தினமணி கதிர்

மைக்ரோ கதை

தினமணி

தினம் தினம் அம்மா - மனைவியிடையே நடக்கும் போராட்டத்தில் இருந்து விடுபட்டு, அலுவலக வேலையாக வெளிமாநிலம் வந்தான் சேகர். 
மாமனார் வீட்டில் விட்டுவிட்டு வந்த மனைவிக்கும், தன் வீட்டில் இருக்கும் அம்மாவுக்கும் கைபேசியில் பேச மனமில்லாமல், தனித்தனியே கடிதங்கள் எழுதினான்.
"என் அம்மாவின் மோசமான குணம்தான் உனக்குத் தெரியுமே... இன்னும் கொஞ்சம் காலம்தான் அவர்கள் வாழ்வு. அதுவரை பொறுமையாக இரு' என மனைவிக்கும்,
"என்ன செய்ய? இவளைக் கட்டித் தொலைச்சாச்சு. கொஞ்சநாள் பார்ப்போம். சரி வரவில்லையென்றால் அவள் வீட்டிற்கே விரட்டிவிடுவோம். அதுவரைக்கும் பொறுமையா இருங்க'' என்று அம்மாவுக்கும் எழுதிய கடிதங்களை உறையில் போட்டு தபாலில் சேர்த்துவிட்டு, நிம்மதியாக இருந்தான், கவனக்குறைவாக அம்மாவுக்கு எழுதிய கடிதத்தை மனைவி முகவரிக்கும், மனைவிக்கு எழுதிய கடிதத்தை அம்மா முகவரிக்கும் மாற்றிஅனுப்பியது தெரியாமல்.
ஆர்.சிவானந்தம், கோவில்பட்டி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இவானா டுடே!

த.செ. ஞானவேல் இயக்கத்தில் நானி?

ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு: சென்னையில் தொழிலாளி பலி

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவம்: கொடியேற்றத்துடன் தொடங்கியது!

சென்னையில் எங்கு அதிகபட்ச வெப்பநிலை? - தமிழ்நாடு வெதர்மேன் பதிவு!

SCROLL FOR NEXT