தினமணி கதிர்

மயங்கினார் மன்னர்!

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ஆரல்வாய்மொழி என்னும் ஊரில், ஓர் ஆன்மிக மாநாடு நடந்தது. இந்த மாநாட்டிற்கு தில்லியில் அமைச்சராக இருந்த கைலாசநாத

முக்கிமலை நஞ்சன்

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ஆரல்வாய்மொழி என்னும் ஊரில், ஓர் ஆன்மிக மாநாடு நடந்தது. இந்த மாநாட்டிற்கு தில்லியில் அமைச்சராக இருந்த கைலாசநாத கட்ஜ் தலைமை தாங்கினார். வடக்கு தெற்கு இரண்டிலும் எதற்குப் பெருமை அதிகம் என்ற விவாதம் மாநாட்டில் ஏற்பட்டுவிட்டது. இந்த நிலையில் வாரியார் ஸ்வாமிகள் பேச எழுந்தார்.

 "சிலர் கேட்கலாம்; வடக்கேதான் நிலப்பரப்பு விசாலமாக இருக்கிறது. தெற்கே நிலம் குறுகியிருக்கிறது. அதனால் தென்னாடு குறுகிய நாடு என்று வாதிடலாம். குறுகியிருப்பதனால் ஒரு பகுதிக்குச் சிறுமை உண்டாகி விடாது. இளநீர் வெட்டுகின்ற கத்திக்குப் பின்பக்கம் விசாலமாக இருக்கும். முன்பக்கம் கூராக இருக்கும். கத்தியின் விசாலமான பகுதியா வேலை செய்யும்? கூரான பகுதிதானே வேலை செய்யும்''

 இப்படி வாரியார் சுவைபடச் சொற்பொழிவாற்றியதும் எழுந்த கரவொலி கடலோசையைத் தோற்கடித்தது. இந்த அருமையான விளக்கத்தில் மனதைப் பறிகொடுத்த திருவிதாங்கூர் மகாராஜா, தன் அரண்மனைக்கு வாரியாரை அழைத்து மரியாதைகள் செய்து பாராட்டினார். பாமரர்களுக்காகச் சொற்பொழிவு செய்து வந்த வாரியார் ஓர் அரசப் பரம்பரையின் சிவப்புக் கம்பள வரவேற்பைப் பெற்று, அரண்மனை என்றால் என்ன என்பதை அப்போதுதான் உணர்ந்து கொண்டாராம். மன்னரையே மயக்கிய சொற்பொழிவாளர் இவர்.

("வரலாறாய் வாழ்ந்தவர்கள்' என்னும் நூலிலிருந்து)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்திய அணிக்கு இதுதான் சரியான பிளேயிங் லெவன் | T20 World Cup Review

தோ்தல் வந்துவிட்டால் பாஜக 'சோதனை' என்று சிபிஐயை பயன்படுத்தும்: கனிமொழி எம்.பி.

”மேஷ ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

Abhishek Sharma-விடம் Gautam Gambhir என்ன பேசினார்? | T20 World Cup Review

இஸ்ரேலுக்குச் செல்லும் பிரதமர் மோடி: நெதன்யாகுவுடன் புதன்கிழமை சந்திப்பு!

SCROLL FOR NEXT