முகப்பு
தினமணி கதிர்

சிரி... சிரி... 

""பரத நாட்டியம் பத்தி ஒண்ணுமே தெரியாத அரசியல்வாதியை என் பொண்ணோட பரத நாட்டிய அரங்கேற்றத்துக்கு தலைமை தாங்க கூப்பிட்டது தப்பா போச்சு''

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:37 AM
பகிர்:

""பரத நாட்டியம் பத்தி ஒண்ணுமே தெரியாத அரசியல்வாதியை என் பொண்ணோட பரத நாட்டிய அரங்கேற்றத்துக்கு தலைமை தாங்க கூப்பிட்டது தப்பா போச்சு''
""ஏன், என்னாச்சு ?''
""என் பொண்ணுகிட்ட,  பரத  நாட்டியத்தோட  லெக்ஷ்மணன்  நாட்டியம், சத்ருக்கனன்  நாட்டியம் எல்லாம் கத்துக்கம்மான்னு சொல்லி மானத்தை  வாங்கிட்டாரு "

டீ. என். பாலகிருஷ்ணன்,
சென்னை-91.

""மழையில நனைஞ்சுக்கிட்டு ஏன் அழுதுக்கிட்டே வர்ற?'' 
""மழை கொட்டோ கொட்டுன்னு கொட்டிடுச்சி டாடி''

பொ.பாலாஜிகணேஷ்,
கோவிலாம்பூண்டி.


""சுட்டுப்  போட்டாலும்  இவனுக்கு வாயில அப்பளம்னு சொல்ல வரல''
 ""பொரிச்சுப் போட்டுப் பாரேன்?''

""இவர் ஒரு வாக்கி டாக்கி''
""அப்படின்னா?''
""டாக் பண்ணிக்கிட்டே வாக்கிங் போறவர்''

""திட்ட வாய் இருக்கேன்னு ஒருத்தனைத் திட்டி விட்டேன்''
""அடடே... என்ன ஆச்சு?''
""அடிக்க கை இருக்குன்னு கை ஓங்கிவிட்டான்''

""சார்... உங்க வீட்டுக்குள் திருடன் வர்றான்''
""இப்ப நான் பிசி... அப்புறமா வரச் சொல்லுங்க''

- ஏ. நாகராஜன்,  
பம்மல். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.