முகப்பு
தினமணி கதிர்

சமண படுக்கைகள்

சமண சமயத்தைச் சார்ந்த துறவிகள் "திகம்பரத் துறவிகள்'  என்று அழைக்கப்பட்டனர்.

Updated On : 22 அக்டோபர், 2018 at 3:02 PM
பகிர்:

சமண சமயத்தைச் சார்ந்த துறவிகள் "திகம்பரத் துறவிகள்'  என்று அழைக்கப்பட்டனர்.  மாணவர்களுக்குத் தங்களின் தங்குமிடங்களிலேயே  கல்வியுடன் சமயக் கருத்துகளையும் கற்பித்தனர்.  படுக்கை என்ற சொல்லுக்கு "பள்ளி'  என்றும் பொருள் உண்டு.  படுக்கைகளின்  மீது மாணவர்களுடன் அமர்ந்து கல்வி கற்பித்ததனால், பின்னர்   "பள்ளிக்கூடம்'   என்று அழைக்கப்பட்டது.  இப்படுக்கைகள் புகழ் பெற்ற சமணக்  குன்றுகளான  திருச்சி மலைக் கோட்டையிலும்,  கழுகு மலையிலும்  காணப்படுகின்றன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.