முகப்பு
தினமணி கதிர்

சிரி... சிரி...

""நீதிபதி, வந்து உட்கார்ந்த உடனே, டேபிள் மேல ஒங்கி அடித்தாரே... ஏன்?''""வாதாட வந்த வக்கீல் அவருக்கு எதிர்ல உட்கார்ந்து தூங்கிக்கிட்டிருந்தாராம்!''

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:40 AM
பகிர்:


""நீதிபதி, வந்து உட்கார்ந்த உடனே, டேபிள் மேல ஒங்கி அடித்தாரே... ஏன்?''
""வாதாட வந்த வக்கீல் அவருக்கு எதிர்ல உட்கார்ந்து தூங்கிக்கிட்டிருந்தாராம்!''

-விரேவதி,
தஞ்சை.

""நடந்ததையெல்லாம் நினைச்சா எனக்கு மார் வலிக்குது'' 
""நடந்ததையெல்லாம் நினைச்சா கால்தானே வலிக்கும்... மார் எப்படி வலிக்கும்''

""எங்க தலைவர் வாயைத் திறந்தாலே மொத்தமும் பொய்தான்''
""நிஜமாவா ?''
""ஆமாம்... தலைவருக்கு முப்பத்திரண்டு ரெண்டு பல்லும் செட் பல்லு''

""இது புது மாதிரியான செல்போன்''
""நிஜமாவா ?''
""ஆமாம் லஞ்சு டைம்ல யாராவது போன் பண்ணினா தற்சமயம் பசியாக இருக்கிறார்னு வரும்''

""இந்த சீரியல் முடியறதுக்குள்ள நான் பாட்டி ஆகிடுவேன் போலிருக்கு''
""சீரியல்ல உங்க குழந்தையா நடிக்கிற பாப்பா கேட்க வேண்டிய கேள்வியை நீங்க கேட்குறீங்க''

""என்ன உங்க பையன் மொட்டை மாடில போய் உட்கார்ந்துனு சாப்பிடறான் ?''
""அவன் வேலைக்குப் போகாம வீட்டுல உட்கார்ந்து சாப்பிட கஷ்டமா இருக்காம்''

-தீபிகா சாரதி,
சென்னை -5.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.