தினமணி கதிர்

சிரி...சிரி...

""வகுப்புல மாணவர்கள் " தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே 'ன்னு பாடினதுக்கு வாத்தியார் ஏன் திட்றார்? ''""அவர் அசந்து தூங்கும் போது அப்படி பாடினாங்களாம்''

DIN

""வகுப்புல மாணவர்கள் " தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே 'ன்னு பாடினதுக்கு வாத்தியார் ஏன் திட்றார்? ''
""அவர் அசந்து தூங்கும் போது அப்படி பாடினாங்களாம்''

""கம்ப்யூட்டரைப் பத்தி அந்த காலத்துலயே படம் எடுத்திருக்காங்க''
""அப்படியா... படத்தோட பேரு?''
""சர்வர் சுந்தரம்''

அப்ரோஸ் பானு,
சென்னை.

" ஏன்டி மது... உன் லவ்வர் சமீபகாலமா உன்னைச் சந்திக்கிறதை தவிர்க்கிறாரே, ஏன்னு கேட்டியா?''
""கேட்டதற்கு "மதுவை தவிர்ப்போம்'னு எல்லோரும் சொன்னாங்களாம்''

""கரோனா கால ஆசிரியர்யார் தெரியுமா?''
""தெரியலையே, நீயே சொல்லு?''
""ஆன்லைன் கிளாசுக்கு உதவும் "செல்ஃபோன்' தான்''

முத்தூஸ்,
தொண்டி.

""எவ்வளவுதான் கதவை தட்டினாலும், ஆள் யாருன்னு தெரியாமல் நீ கதவை திறக்க மாட்டியே?''
""திறக்காமல் தான் இருந்தேன்... ஆனா அதுல ஒருத்தன் "உங்க வீட்டுல எத்தனை ஓட்டு சார்?'ன்னு கேட்டதும் ஜெர்க் ஆயிட்டேன் சார்''

""உங்க கேரியர் உங்களுக்குப்பிடிச்சிருக்கா சார்?''
""ரொம்ப பெரிசாவும் இல்லாமல்,சின்னதாவும் இல்லாமல், நார்மல் சைஸ்ல
5-அடுக்கு உள்ள கேரியர் எப்படிபிடிக்காமல் போகும்?''

-வி. ரேவதி,
தஞ்சை.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

2025-ல் அதிகம் பார்க்கப்பட்ட டிரைலர் இதுதான்!

”சிம்ம ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

50% குறைவான போட்டிகளில் ரொனால்டோவின் சாதனையை சுக்குநூறாக்கிய கால்பந்து வீரர்!

கீழடி அருங்காட்சியகத்தை பிரதமர் பார்வையிட வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் அழைப்பு!

பெண் மீது மோதி கவிழ்ந்த ஆட்டோ! 8 பேர் காயம்! | Selam

SCROLL FOR NEXT