாக வெயில் தாழ்ந்த பின்னரே நீர்விட வேண்டும். இதனால் நீண்டநேரம் மண்ணில் ஈரப்பதம் இருக்கும்.

* செடித் தொட்டிகளில் தண்ணீர் விட்டபின் ஓரிரு பாலிதின் விரிப்பால் சற்று இடைவெளிவிட்டு பரத்தி ஒரு கல்லை வெயிட்டாக வைத்துவிட்டால் லேசில் நீர் ஆவியாகாது.

* பழம், காய் நறுக்கிய தோலை மிக்ஸியில் ஒரு நிமிஷம் அடித்து செடிக்கு ஊற்றி மண்ணால் மூடவும். செடிகளுக்கு சத்தான இயற்கை உரம் கிடைக்கும்.

* தேங்காய் கொட்டாங்குச்சியைப் பிசிறு நீக்கி அழகிய வர்ணம் அடித்து மூன்று துளைகள் இட்டு அதில் நைலான் கயிறைக் கட்டவும். சிறிது மணல் நிரப்பி மணிபிளாண்ட் செடியை நட்டு ஆணியில் மாட்டினால் அழகாக இருக்கும்.

* வீட்டில் சூரியகாந்திச் செடிகளை விரும்பி வளர்த்தால் வீட்டில் யாருக்கும் ஜலதோஷம் எட்டிப் பார்க்காது. துளசி செடிகள் வளர்த்தால் கொசுக்கள் படை எடுத்து வராது. வேப்ப மரத்தால் நல்ல ஆக்சிஜன் கிடைக்கும். வீட்டின் முகப்பில் வேப்ப மரம் வைப்பது நல்லது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.