உத்தர பிரதேச மாநிலத்தின் தலைநகரம் லக்னோவில் கான்பூர் சாலை, டி.ஏ. காலனியில் இயங்கும் சி டிமாண்டி, மாணவ மாணவியர் இணைந்து படிக்கும் பள்ளியாகும்.
இந்த பள்ளி 2013- இல் இரண்டாவது தடவையாக உலக கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றது.
2010- ஆம் ஆண்டு ஆகஸ்டு 9-ஆம் தேதி இந்த பள்ளி மாணவ, மாணவியரின் மொத்த எண்ணிக்கை 39,437 ஆக இருந்தது.
1959- இல் டாக்டர் பாரதி மற்றும் டாக்டர் ஜகதீஷ்காந்தி இணைந்து இந்த பள்ளியைத் துவக்கினர்.
300 ரூபாய் கடன் பெற்று, ஒரு வாடகை கட்டடத்தில், 5 மாணவர்களுடன் இப்பள்ளி துவங்கியது.
இன்று இந்த பள்ளி லக்னோவில் 20 இடங்களில் இயங்குகிறது.
பதிவு செய்து வைத்துள்ளவர்களின் எண்ணிக்கையையும் சேர்த்தால் மாணவ, மாணவியரின் எண்ணிக்கை 45 ஆயிரத்தைத் தாண்டும்.
சமீபத்தில் உலகின் மிகப்பெரிய ஒற்றை ஸ்டில் போட்டோ இங்கு எடுக்கப்பட்டது. இதில் முன்னாள், இன்னாள் மாணவர்கள் இணைந்து 50,000 பேர்போஸ் கொடுத்தனர்.
3000 ஆசிரியர்கள்.. 3700 கம்ப்யூட்டர்கள். 1000 வகுப்பறைகள் என எல்லாமே இங்கு சாதனைதான்.
இந்த பள்ளியில் 3 வயதிலிருந்து 17 வயது வரை கொண்ட மாணவர்கள் படிக்கின்றனர்.
2005-ஆம் ஆண்டே இந்த பள்ளி முதல் தடவையாக கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றது. அப்போது அதன் மாணவ - மாணவியர் கூட்டுத் தொகை 29212.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.