முகப்பு
தினமணி கதிர்

திரைக்கதிர்

பிரபுதேவா, லாரன்ஸ் ஆகியோரின் வரிசையில், "ஹே சினாமிகா' என்கிற படத்தின் மூலம் இயக்குநராக அவதாரம் எடுத்துள்ளார் பிருந்தா. இப்படத்தில் துல்கர் சல்மான், காஜல் அகர்வால்,அதிதி ராவ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:21 PM
பகிர்:

பிரபுதேவா, லாரன்ஸ் ஆகியோரின் வரிசையில், "ஹே சினாமிகா' என்கிற படத்தின் மூலம் இயக்குநராக அவதாரம் எடுத்துள்ளார் பிருந்தா. இப்படத்தில் துல்கர் சல்மான், காஜல் அகர்வால்,அதிதி ராவ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

--------------------------------------------

இசையமைப்பாளர் டி.இமான் தயாரிப்பாளராக தனது புதிய பயணத்தைத் தொடங்கவுள்ளார். டிஐ புரொடக்ஷன்ஸ் எனும் பெயரில் தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கியுள்ளார். இந்த நிறுவனத்தின் மூலம் தரமான சிறு பட்ஜெட் படங்களைத் தயாரிக்க இருக்கிறார் இமான்.

--------------------------------------------

நடிகை தீபிகா படுகோனே இன்ஸ்டாகிராம், சுட்டுரையில் மிகவும் பரபரப்பாக இயங்கி வருகிறார். இந்நிலையில் தன்னுடைய இன்ஸ்டாகிராம், சுட்டுரைப் பதிவுகள் அனைத்தையும் முற்றிலும் அழித்துள்ளார். இது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

--------------------------------------------

அஜித் நடிப்பில் "என்னை அறிந்தால்' படத்தின் மூலம் தமிழில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார் அனிகா. தற்போது ரசிகர்களைக் கவர்வதற்கு அவ்வப்போது மாடர்ன் உடையில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இதற்கு எதிர்மறை கருத்துகள் அதிகமாகப் பதிவாகி வருகின்றன.

--------------------------------------------

தமிழில் "அண்ணாத்த', "சாணிக்காயிதம்' தெலுங்கில் "குட்லக் சகி', "ரங்தே', "ஐனா இஷ்டம் நுவ்வு', "சரக்குவாரி பாட்டா' ஆகிய படங்களிலும், மலையாளத்தில் "மரக்காயர்' படத்திலும் நடித்து வருகிறார் கீர்த்தி சுரேஷ்.

--------------------------------------------

திலீப்குமார் இயக்கத்தில் ஜிப்ரான் இசையமைப்பில் மாதவன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், ஷிவதா மற்றும் பலர் நடித்து வெளிவந்துள்ள படம் "மாறா'. ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ள இப்படம், வெகுவாக ரசிகர்களைக் கவரவில்லை. படத்தின் ட்ரெய்லர் ஒரு கோடி பார்வையாளர்களைக் கடந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

--------------------------------------------

"மின்னலே', "தூள்', "பகவதி, "ஆயிரத்தில் ஒருவன்' படங்களில் கலக்கியவர் ரீமா சென். தொழிலதிபர் ஷிவ் கரன்சிங் என்பவரைக் கரம் பிடித்து சமீபத்தில் வெற்றிகரமாக எட்டாவது திருமண ஆண்டைக் கொண்டாடியுள்ளார் ரீமா. அவருக்கு ருத்ரவீர் சிங் என்ற மகன் இருக்கிறார்.

--------------------------------------------

ஜெயம் ரவி நடித்த "இதயத் திருடன்' படத்தில் நடித்த காம்னா, தொடர்ந்து தமிழில் "மச்சக்காரன்', "ராஜாதி ராஜா', "காசேதான் கடவுளடா' போன்ற படங்களில் நடித்தார். பெங்களூருவில் வசித்து வரும் காம்னா, இரண்டு பெண் குழந்தைகளுக்கு அம்மா. இப்போதும் உடற்பயிற்சியில் கலக்குகிறார்.

முழு கட்டுரையைப் படிக்க →