தினமணி கதிர்

திரைக் கதிர்

நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்து சினிமாவுக்கு வந்தவர் ரக்ஷன்.  "கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'  படத்தின் மூலம் பரவலாக வரவேற்பு பெற்றவர்.

தினமணி

நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்து சினிமாவுக்கு வந்தவர் ரக்ஷன்.  "கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'  படத்தின் மூலம் பரவலாக வரவேற்பு பெற்றவர். இப்போது இவர் கதாநாயகனாக அறிமுகமாகவுள்ளார்.  உணர்வுபூர்வமான காதல், நட்பு, உறவுகளை மையமாகக் கொண்டு, அனைவரும் ரசிக்கும் கமர்ஷியல் பொழுதுபோக்கு படமாக இப்படம் உருவாகிறது. இரா கோ யோகேந்திரன் கதை எழுதி இயக்குகிறார்.  பர்ஸ்ட் லுக்,  டீசர் குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகிறது. 

விஜய், ராஷ்மிகா மந்தனா நடித்து வரும் 'வாரிசு' படத்தின் படப்பிடிப்பு சென்னையில் கோகுலம் ஸ்டூடியோவில் மும்முரமாக நடந்து வருகிறது. இன்னும் சில நாள்களில் இரண்டாவது கட்ட படப்பிடிப்பு நிறைவடைகிறது. இப்போது சரத்குமார், குஷ்பு உள்பட, அனைத்து நடிகர்களின் காட்சிகளை எடுத்து வருகிறார்கள். இதனைத் தொடர்ந்து மூன்றாம் கட்ட படப்பிடிப்பையும் சென்னையிலோ அல்லது ஹைதராபாத்திலோ எடுக்கத் திட்டமிட்டு வருகின்றனர்.

இயக்குநர் ஷங்கரின் மகள் நடிக்க வந்ததை போல, சுந்தர்.சி. வீட்டிலிருந்தும் ஒரு ஹீரோயின்  வருகிறார்.  குஷ்பு - சுந்தர்.சி.யின் மூத்த மகள் அவந்திகா சினிமாவில் நடிக்க இருக்கிறார்.  லண்டனில் படித்தவர், இப்போது சினிமாவிற்காக நடிப்பு, நடனம் இரண்டையும் கற்று வருகிறார். மகள் அவந்தியை தங்கள் பேனரிலேயே அறிமுகப்படுத்தலாமா அல்லது வேறு தயாரிப்பு நிறுவனத்தின் படத்தில் நடிக்க வைக்கலாமா என சுந்தர்.சி யோசித்து வருவதாகவும் தகவல்.

நடிகை சுகன்யாவின் மகளை நடிக்க வைக்க முயற்சி நடக்கிறது. பா.ரஞ்சித் தயாரிக்கும் ஒரு படத்தில் அவரை நடிக்க வைக்க முடிவு செய்திருக்கிறார்கள். சுகன்யாவின் மகள் பரதநாட்டியம் பயின்றவர் என்பதாலும், அப்படி ஒரு கேரக்டர் படத்திற்குத் தேவைப்படுவதாலும் அவரை அணுகியிருக்கிறார்கள்.  அதேபோல கெளதமியின் மகளைத் தேடியும் சினிமா வாய்ப்புகள் குவிகின்றன என்பதால், அவர் வீட்டிலிருந்தும் நல்ல தகவல் வரவிருக்கிறது.

மூன்று மாதங்களுக்கு முன்பு வரை  விஜயகாந்தின் உடல்நிலை முன்னேற்றம் அடைந்திருந்தது. சமீப காலங்களில் அவரது உடல்நிலை அவ்வளவு சரியில்லாமல் இருப்பதால் கவலையில் இருக்கிறார்கள் குடும்பத்தினர். உடல்நிலை தேறி வருவதும் பிறகு சற்று உடல்நலம் குன்றி விடுவதுமாக மாறி மாறி தென்படுகிறதாம். இதனால் அவரை மறுபடியும் அமெரிக்கா அழைத்துச் செல்லவும் யோசித்து வருகிறார்கள். இதற்கிடையில் மூத்த மகனுக்குத் திருமணம் செய்து வைக்க முயற்சி நடக்கிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வங்கதேசம்: ஹிந்து இளைஞா் கொலையில் 7 போ் கைது

டாஸ்மாக் பணியாளா் பிரச்னைக்கு தீா்வு காண முதல்வா் பேச்சு நடத்த வேண்டும்: கு.பாலசுப்ரமணியன்

ஹிஸ்புல் முஜாஹிதீன் தலைவருக்கு எதிராக ஜாமீனில் வெளிவர இயலாத கைது ஆணை!

பல் மருத்துவப் படிப்பில் நீட் தகுதியை குறைக்கும் அதிகாரம் மாநில அரசுக்கு இல்லை: உச்சநீதிமன்றம்

நாகையில் பாய்மரப் படகு பயிற்சி மையம்: உதயநிதி தொடங்கிவைத்தாா்

SCROLL FOR NEXT