தினமணி கதிர்

மகிழ்ச்சி!

முக்கிமலை நஞ்சன்

சென்னை மெரினா கடற்கரையின் மணலில் நடந்து கொண்டிருந்தார் ஜே.கிருஷ்ணமூர்த்தி. அவரைப் பார்த்த பிச்சைக்காரன் அவரை நெருங்கி கையை நீட்டினான். தன்னிடம் யாசிக்கிறான்என்பதைப் புரிந்து கொண்டவர் ஜிப்பா, சட்டைப் பையில் இருந்த கைக்குட்டையை எடுத்துக் கொடுத்துவிட்டு நடையைத் தொடர்ந்தார். அவர் கையில் பணம் வைத்துக் கொள்வது இல்லை.

துண்டுத் துணியை மேலும் கீழும் ஊடுருவிப் பார்த்து உதறிக் கொண்ட பிச்சைக்காரணுக்கு பெரும் ஏமாற்றம்.

இந்தக் காட்சியைக் கண்ட ஒருவர் அவனிடம் வந்து கைக்குட்டையை வாங்கிப் பார்த்தார். ஆங்கிலத்தில் "ஜே' என்ற எழுத்து பின்னப்பட்டிருந்தது. மகிழ்ந்து போனவர் பத்து ரூபாய்த் தாளைத் தந்துவிட்டு கைக்குட்டையை எடுத்துக் கொண்டார். ஜே.கிருஷ்ணமூர்த்தியின் பெருமையை அறிந்திருந்ததால் தனக்குக் கிடைத்த உயர்ந்த நினைவுப் பொருளாக எண்ணி மகிழ்ந்தார்.

அன்னிபெசண்ட் அம்மையாரால் வளர்த்து ஆளாக்கப்பட்ட ஜே.கே. பிரம்மஞான சங்கத்தின் முக்கிய நிர்வாகியாகவும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடை மழையால் உயிர் பெற்ற முட்டல் நீர்வீழ்ச்சி!

10 நாட்களில் 8 மலக்குழி மரணங்கள் - தில்லி, உ.பி.யில் அதிர்ச்சி!

பாஜக வந்தால் அமித் ஷா பிரதமராவார்: கேஜரிவால்

அலைகளின் அருகே..

7 மாவட்டங்களுக்கு இன்று அதி கனமழைக்கான ரெட் அலர்ட்!

SCROLL FOR NEXT