முகப்பு
தினமணி கதிர்

சீனாவில் ஓர் இந்தியருக்கு நினைவு மண்டபம்

மகாராஷ்டிர மாநிலத்தில் ஷோலாப்பூரில் 1910ஆம் ஆண்டு பிறந்தவர் டி.எஸ்.கோட்னிஸ். 12 பிள்ளைகளைப் பெற்ற அவரது பெற்றோருக்கு இவரும் ஒரு பிள்ளை. மிகுந்த ஏழ்மையில் வாடியது இவரின் குடும்பம். ஆனால், கோட்னிஸ் வறுமையை வென்று நன்கு படித்தார்.

Updated On : 24 ஜனவரி, 2024 at 4:49 PM
பகிர்:

மகாராஷ்டிர மாநிலத்தில் ஷோலாப்பூரில் 1910ஆம் ஆண்டு பிறந்தவர் டி.எஸ்.கோட்னிஸ். 12 பிள்ளைகளைப் பெற்ற அவரது பெற்றோருக்கு இவரும் ஒரு பிள்ளை. மிகுந்த ஏழ்மையில் வாடியது இவரின் குடும்பம். ஆனால், கோட்னிஸ் வறுமையை வென்று நன்கு படித்தார்.

ஒருநாள் இளைஞனாக இருந்த கோட்னிஸ் அவர்களைப் பார்த்த ஒரு பெரியவர் கேட்டார் ""தம்பி! நீ எதிர்காலத்தில் என்னவாகப் போகிறாய்?'' என்று. அதற்கு கோட்னிஸ் உடனே, ""நான் மருத்துவராகப் போகிறேன்'' என்று பதில் சொன்னார்.

""நீ ஏன் டாக்டராகப் போகிறாய்?'' என்று அந்தப் பெரியவர் கேட்டார். கோட்னிஸ் புன்னகையோடு ""ஐயா, இப்போது (1930) நம் நாட்டில் இந்தியர்களின் சராசரி வயது 26தான். ஆனால் வெள்ளைக்காரர்களின் சராசரி வயது 70 ஆக உள்ளது. நான் நமது நாட்டு மக்களின் சராசரி வயதினை உயர்த்துவதற்காக மக்களுக்கு நல்ல மருத்துவ வசதிகளைச் செய்ய வேண்டும்'' என்று பதில் சொன்னார்.

மருத்துவக் கல்லூரியில் முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்றார். ஏழைகளுக்கு மருத்துவம் செய்வதைத் தெய்வீகப் பணியாகக் கருதினார். இவரது மருத்துவத் திறமையைக் கண்ட பல பெரிய மருத்துவமனைகள் இவரை மிகுந்த சம்பளம் தந்து அழைத்தார்கள். ஆனால் கோட்னிஸ் தம் மருத்துவர் பணியை ஏழை மக்களுக்காகவே தொடர்ந்தார்.

இந்தச் சூழலில் சீனாவுக்கும் ஜப்பானுக்கும் இடையில் போர் நடந்து கொண்டிருந்தது. சீனா, ஜப்பானின் ஆதிக்கத்தை எதிர்த்துப் போராடிய வேளையில் போரில் காயம்பட்ட வீரர்களுக்கு மருத்துவ உதவி வேண்டி கோட்னிûஸ மீண்டும் மீண்டும் அழைத்தது. அங்கே தனக்குச் சரியான சம்பளமும் கிடைக்காது. சாப்பாடும் இருக்காது என்பது தெரிந்தும் மனிதாபிமான அடிப்படையில் அங்கு சென்று உதவினார்.

போர் முடிவுற்றபோது சீனர்களின் மிகுந்த வற்புறுத்தலுக்குச் செவிசாய்த்து அங்குள்ள மருத்துவக் கல்லூரியில் பேராசிரியராகப் பணி செய்தார்.

சீன மொழியில் மருத்துவ நூல்களையும் எழுதினார். எளிய மனிதராக, அரிய மனிதராக அவர் இறுதிவரை மருத்துவப் பணி செய்தார். அவரது நினைவாகச் சீனாவில் ஒரு நினைவு மண்டபம் நிறுவப்பட்டுள்ளது. சீன அரசு இந்திய மருத்துவரைக் கௌரவித்து நன்றி பாராட்டியது.

முழு கட்டுரையைப் படிக்க →