திரைக் கதிர்
தமிழில் அனுஷ்காவுடன் "நிசப்தம்' படத்தில் நடித்துள்ளார் மாதவன். இதற்கிடையே ஹிந்தி, தமிழ், தெலுங்கில் அவர் இயக்கி வரும் "ராக்கெட்ரி' படத்தின் வேலைகளில் இயங்கி வருகிறார்.
தினமணி கதிர்திரைக் கதிர்
தமிழில் அனுஷ்காவுடன் "நிசப்தம்' படத்தில் நடித்துள்ளார் மாதவன். இதற்கிடையே ஹிந்தி, தமிழ், தெலுங்கில் அவர் இயக்கி வரும் "ராக்கெட்ரி' படத்தின் வேலைகளில் இயங்கி வருகிறார்.
தமிழில் அனுஷ்காவுடன் "நிசப்தம்' படத்தில் நடித்துள்ளார் மாதவன். இதற்கிடையே ஹிந்தி, தமிழ், தெலுங்கில் அவர் இயக்கி வரும் "ராக்கெட்ரி' படத்தின் வேலைகளில் இயங்கி வருகிறார். இந்த படத்தில் மாதவன் ஜோடியாக சிம்ரன் நடிக்கிறார். சமீபத்தில் சுட்டுரையில், மாதவன் நடித்த "நளதமயந்தி' படத்தில் இடம்பெறும் ஒரு பாடல் காட்சியை ரசிகர் ஒருவர் பதிவிட்டு இருந்தார். இதைப் பார்த்த மாதவன், ""தமிழ் சினிமாவிலேயே மோசமான டான்ஸர் நான்தான்'' என அதற்குப் பதிவு செய்திருந்தார்.
சிறுநீரகக் கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் நடிகர் பொன்னம்பலம். அவர் மருத்துவமனையில் இருக்கும் விடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியானது. இந்நிலையில் அவர் சிகிச்சைக்குநடிகர் கமல்ஹாசன் உதவி வருவதுடன், அவரின் இரு குழந்தைகளின் கல்விச் செலவையும் ஏற்றுள்ளார். சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சைக்கான மொத்த செலவையும் ரஜினிகாந்த் ஏற்றுள்ளார். இத்தகவலை பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
யுவன் ஷங்கர் ராஜா - நா.முத்துக்குமார் கூட்டணி என்பது இசை ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம். 4 ஆண்டுகளுக்கு முன்பு மறைந்த நா.முத்துக்குமாரின் பிறந்தநாள் கடந்த 12-ஆம் தேதி. இசையமைப்பாளர் யுவன் தனது சுட்டுரைப் பதிவில்...
"நாங்கள் நினைவுகளை உருவாக்கிக் கொண்டிருந்தோம் என்று நாங்கள் உணரவில்லை. நாங்கள் வெறும் பாடல்களை மட்டுமே உருவாக்குவதாக நம்பிக் கொண்டிருந்தோம். இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்' என்று தெரிவித்துள்ளார்.
ஜான் இயக்கத்தில் விஜய், ஜெனிலியா நடித்த படம் "சச்சின்'. இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் குறித்து பேச்சு எழுந்துள்ளது. ஜான் பேசும் போது...
""சச்சின் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகும் வாய்ப்பு குறித்த செய்திகளை அறிவேன். கண்டிப்பாக அப்படி ஒரு படத்தில் விஜய்யைப் பார்க்க நான் மிகவும் விரும்புகிறேன். "சச்சின் 2' படத்தை நான் இயக்கவில்லை என்றால் கூட பரவாயில்லை, வேறு யாராவது இயக்கினால் கூட எனக்கு சம்மதம் தான்'' என ஜான் கூறினார்.
தெலுங்கில் "வெங்கி மாமா' உள்பட சில படங்களில் நடித்தவர் பாயல் ராஜ்புத்.
இவர் கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கும் "இந்தியன் 2' படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடுகிறார் என்றும் இதேபோல் அல்லு அர்ஜுன் நடிப்பில் தெலுங்கில் உருவாகும் "புஷ்பா' படத்திலும் ஒரு பாடலுக்கு ஆடுகிறார் என்றும் தகவல் பரவியது. இதற்கு அவர் பதிலளித்துள்ளார்.
""இந்தியன் 2' படத்திலும் "புஷ்பா' தெலுங்கு படத்திலும் நான் ஒரு பாட்டுக்கு ஆடப்போவதாக சொல்லும் தகவலில் உண்மை கிடையாது. இந்த படங்களுக்காக யாரும் என்னைத் தொடர்பு கொள்ளவில்லை'' என கூறியுள்ளார்.
- ஜி.அசோக்