கோப்புப்படம் 
தினமணி கதிர்

சென்னை மாநகராட்சி!

இந்தியாவிலேயே முதன்முதலாக உருவான மாநகராட்சி சென்னை மாநகராட்சிதான். 1688 }ஆம் ஆண்டு செப்டம்பர் 29}ஆம் தேதி உருவானது.

DIN

இந்தியாவிலேயே முதன்முதலாக உருவான மாநகராட்சி சென்னை மாநகராட்சிதான். 1688 }ஆம் ஆண்டு செப்டம்பர் 29}ஆம் தேதி உருவானது.

தொடக்கத்தில் மாநகராட்சி செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில்தான் இயங்கி வந்தது. பின்னர் சில காலம் சென்னை எர்ரபாலு செட்டித் தெருவில் இயங்கி வந்தது. அதற்குப் பின்பு ரிப்பன் பிரபு ஆட்சியின் போதுதான் தற்போது இயங்கி வரும் இடத்தில் அதற்கென்று கட்டடம் கட்டப்பட்டது. எனவேதான் அதற்கு ரிப்பன் பில்டிங் எனப் பெயரிடப்பட்டது.

தொடக்கத்தில் செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில் இருந்து பத்து கிலோ மீட்டர் சுற்றளவுதான் மாநகராட்சிக்குட்பட்டதாக இருந்தது. பின்னர் அது விரிவுப்படுத்தப்பட்டது.

இன்றைக்கு கவுன்சிலர்கள் என்றழைக்கப்படுபவர்கள் ஆரம்ப காலத்தில் " ஆல்டர்மேன்' என்று அழைக்கப்பட்டனர். ஆரம்ப காலத்தில் பனிரெண்டு ஆல்டர்மேன்களே இருந்தனர்.

சென்னையில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டபோது பெத்து நாயக்கன் பேட்டை அருகில் ஏழு கிணறுகள் தோண்டப்பட்டு அவற்றிலிருந்து குழாய்கள் மூலம் நீர் வழங்கப்பட்டது. அதனால்தான் அந்தப் பகுதி இன்று வரை ஏழு கிணறு என்றே அழைக்கப்படுகிறது.

சென்னை மாநகராட்சியின் முதல் பெண் மேயர் தாரா செரியன். இரண்டாவது பெண் மேயர் காமாட்சி ஜெயராமன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழறிஞா் சீகன்பால்கு நினைவு மணிமண்டபம் கட்ட அடிக்கல் நாட்டு விழா

தங்கம் வெல்லும் வாய்ப்பை சீனாவிடம் நழுவவிட்ட இந்தியா! சாத்விக், சிராக் இணைக்கு வெண்கலம்!

இதற்காக ஒரு மாதத்துக்கும் மேலாக காத்திருந்தோம்; இலங்கை தொடருக்கு முன்பாக ஹர்மன்பிரீத் உற்சாகம்!

மதச்சார்பின்மை சொல்லைக் கேட்டாலே வேப்பங்காயாக கசக்கிறது பாஜகவுக்கு: முதல்வர் ஸ்டாலின்

வட மாநிலங்களில் காற்று மாசு: மலைப் பிரதேசங்களுக்குப் படையெடுத்த சுற்றுலாப் பயணிகள்!

SCROLL FOR NEXT