முகப்பு
தினமணி கதிர்

வலி இல்லாத வாழ்க்கை!

ஒவ்வோர் ஆண்டும் தேசிய ஆயுர்வேத தினம் ஒரு குறிப்பிட்ட வகை நோய் குறித்த சிறப்பு தினமாக நடைமுறைப்படுத்தப்படும். நிகழாண்டில் ஆயுர்வேதம் மூலம் வலியைக் குணப்படுத்துவது என்ற மையக் கருத்தை அடிப்படையாகக் கொண்ட

Updated On : 29 ஜனவரி, 2024 at 6:06 PM
பகிர்:

ஒவ்வோர் ஆண்டும் தேசிய ஆயுர்வேத தினம் ஒரு குறிப்பிட்ட வகை நோய் குறித்த சிறப்பு தினமாக நடைமுறைப்படுத்தப்படும். நிகழாண்டில் ஆயுர்வேதம் மூலம் வலியைக் குணப்படுத்துவது என்ற மையக் கருத்தை அடிப்படையாகக் கொண்டு கொண்டாடப்படுகிறது.

இது குறித்து திருநெல்வேலி மாவட்டம் இடைகால், அரசு ஆயுர்வேத மருத்துவர் டாக்டர் அ.முகமது சலீம் கூறியது:

தேசிய ஆயுர்வேத தினம் ஒவ்வோர் ஆண்டும் தீபாவளிக்கு முந்தைய நாள் அறிவிக்கப்பட்டு உலகம் முழுக்க கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த வருடம் கொண்டாடப்படும் தேசிய ஆயுர்வேத தினத்தின் மைய கருத்து P​a‌i‌n Ma‌n​a‌g‌e‌m‌e‌n‌t ‌t‌h‌r‌o‌u‌g‌h A‌y‌u‌r‌v‌e‌d​a என்பதுதான். சுருங்கச் சொன்னால் "வலி இல்லாத வாழ்க்கைக்கு ஆயுர்வேதம் அவசியம்' என்பதுதான் இன்றைய காலகட்டத்துக்கு பொருந்தக்கூடிய விஷயம். 
 வலிகளைக்  குறைப்பது என்பதை விட மறக்க வைக்கத்தான், வலி நிவாரண மாத்திரைகள் பயன்படுகின்றன. இதனால்,  தற்காலிகமாக வலி குறைந்த உணர்வு  ஏற்படுமே தவிர,  நோய்க்கான நிரந்தரத்  தீர்வைத்  தருவதில்லை. 

ஆயுர்வேதம் என்றாலே வலி நிவாரண தைலங்கள் மட்டும்தான் என மக்கள் நினைக்கின்றனர். அது தவறு. ஆனால் வலிகளுக்கான காரணம் தெரியாமலேயே தேய்க்கப்படும் கண்ட கண்ட தைலங்களால் எந்த பலனும் இல்லை. 

ஆயுர்வேத உள் மருந்துகள் இல்லாமல் தேய்க்கப்படும் தைலங்களாலும் எந்த பலனும் இல்லை.
ஆயுர்வேதம் என்றால் மசாஜ் செய்வது மட்டும்தான் எனவும் சிலர் கருதுகின்றனர். ஆயுர்வேதத்தில் பஞ்ச கர்ம சிகிச்சை என்னும் உயரிய சிகிச்சை உள்ளது. இது நோயை வேரில் இருந்து குணப்படுத்தும். பக்க விளைவுகள் இல்லாத நிரந்தர வலி நிவாரணத்தை ஆயுர்வேதம் மட்டுமே தர முடியும். ஆயுர்வேத மருந்துகள் மிகவும் கால தாமதமாக வேலை செய்யும் என்பது தவறு. மிக மிக வேகமாக வேலை செய்யும் அற்புத மருந்துகள் ஆயுர்வேதத்தில் உள்ளன. இன்னொரு முக்கியமான ஒன்று, ஆங்கில மருந்துகளோடு ஆயுர்வேத மருந்துகளையும் தேவை ஏற்பட்டால் பயன்படுத்தலாம். இன்னும் சொல்லப்போனால் பல ஆங்கில மருந்துகள், ஆயுர்வேத மூலிகை 

மூலப்பொருள்களில் இருந்தே தயாரிக்கப்படுகின்றன.  அறுவை சிகிச்சையே இல்லாமல் மூட்டு எலும்பு தேய்மானம், முதுகு தண்டுவட பிரச்னைகளையும் இதன் மூலம் முழுமையாகச் சரி செய்ய முடியும். 
எலும்பு தேய்மான நோய்கள், மூட்டு வலிகள், முடக்கு வாதநோய், கழுத்துவலி, முதுகுத் தண்டுவடநோய்கள், தோள்பட்டை வலி, இடுப்புவலி, இடுப்பு மற்றும் முதுகுத்தண்டுவட நோய்கள், மூட்டுவலிகள், கீல்வாதநோய் வலிகள், இரக்த துஷ்டியால் ஏற்படும் வலிகள், எலும்பு பலவீனம், மனஅழுத்தத்தால் வரக்கூடிய தலைவலி, எலும்புச் சந்திவலி நோய்கள், எலும்பு தசைவலிகள் என அனைத்தையும் ஆயுர்வேதம் மூலம் குணப்படுத்த முடியும்.
அக்னி கர்ம சிகிச்சை என்னும் சிறப்பு சிகிச்சைகள் மூலம் உடனடியாக எல்லா வகையான வலிகளையும் குணப்படுத்த முடியும்.
ரக்தம் வெளியேற்றும் சிகிச்சை மூலம் மோசமான வலிகளை எளிதாக குணமாக்க முடியும். குறைந்த பட்ச தலைவலி முதல் வலிகளில் அதிகபட்ச கேன்சர் வலிகள் வரை குணமாக்கும் அற்புத சிகிச்சை ஆயுர்வேதத்தில் உள்ளது. என வே, வலி நிவாரணிகளை ஒதுக்கி வைத்து விட்டு அரசு மருத்துவமனைகளில் இருக்கும் ஆயுர்வேத மருந்துகளை உட்கொண்டு வலி இல்லாத வாழ்க்கையை அமைப்போம்'' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.