தினமணி கதிர்

ராகவேந்திராவும் ஆட்டோகிராபும்

DIN

ராகவேந்திர ராவுக்கு கடந்த 67 ஆண்டுகளாக கிரிக்கெட் வீரர்களிடமிருந்து புகைப்படத்தில் ஆட்டோகிராப் பெறுவது ஒரு பொழுதுபோக்கு. ஆனால் இவர் எந்த வீரரையும் நேரில் சந்தித்தது கிடையாது. உள்நாடு மற்றும் வெளிநாடுகளைச் சார்ந்த கிரிக்கெட் வீரர்களுக்கு பல நூறு கடிதங்களை எழுதி ஆட்டோகிராப் பெற்றுவிடுவார்.
 இவரிடம் டான் பிராட்மேன், கீத் மில்லர், ஹரோல்ட் லார்வுட், டெனிஸ் காம்டன், சி.கே.நாயுடு, முஸ்டாக் அலி, ஹசாரே, கவாஸ்கர், சச்சின் டெண்டுல்கர், ரிக்கி பாண்டிங், அஜித்வாடேகர் மற்றும் இன்றைய கிரிக்கெட் வீரர்கள் பலரிடமும் ஆட்டோகிராப் பெற்றுள்ளார்.
 ஆட்டோகிராப் கிடைக்க இவர் கூறும் ஐடியா இதுதான்:
 "இந்திய வீரர்களிடம் சுய தபால்தலைகளை ஒட்டிய கவரை அனுப்பி, ஆட்டோகிராப் கேட்பேன். வெளிநாட்டு வீரர்களிடம் சர்வதேச ரிப்ளை கூப்பன்களை அனுப்பிக் கேட்பேன். சிறிது தாமதம் ஆனாலும் அநேகமாக அனைவரிடம் இருந்து ம் ஆட்டோகிராப் வந்துவிடும்'' என்கிறார் ராகவேந்திர ராவ்.
 ஆர்வமுள்ளவர்கள் முயற்சிக்கலாம்!
 -ராஜிராதா
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

காரைக்கால் மாங்கனித் திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை: ஜூன் 21-க்கு ஒத்திவைப்பு

குடிநீா்த் தேவையை கருதியே பவானிசாகா் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறக்கவில்லை: அமைச்சா் சு.முத்துசாமி

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

SCROLL FOR NEXT